சென்னை: சர்வதேச நிதி சூழல் காரணமாக தங்கத்தின் விலை கணிசமான அளவு உயர்ந்துள்ளது. குறிப்பாக கடந்த மூன்று மாத காலத்திலேயே தங்கத்தின் விலை வரலாறு காணாத உச்சத்தை எட்டி இருக்கிறது. கடந்த இரண்டு நாட்களாக தங்கத்தின் விலை குறைந்திருந்தாலும். கடந்த மூன்று மாதங்களில் பல மடங்கு உயர்ந்து விட்டது.
சென்னையில் ஜனவரி 1ஆம் தேதி அன்று 24 கேரட் கொண்ட ஒரு கிராம் தங்கத்தின் விலை 7,796 ரூபாய் என இருந்தது அதுவே தற்போது அதுவே ஏப்ரல் 5ஆம் தேதி 9,065 ரூபாய் என உயர்ந்திருக்கிறது. தங்கத்தின் விலை தொடர்ந்து வளர்ச்சி பாதையிலேயே இருந்து வருவதையே இது காட்டுகிறது. தங்கத்தின் விலை உயர்ந்திருக்கும் இந்த சூழலை பயன்படுத்தி கொண்டு நம் கைவசம் இருக்கும் பழைய தங்கத்தை விற்பனை செய்யலாமா அவ்வாறு விற்பனை செய்யும் போது நாம் வரி செலுத்த வேண்டுமா என சந்தேகம் எழும். அது குறித்து நாம் இந்த கட்டுரையில் விரிவாக தெரிந்து கொள்ளலாம்.

பைனான்சியல் எக்ஸ்பிரஸ் தளத்தில் ஒரு நபர் தன் தாத்தாவால் வாங்கப்பட்ட நகையை விற்பனை செய்ய போவதாகவும் அதற்கு வரி இருக்கிறதா என்றும் எழுப்பியுள்ள கேள்விக்கு நிதித்துறை சார்ந்த நிபுணர் ஒருவர் பதில் தந்திருக்கிறார். அதில் தங்க நகைகளின் விற்பனைக்கு மூலதன ஆதாயங்கள் என்ற பிரிவின் கீழ் வரி விதிக்கப்படும் எனக் கூறுகிறார். இது உங்கள் தாத்தாவால் வாங்கப்பட்ட நகை என்பதால் இது மூலதன சொத்தாக கருதப்படும் என கூறியுள்ளார். மேலும் இது 2001 ஏப்ரல் 1ஆம் தேதிக்கு முன்னர் வாங்கியிருந்தால், 2001 ஏப்ரல் 1ஆம் தேதி நிலவரப்படி நியாயமான சந்தை மதிப்பின் அடிப்படையில் அதனை வாங்கியதற்கான செலவு தீர்மானிக்கப்படும் என கூறியுள்ளார்.
நாம் வாங்கிய தங்கத்தை 24 மாதங்களுக்குள் விற்பனை செய்தால் அதற்கு குறுகிய கால மூலதன ஆதாய வரியும் , 24 மாதங்களுக்கு மேல் விற்பனை செய்யும் போது நீண்ட கால மூலதன ஆதாய வரியும் விதிக்கப்படும். அந்த வகையில் இந்த நபர் தன்னுடைய தாத்தா வாங்கிய நகையை தான் தற்போது விற்பனை செய்கிறார் எனும் போது அவருக்கு நீண்ட கால மூலதன ஆதாய வரி விதிக்கப்படும் என குறிப்பிட்டுள்ளார்.
இந்த வரியானது
விற்பனை விலை - 2001 ஏப்ரல் ஒன்றாம் தேதி நிலவரப்படி இந்த நகையை வாங்கியதற்கான செலவு = நீண்ட கால மூலதன ஆதாய வரி
என்ற ஃபார்முலாவின் படி கணக்கிடப்படும். இந்தியாவில் நீண்ட கால மூலதன ஆதாய வரி என்பது 12.5% ஆக விதிக்கப்படுகிறது. இத்துடன் செஸ் வரியும் விதிக்கப்படுகிறது. ஒருவேளை அவருடைய தாத்தா இந்த நகையை வாங்கியதற்கான ரசீதுகள் இல்லை என்றால் பதிவு செய்யப்பட்ட நகை மதிப்பீட்டாளர் இந்த நகையை மதிப்பீடு செய்து ரசீது வழங்கலாம் என்றும் அவர் கூறுகிறார்.
நகையை வாங்கிய 24 மாதங்களுக்குள் விற்பனை செய்கிறோம் எனும் போது அதற்கு குறுகிய கால மூலதன ஆதாய வரி விதிக்கப்படுகிறது. குறிப்பிட்ட அந்த நபர் எந்த வருமான வரி விகிதத்திற்குள் வருகிறாரோ அதன் அடிப்படையில் வரி கணக்கீடு செய்யப்படும். அந்த நகையை விற்பனை செய்து நீங்கள் சொத்து வாங்குகிறீர்கள் எனும் போது வருமான வரி சட்டத்தின் பிரிவு 54 எஃப்-ஐ பயன்படுத்தி வரி விலக்கு கோரலாம் என நிபுணர்கள் கூறுகின்றனர்.
More From GoodReturns

ஈரான் போர் குறித்த டிரம்பின் ஒற்றை அறிவிப்பு..!! தாறுமாறாக சரிந்த தங்கம் விலை..!!

மதுரையில் தங்கம் விலை சரிந்தது: இன்று நகை வாங்கலாமா? மேலும் விலை குறையுமா?

தங்கம் விலை ஏற்ற இறக்கம் குறித்து கவலையே வேண்டாம்: இப்படி முதலீடு செஞ்சா லாபம் கொட்டும்!!

தங்கம் விலையில் நடந்த திடீர் டிவிஸ்ட்!! 6 மணி நேரத்தில் நடந்த அதிரடி மாற்றம்!!

தங்கம் விலையேற இதுதான் காரணமா? 23 மாதங்களாக தொடரும் வேட்டை!அமெரிக்காவையே ஓரங்கட்டிய நாடுகள்? ஏன்?

தங்கம் விலை: 11 நாட்களில் 5 நாட்கள் விலை ஏறி இருக்கு!! அப்போ அடுத்த வாரம் என்ன ஆகும்?

ஈரான் போர் நிறுத்தம்: உயர்ந்தது தங்கம் விலை; சரிந்தது கச்சா எண்ணெய் விலை!! ஓவர் நைட்டில் எல்லாமே மாறியது!!

மதுரையில் தங்கம் விலை அதிரடி சரிவு: சாமானிய மக்கள் மகிழ்ச்சி!!

எல்லாம் காலியாக போகுது.. தங்கம், பிட்காயின் தான் இனி ராஜா! ராபர்ட் கியோசாகியின் பகீர் எச்சரிக்கை!

குறைந்த விலையில் தங்கம் வாங்க ஆசையா?18K vs 22K - அட்சய திருதியையில் எது வாங்குவது புத்திசாலித்தனம்?

தங்கம், வெள்ளி விலை லைவ் அப்டேட்ஸ்: இனி வரும் நாட்களில் விலை ஏறுமா? இறங்குமா?



Click it and Unblock the Notifications