இந்தியாவில் புதிய வருமான வரி விதிப்பின் கீழ் 0%, 5%, 10%, 15%, 20%, 25%, 30% எனப் பல பிரிவுகளில் வரி செலுத்தினாலும், மறைமுக வரி மூலம் அதிகப்படியான வரியை அரசுக்கு செலுத்தி வருகிறோம்.
ஆனால் மக்கள் வருமான வரி விதிப்புக்குக் கொடுக்கும் முக்கியத்துவத்தை மறைமுக வரிக்குக் கொடுப்பது இல்லை. உண்மையைச் சொல்ல வேண்டும் என்றால் மறைமுக வரியை பெரிய அளவில் கண்டுகொள்வது இல்லை.
சாமானிய மற்றும் நடுத்தர மக்களுக்கு எப்போதும் வரி என்பது கூடுதல் சுமை தான், அப்படி நாம் 1000 ரூபாய்க்கு நேரடி மற்றும் மறைமுக வரி மூலம் அரசுக்கு எவ்வளவு செலுத்துகிறோம் தெரியுமா..?
1000 ரூபாய்
வங்கியில் 1000 ரூபாயை ஒரு வருடம் முழுமையாக டெபாசிட் செய்தால் 5.50 சதவீத வட்டியில் 55 ரூபாய் வருமானமாகக் கிடைக்கும்.
இதுவே வங்கியில் 1000 ரூபாயை ஒரு வருடத்திற்குக் கடனாக பெற்றால் 9 சதவீத வட்டியில் நாம் வங்கிக்கு 90 ரூபாய் செலுத்த வேண்டும்.
இப்படி 1000 ரூபாய்க்கு ஹோட்டல்களில் குடும்பத்துடன் சாப்பிட்டால் 18 சதவீதம் ஜிஎஸ்டி வரி விதிப்பு மூலம், நாம் மத்திய அரசுக்கு 180 ரூபாய் செலுத்த வேண்டும்.
ஜிஎஸ்டி வரி
அப்படியானால் 1000 ரூபாய் விலை கொண்ட ஒரு பொருளை வாங்க வேண்டும் என்றால் சாமானிய மக்கள் 180 ரூபாய் ஜிஎஸ்டி வரியுடன் சேர்ந்து 1180 ரூபாய் சம்பாதித்தால் மட்டுமே, அந்த 1000 ரூபாய் மதிப்புக் கொண்ட பொருளை வாங்க முடியும்.
ஆனால் விஷயம் இதோடு நிற்கவில்லை என்பது தான் பெரும் பிரச்சனை.
வருமான வரி விதிப்பு
நீங்கள் 20 சதவீதம் வருமான வரி விதிப்புப் பிரிவில் இருந்தால் அதாவது வருடத்திற்கு 5 முதல் 10 லட்சம் ரூபாய் வரையிலான வருமானம் பெறும் நபராக இருந்தால் உங்களுடைய வருமானத்திற்கு 20 சதவீதம் வரி செலுத்த வேண்டும் என்பதை மறந்துவிடாதீர்கள்.
வரி மற்றும் செஸ்
அப்படிப் பார்க்கும் போது நீங்கள் 1486.15 ரூபாய் சம்பாதித்தால் மட்டுமே 1000 ரூபாய் மதிப்புகொண்ட பொருளை வாங்க முடியும். புரியவில்லையா.. நீங்கள் 1486.15 ரூபாய் சம்பாதித்தால் 20 சதவீதம் வருமான வரியாக 297.23 ரூபாயும், வருமான வரியில் 3 சதவீதம் செஸ் வரியாக 8.92 ரூபாயை மத்திய அரசுக்கு நேரடியாக வரி செலுத்த வேண்டும்.
486.15 ரூபாய் வரி
இதன் மூலம் 1000 மதிப்புகொண்ட ஒரு பொருளை வாங்க வேண்டும் என்றால் 180 ரூபாய் ஜிஎஸ்டி வரி, 297.23 ரூபாய் வருமான வரி, 8.92 ரூபாய் செஸ் என மொத்தம் 486.15 ரூபாய் தொகையை வரியாக மட்டுமே செலுத்த வேண்டும்.
48.6% நேரடி மற்றும் மறைமுக வரி
1000 ரூபாய் பொருளை வாங்க வேண்டும் என்றால் நடுத்தர மக்கள் 486.15 ரூபாய் வரி அதாவது 48.6 சதவீதம் அளவில் நேரடி மற்றும் மறைமுக வரியில் விதிப்பில் வாங்க வேண்டிய நிலை தான் தற்போது இந்தியாவில் உள்ளது. இதை டிவிட்டரில் தமிழ்நாடு மாநில வளர்ச்சிக் கொள்கை கவுன்சில்-ன் துணை தலைவர் ஜெயரஞ்சன் புகைப்படமாகப் பகிர்ந்துள்ளார்.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!



Click it and Unblock the Notifications