கிசான் கிரெடிட் கார்டு யோஜனா என்பது இந்தியா முழுவதும் உள்ள விவசாயிகளுக்குக் குறுகிய காலக் கடன் வழங்கும் திட்டமாகும்.
பயிர் சாகுபடி, அறுவடை மற்றும் அவர்களின் விளைபொருட்களைப் பராமரிக்கும் போது விவசாயிகள் அனுபவிக்கும் எந்தவொரு நிதிக் பற்றாக்குறையைத் தீர்க்கும் முயற்சியில் இது ஆகஸ்ட் 1998 இல் தொடங்கப்பட்டது.
கிசான் கிரெடிட் கார்டு மூலம் விவசாயிகளுக்குக் குறைந்த வட்டி விகிதத்தில் கடன் வழங்குவதற்காக அரசாங்கத்தால் தொடங்கப்பட்டது. இத்திட்டத்தின் முழுப் பயன் என்ன..? யாரெல்லாம் வாங்க முடியும்..? என்பதை முழுமையாகப் பார்ப்போம்.
விவசாயிகள்
கடன் மற்றும் நிதியுதவியைப் பெற, விவசாயிகள் அவர்களது நிலத்தின் உரிமையை உறுதி செய்யும் ஆவணங்களுடன் வங்கிக் கிளைக்கு நேரடியாகக் கொண்டு சென்றால் மட்டுமே கடன் பெற முடியும். இத்திட்டம் மூலம் கடன் பெற இரண்டு முதல் நான்கு வாரங்கள் வரை ஆகும்.
யார் தகுதியானவர்
1. விவசாயிகள் - தனிநபர்/கூட்டு கடன் வாங்குபவர்கள், நில உரிமையாளர் விவசாயிகள்
2. குத்தகைதாரர் விவசாயிகள், வாய்வழி குத்தகை தாரர்கள் & பங்கு பயிர் செய்பவர்கள்
3. குத்தகை விவசாயிகள், பங்கு பயிர் செய்பவர்கள் உள்ளிட்ட விவசாயிகளின் சுய உதவிக் குழுக்கள் (SHGs) அல்லது கூட்டுப் பொறுப்புக் குழுக்கள் (JLGs).
கிசான் கிரெடிட் கார்டு நன்மைகள்
· வங்கியில் இருந்து பணம் எடுக்கப் பாஸ்புக் வழங்கப்படும்.
· 25,000 ரூபாய் கடன் வரம்புடன் வழங்கப்பட்ட காசோலை புத்தகம்.
· விவசாயிகள் விதைகள், உரங்கள், விவசாய உபகரணங்கள் ஆகியவற்றைக் கடன் தொகையுடன் வாங்கலாம்.
· குறைந்த வங்கி வட்டி விகிதங்கள், சராசரியாகச் சுமார் 9% வட்டியில் கடன்
· அதிகபட்ச கடன் வரம்பு 3 லட்சம் ரூபாய்
· நல்ல கடன் மதிப்பெண்கள் உள்ள விவசாயிகளுக்கு அதிகக் கடன் வரம்பு.
· நல்ல கடன் மதிப்பெண்கள் உள்ள விவசாயிகளுக்கு வட்டி விகிதத்தில் மானியங்கள்.
கிசான் கிரெடிட் கார்டுக்கு எப்படி விண்ணப்பிப்பது
ஆர்வமுள்ள நபர்கள் வங்கிக்குச் சென்று தேவையான விண்ணப்பத்தை மற்ற விவரங்களுடன் பூர்த்திச் செய்ய வேண்டும். எச்டிஎஃப்சி வங்கியின் கூற்றுப்படி, "அனுமதிக்கு முன், விண்ணப்பதாரரின் கிரெடிட் ஸ்கோரை வங்கி சரிபார்க்கும். விண்ணப்பதாரரின் நிலம், பயிர் முறை, வருமானம் போன்றவற்றையும் வங்கி சரிபார்க்கும்.
கிசான் கிரெடிட் கார்டின் டிஜிட்டல் மயமாக்கல்
கிசான் கிரெடிட் கார்டு (KCC) கடன்களை ஆரம்பம் முதல் இறுதி வரையில் டிஜிட்டல் மயமாக்கலுக்கான ஒரு பைலட் திட்டம், ரிசர்வ் வங்கியின் கண்டுபிடிப்பு மையம் (RBIH), RBI உடன் இணைந்து இந்த முயற்சியின் ஒரு பகுதியாகச் செயல்படுத்தப்படுகிறது.
More From GoodReturns

TCS நிறுவனத்திற்கு பெரிய கும்பிடு போட்டு வெளியேறும் ஊழியர்கள்!! என்ன நடக்குது?

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

PPF-ல் ஒரு சின்ன மேஜிக்! லட்சக்கணக்கில் லாபம் பார்க்க இந்த ஒரு டிப்ஸ் போதும்!

தங்கம் விலை உச்சத்தில் இருந்து 17% வீழ்ச்சி! அமெரிக்கா கொடுத்த ஷாக் - இப்போ நகை வாங்கலாமா?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

LPG தட்டுப்பாடு: காலை 5 மணி முதல் காத்திருந்தாலும் கேஸ் இல்லை!! பெங்களூருவில் மோசமாகும் சூழல்!!



Click it and Unblock the Notifications