2025 ஆம் ஆண்டு தொடங்கியதிலிருந்து தற்போது வரை தங்கத்தின் விலை வரலாறு காணாத உச்சத்தை எட்டி இருக்கிறது. பெரும்பாலான மிடில் கிளாஸ் மக்களுக்கு ஒரே சமயத்தில் ஒரு பெரிய அளவிலான தொகையை கொடுத்து தங்க நகை வாங்குவது என்பது முடியாத காரியம். இதனால் தான் பெரும்பாலான குடும்பத் தலைவிகள் நகைசீட்டு போடுவதில் ஆர்வம் காட்டுகிறார்கள்.
மாதம் தோறும் ஒரு குறிப்பிட்ட தொகையை நம்பிக்கையான ஒரு நகைக்கடை நிறுவனத்தில் நாம் சீட்டுத் தொகையாக செலுத்திக் கொண்டே வர வேண்டும். நாம் சீட்டு தொகை செலுத்தக்கூடிய அந்த நாளில் தங்கத்தின் விலை எவ்வளவு என்பதற்கு ஏற்ப நாம் செலுத்திய பணத்திற்கு ஏற்ப தங்கம் நம்முடைய கணக்கில் வரவு வைக்கப்படும்.

தங்கத்தின் மதிப்பு வரலாறு காணாத உச்சத்தை எட்டும் போதெல்லாம் தங்க நகை சீட்டு போட்டவர்கள் பெருமளவிலான லாபம் பார்க்கிறார்கள். அந்த வகையில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தில் இருந்து தங்க நகை சீட்டு போட்ட ஒரு நபர் 1 லட்சம் ரூபாய் வரை சேமித்திருக்கிறார்.
தங்கத்தை நகையாக தான் வாங்க வேண்டும் என்ற கட்டாயத்தில் இருப்பவர்களுக்கு எல்லாமே நகைச்சீட்டுகள் சிறந்த வாய்ப்பினை தருகின்றன. ஏனெனில் நகைச்சீட்டு போட்டு தங்க நகை வாங்கும் போது செய்கூலி சேதாரம் செலுத்த வேண்டிய தேவையில்லை. இதுவே நமக்கு பல ஆயிரங்களை மிச்சப்படுத்தி தந்துவிடும்.
பெரும்பாலான நகைக்கடைகளில் 11 மாத சீட்டு கட்டினாலே போதும் 12 வது மாதம் நாம் அந்த பணத்திற்கு செய்கூலி சேதாரம் இல்லாமல் நம் கணக்கில் வரவு வைக்கப்பட்ட தங்கம் கிராமிற்கு ஏற்ப நமக்கு விருப்பமான நகையை வாங்கிக் கொள்ளலாம்.
கடந்த ஆண்டு செப்டம்பரில் மாதம் தோறும் 20,000 ரூபாய் நகை சீட்டு போடத் தொடங்கிய ஒரு நபர் இந்த 11 மாதத்தில் மொத்தம் 2,20,000 ரூபாயை நகை சீட்டுக்கான பணமாக செலுத்தி இருப்பார். ஒவ்வொரு மாதமும் அவர் செலுத்திய தொகையானது அன்றைய நாளின் தங்க விலைக்கு ஏற்ப கிராம்களாக அவருடைய கணக்கில் வரவு வைக்கப்பட்டிருக்கும். அப்படி பார்க்கும்போது இவர் செலுத்திய 2.20 லட்சம் ரூபாய்க்கு 27.4 கிராம் தங்கம் அவர் கணக்கில் சேர்ந்துள்ளது.
இன்று ஒரு கிராம ஆபரணத் தங்கம் 10,220 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதே நபர் நகைச்சீட்டு போடாமல் கடைக்கு சென்று 27.4 கிராம் தங்கத்தை வாங்க வேண்டும் என்றால் 2,80,000ஐ தங்கத்திற்காக மட்டுமே செலவிட வேண்டி இருக்கும். ஆனால் அதை அவர் 2,20,000 ரூபாய்க்கே வாங்குகிறார். அந்த வகையில் தங்கம் விலை உயர்ந்தாலும் நகை சீட்டு மூலம் இவர் 60000 ரூபாயை சேமித்துள்ளார்.
சீட்டு போட்டு நகை வாங்குவதால் செய்கூலி சேதாரம் இல்லை, இவர் வாங்கும் நகைக்கு 18% சேதாரம் என வைத்து கொண்டால் கூட 50,000 ரூபாயை சேமிக்கலாம். எனவே இந்த நகைச்சீட்டின் மூலம் இந்த நபர் 27.4 கிராம் தங்கத்தை 2.20 லட்சத்திற்கே வாங்கி இருக்கிறார் சுமார் 1 லட்சம் ரூபாய்க்கும் மேல் சேமித்திருக்கிறார்.
நகைச்சீட்டுகள் எந்த ஒரு அரசு அமைப்பாலும் அங்கீகரித்து கட்டுப்படுத்தப்படுவதில்லை. எனவே சீட்டு போடும் போது நம்பகமான கடையில் சீட்டு போடுவதும் நகை வாங்கும் போது ஹால்மார்க் குறியீட்டை பார்த்து வாங்குவதையும் உறுதி செய்து கொள்ளுங்கள்.
Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Goodreturns.in அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் "நாங்கள்" என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.
More From GoodReturns

தங்கம், வெள்ளி விலை லைவ் அப்டேட்ஸ்: தங்கம் விலை இனி குறையுமா? உயருமா?

கோவை மக்களே இன்று தங்க நகை வாங்கும் பிளான் இருக்கா? இது தான் உங்க ஊர் கோல்டு ரேட்!!

தங்கம், வெள்ளி விலை சரிவு: ஈரான் போர் தீவிரமடைந்தால் இன்னும் தங்கம் விலை குறையுமா?

ரூ.10 கோடியை ரூ.100 கோடியாக மாற்றிய நடிகை மீனா..!! செம ஐடியாவா இருக்கே..!!

Gold price today: தங்கம் வாங்க கடைக்கு போறீங்களா? சென்னை, கோவை, மதுரையில் ஷாக் கொடுக்கும் நிலவரம்?

குறையும் தங்கம் விலை ; உயரும் கச்சா எண்ணெய் விலை - ஈரான் பேச்சுவார்த்தை தோல்வியால் எல்லாமே மாறுது!!

போனது போகட்டும்!! நாளை தமிழ் புத்தாண்டு நாளில் இதை எல்லாம் தொடங்குங்க வாழ்க்கை செமயா மாறும்!!

கோயம்புத்தூரில் தங்கம் விலை என்ன? இன்று நகை வாங்க சரியான நேரமா?

உங்க பணத்தை இரட்டிப்பாக்கும் போஸ்ட் ஆபிஸ் முதலீட்டு திட்டம்!! ரூ.1000 கூட முதலீடு செய்யலாம்!!

தங்கத்தை ஓரம் கட்டும் வெள்ளி! உலக நாடுகளின் பார்வை இப்போது இந்தியா பக்கம்..ஏன் இந்த மாற்றம்?

3 ஆண்டுகளில் 740% வளர்ச்சி அடைந்த மல்டிபேக்கர் பங்கு: இப்போது முதலீடு செய்யலாமா?



Click it and Unblock the Notifications