இந்தியாவில் வீடு வாங்குவது, தொழில் தொடங்குவது, கல்விக்காக கடன் வாங்குவது என பல்வேறு தேவைகளுக்காக கடன் வாங்குகிறோம். இருப்பினும் கடன்கள் கிடைப்பது அதிகரித்துள்ளதால் கடன் மோசடி அபாயமும் அதிகரித்துள்ளது. இந்தக் கட்டுரையில் இந்தியாவில் நிலவும் கடன் மோசடிகளை பற்றியும் கடன் வாங்குபவர்கள் தங்களை எவ்வாறு பாதுகாத்துக் கொள்ளலாம்? என்பது பற்றியும் விரிவாகப் பார்ப்போம்.
கடன் மோசடிகளில் இருந்து உங்களை பாதுகாத்துக் கொள்ள என்ன செய்ய வேண்டும் என்பதை பார்ப்போம்.

கடன் வழங்குபவரை விசாரிக்கவும்: எந்தவொரு கடன் வழங்குனரிடமும் கடன் பெறுவதற்கு முழுமையான விசாரணையை மேற்கொள்ளுங்கள். கடன் வழங்குபவர் இந்திய ரிசர்வ் வங்கி (RBI) அல்லது பிற ஒழுங்குமுறை அமைப்புகளால் அங்கீகாரம் பெற்றவரா? என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.
தொடர்பு விவரங்கள்: ஒரு கடன் வழங்குனரின் வட்டி விகிதங்கள், தொடர்பு விவரங்கள், ஏற்கனவே கடன் பெற்றவர்களின் ரிவ்யூகள் ஆகியவற்றை சரிபார்த்த பின்னரே கடன் வழங்குனரை தேர்வு செய்ய வேண்டும்.
கடன் ஆவணங்களைச் சரிபார்க்கவும்: கையொப்பமிடுவதற்கு முன் அனைத்து கடன் ஒப்பந்தங்களையும் ஆவணங்களையும் கவனமாக படிக்கவும். வட்டி விகிதங்கள், திருப்பிச் செலுத்தும் அட்டவணைகள் மற்றும் கூடுதல் கட்டணங்கள் உட்பட அனைத்து விதிமுறைகளையும் நிபந்தனைகளையும் நீங்கள் புரிந்துகொண்டுள்ளீர்கள் என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். ஏதேனும் விவரங்கள் தெளிவாக இல்லை என்றால், கடன் வழங்குபவரிடம் விளக்கம் பெறவும்.
தனிப்பட்ட தகவல்களை கேட்கும் கடன் வழங்குனருடன் எச்சரிக்கையாக இருங்கள்: உங்களுடைய தனிப்பட்ட தகவல்களை கேட்கும் கடன் வழங்குனர்கள் மோசடிக்காரர்களாக இருக்கலாம். பொதுவாக கடன் வழங்குனர்கள் உங்களுடைய விவரங்களையும் கேட்டு தான் கடன் தருவார்கள். ஆதார் கார்டு நம்பர், பான் கார்டு நம்பர் போன்ற விவரங்களை கேட்கலாம்.
ஆனால் அதற்கு ஒரு படி மேலே சென்று பாஸ்வேர்ட் போன்ற விவரங்களை எல்லாம் கேட்டால் அவை மோசடிக்காரரின் யுக்தியாக இருக்கலாம். இது போன்ற விவரங்களை வைத்து மோசடிக்காக பயன்படுத்தலாம். எனவே உங்கள் தனிப்பட்ட தகவல்களான பாஸ்வேர்ட், யுபிஐ பின் நம்பர் போன்ற விவரங்களை ஒருபோதும் கடன் வழங்குநர்கள் கேட்க மாட்டார்கள்.
முன்கூட்டியே செலுத்தப்படும் கட்டணம் குறித்து எச்சரிக்கையாக இருங்கள்: புகழ்பெற்ற கடன் வழங்குனர்கள் கடன் செயலாக்கத்திற்கு முன்கூட்டியே கட்டணங்களை கேட்க மாட்டார்கள். கடனுக்கான ஒப்புதல் வழங்கப்பட்டதற்கு முன் கட்டணம் கேட்கும் எந்த ஒரு கடன் வழங்குனராக இருந்தாலும் சந்தேகத்துடன் கருதப்பட வேண்டும். மோசமான கிரெடிட் வரலாறுகளைக் கொண்டவர்களுக்கு எளிதான கடன்களை உறுதியளிக்கும் சலுகைகளிலும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். ஏனெனில் இவை மோசடி செய்பவர்களால் உருவாக்கப்பட்ட நிறுவனங்களாக இருக்கலாம்.
மோசடி கடன்களின் வகைகள்:
அடையாள திருட்டு: இந்த வகை மோசடியில், குற்றவாளிகள் திருடப்பட்ட தனிப்பட்ட தகவல்களை.. அதாவது பெயர்கள், முகவரிகள் போன்றவற்றை பயன்படுத்தி பாதிக்கப்பட்டவரின் பெயரில் கடன் கேட்கின்றனர். ஏமாற்றுகாரர்கள் கடனை திருப்பிச் செலுத்தும் நோக்கம் இல்லாமல் கடன்களைப் பெறுகின்றனர்.
போலியான ஆவணங்கள்: ஏமாற்றுகாரர்கள் ஆவணங்களை போலியாக உருவாக்கி, கடன் வழங்குபவர்களை ஏமாற்றி, பொய்யான காரணங்களின் கீழ் கடன்களைப் பெறலாம்.
பொன்சி திட்டங்கள்: இந்த திட்டங்களில், ஏமாற்றுகாரர்கள் முதலீடுகளில் அதிக வருமானம் தருவதாக வாக்குறுதி அளித்து, புதிய முதலீட்டாளர்களிடமிருந்து பெறும் நிதியை சட்டபூர்வமான வணிக முயற்சிகளில் முதலீடு செய்வதற்கு பதிலாக முந்தைய முதலீட்டாளர்களுக்கு செலுத்த பயன்படுத்துகின்றனர்.
போலியான கடன்கள்: சில ஏமாற்றுகாரர்கள், வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களிலிருந்து கடன் பெற, இல்லாத நபர்களின் பெயரில் போலியான கடன்களை பெறுகின்றனர்.
More From GoodReturns

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!



Click it and Unblock the Notifications