இந்தியாவில் தங்கம் விலை வரலாறு காணாத உச்சத்தை எட்டி இருக்கிறது . தங்கத்தின் விலை உயர்வு சாமானிய மக்களுக்கு தங்க நகைகளை எட்டாக்கனியாக மாற்றி வைத்திருக்கிறது. ஒரு லட்சம் ரூபாய் கொடுத்து ஒரு பவுன் வாங்க வேண்டும் என்பது பல நடுத்தர குடும்பங்களாலும் நினைத்து கூட பார்க்க முடியாத விஷயமாக இருக்கிறது.
தங்கம் விலை தான் பல மடங்கு உயர்ந்திருக்கிறது தவிர நம்முடைய வருமானம் அந்த அளவிற்கு உயரவில்லை என்பதுதான் நாம் ஏற்றுக் கொள்ள வேண்டிய உண்மை . நாள்தோறும் தங்கத்தின் விலை வரலாறு காணாத உச்சங்களை எட்டி வருகிறது . ஒருபுறம் தங்கம் தான் எதிர்காலம் தங்கத்தை வாங்கி வையுங்கள் என அனைவரும் கூறுகிறார்கள் ஆனால் என்னிடம் தங்கம் வாங்கும் அளவிற்கு லட்சக்கணக்கில் பணம் இல்லை என சாமானிய மக்கள் புலம்புகிறார்கள் .

என்னிடம் லட்ச கணக்கில் பணம் கிடையாது இருக்கக்கூடிய சொற்பத்தொகையாவது தங்கத்தில் முதலீடு செய்ய வேண்டும் என நினைக்கிறேன் என்பவர்களுக்கு பிரபல நிதி ஆலோசகரான சர்தாக் அகுஜா தன்னுடைய லிங்குடின் பக்கத்தில் விரிவான ஒரு வழிமுறையை வழங்கியிருக்கிறார்.
குறைந்த தொகையில் தங்கம் வாங்கி லாபம் பார்க்க வேண்டும் என்றால் இன்றைய சூழலில் மக்கள் கோல்டு ஈடிஎஃப் திட்டங்களை தான் தேர்வு செய்ய வேண்டும் என கூறுகிறார். கோல்டு ஈடிஎஃப்கள் 24 கேரட் தங்கத்தின் விலை அடிப்படையாகக் கொண்டு வளர்ச்சி அடையக்கூடிய ஒரு முதலீட்டு கருவி . அதே போல Gold etf fund of funds என்பது தங்கத்தில் முதலீடு செய்யக்கூடிய பல்வேறு மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்யக்கூடிய நிதிகள் .

இந்த இரண்டு வழிமுறைகளில் உங்களிடம் இருக்கக்கூடிய சொற்ப தொகையில் கூட நீங்கள் முதலீடு செய்து தங்க வளர்ச்சிக்கு நிகரான லாபத்தை அடைய முடியும் என கூறுகிறார். இதற்கு அவர் கூறும் வழிமுறை ஒன்றுதான் முதலில் உங்களின் டீமேட் கணக்கு செல்லுங்கள் இல்லை என்றால் புதிதாக ஒரு டீமேட் கணக்கை தொடங்குங்கள் என்கிறார். குரோ, செரோதா போன்ற செயலிகளில் நொடி பொழுதில் டீமேட் கணக்கு தொடங்கிவிடலாம்.
டீமேட் கணக்கில் சென்று கோல்டு ஈடிஎஃப் (gold etf) என டைப் செய்யுங்கள். அவ்வாறு டைப் செய்யும் போது உங்களுக்கு பல்வேறு கோல்டு ஈடிஎஃப் திட்டங்கள் பட்டியலாக காட்டும் . ஆதித்யா பிர்லா , எஸ்பிஐ, நிப்பான் இந்தியா, யுடிஐ, ஆக்சிஸ் கோல்டு உள்ளிட்ட கோல்டு ஈடிஎஃப் திட்டங்கள் பட்டியலாக காட்டும். அதில் நீங்கள் ஏதேனும் ஒன்றை தேர்ந்தெடுங்கள் இவ்வாறு நீங்கள் ஒரு கோல்டு ஈடிஎஃப் திட்டத்தை தேர்ந்தெடுக்கும் போது இரண்டு விஷயங்களை கவனத்தில் கொள்ள வேண்டும் என்கிறார்.
முதலில் எக்ஸ்பென்ஸ் ரேஷியோ அதாவது நீங்கள் முதலீடு செய்யக்கூடிய பணத்தில் எவ்வளவு தொகை அந்த நிறுவனத்திற்கான கமிஷனாக செல்கிறது. இது பொதுவாக 0.2% முதல் 0.5% வரை இருக்க வேண்டும் எவ்வளவு குறைவாக இருக்கிறதோ அவ்வளவு குறைவான பணம் தான் கமிஷனாக செல்லும். அடுத்ததாக ட்ராக்கிங் எரர் அதாவது தங்கத்தின் விலைக்கு நிகராக இவற்றின் வளர்ச்சி எவ்வளவு இருக்கிறது என்பதை அளவிடக்கூடிய ஒரு கணக்கீடு தான் டிராக்கிங் எரர். இது எவ்வளவு குறைவாக இருக்கிறதோ அவ்வளவு சிறந்தது என்கிறார்.
நான் ஆய்வு செய்ததில் யூடிஐ கோல்ட் ஈடிஎஃப் திட்டம் குறைந்தபட்ச டிராக்கிங் எரர் கொண்டிருக்கிறது அதாவது 0.14% ஆகத்தான் இருக்கிறது அதேபோல குவாண்டம் கோல்டு ஃபண்டும் 0.15% என குறைந்த ட்ராக்கிங் எரர் கொண்டிருக்கிறது என்கிறார். எக்ஸ்பென்ஸ் ரேஷியோ, டிராக்கிங் எரர் இரண்டும் குறைவாக இருக்கும் ஒரு ஈடிஎஃப்பில் முதலீடு செய்யுங்கள் என்கிறார். இந்தியாவில் 100 ரூபாய் முதலே கோல்டு ஈடிஎஃப் திட்டங்களில் முதலீடு செய்யலாம். இதனை மாதம் எஸ்ஐபி முறையிலும் பணத்தை முதலீடு செய்ய முடியும்.
More From GoodReturns

தங்கம், வெள்ளி விலை: வாரத்தின் முதல் நாளிலேயே குட் நியூஸ்..!! தங்கம் வாங்க சிறந்த நாள்..!!

தங்கம் விலை இனி எகிற போகுது: சிக்னல் தந்த உலக சந்தை..! ஈரான் போரில் நடந்த திடீர் திருப்பமே காரணம்?

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

மதுரை தங்கம் விலை அதிரடி உயர்வு.. ஈரான் போரில் நடந்த எதிர்பாராத டிவிஸ்ட்.. சர்ரென உயர்ந்த Gold Rate..!

தங்கம் விலை சரிவு: கோயம்புத்தூர் மக்களே நகை வாங்க இன்று தான் நல்ல நாள்!!

தங்கம் விலை: 2 நாட்களில் நடந்த திருப்பம்!! மார்ச் மாத மேஜிக் முடிவுக்கு வந்ததா?

ஈரான் போருக்கு மத்தியில் தங்க சந்தையில் புயலை கிளப்பிய புதின்!! வெளிவந்தது ரஷ்யாவின் தங்க புதையல்!!

பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி!! சென்செக்ஸ் 1000 புள்ளிகளுக்கு மேல் வீழ்ச்சி!!

கதறி கதறி அழும் வெள்ளி முதலீட்டாளர்கள்.. போட்ட காசு மொத்தமும் போச்சு..!! அடுத்தது என்ன..?

செல்வமகள் சேமிப்பு திட்டத்தில் வட்டி உயர்த்தப்படுகிறதா? மக்களவையில் முக்கிய தகவலை வெளியிட்ட அரசு…!!



Click it and Unblock the Notifications