பிசிகல் தங்கத்திற்கு மாற்றாக வந்துள்ள இந்திய அரசின் தங்க பத்திரத்தில் செய்கூலி கிடையாது. சேதாரம் கிடையாது. எல்லாவற்றிற்கும் மேலாக பாதுகாப்பானது.
மேலும் நீங்கள் ஆன்லைனில் வாங்கும்போதும்? வாங்குவதற்கான தொகையினை ஆன்லைனில் செலுத்தும்போது, கிராமுக்கு 50 ரூபாய் தள்ளுபடி கிடைக்கும்.
இதெல்லாவற்றிற்கும் மேலாக இந்த தங்க பத்திரம் ஆர்பிஐ-யால் வெளியிடப்படுவதால், இறையாண்மை தன்மை கொண்டவையாகவும் உள்ளது.
டிஜிட்டல் தங்கத்திற்கு மாற்று
இன்றைய காலகட்டத்தில் தங்க முதலீடு என்பது மிக முக்கியமான முதலீடுகளில் ஒன்றாக பார்க்கப்படுகிறது. ஏனெனில் பிசிகல் தங்கத்திற்கு மாற்றாக வந்துள்ள இந்த டிஜிட்டல் தங்கமானது, அப்போதைய நிலவரத்துக்கு ஏற்ப நாம் விற்றுக் கொள்ள முடியும். இந்த திட்டத்தில் பொதுவாக ஒருவர் குறைந்தபட்சம் ஒரு கிராம் முதல் அதிகபட்சமாக 4,000 கிராம் வரை வாங்கிக் கொள்ளலாம். இதே நிறுவனங்கள் மற்றும் அறக்கட்டளைகள் மூலம் வாங்கும்போது 20 கிலோ கிராம் வரை வாங்கிக் கொள்ளலாம்.
வட்டி உண்டு
தங்க பத்திர திட்டத்திற்கு 8 ஆண்டுகள் பதவிக்காலம் உண்டு. ஆனால் 5 ஆண்டில் இருந்தே வெளியேறும் விருப்பங்கள் உண்டு. இதில் உள்ள ஒரு நல்ல விஷயம் என்னவெனில் பிசிகல் தங்கத்தினைப் போலவே நீங்கள் இந்த தங்க பத்திரத்தினை பிணையமாக வைத்து கடன் வாங்கிக் கொள்ளலாம். இந்த தங்க பத்திரங்களுக்கு வருடத்திற்கு 2.5% வட்டி விகிதம் கிடைக்கும். எனினும் இந்த வட்டி உங்கள் வருமானமாக சேர்க்கப்பட்டு, அதற்கு நீங்கள் வருமான வரியும் செலுத்த வேண்டியிருக்கும்.
மூலதன ஆதாய வரி உண்டு
தங்க பத்திரத்தில் திட்டத்தில் முதலீடு செய்து 8 வருடங்கள் முதிர்வடையும் வரை காத்திருந்தால், நீண்டகால மூலதன ஆதாய வரி இல்லை. ஒரு வேளை உங்களால் எட்டு வருடம் வரை நீடிக்க முடியவில்லை என்றால் நீங்கள் உங்கள் தங்கப் பத்திரத்தை எக்ஸ்சேஞ்சில் விற்றுக் கொள்ளலாம் (அல்லது) குறைந்தது ஐந்து வருடம் தாண்டினால் உங்கள் தங்கப் பத்திரத்தை நீங்கள் பணமாக மாற்றலாம். ஆனால் இந்த இரண்டிலும் கேபிட்டல் டேக்ஸ் உண்டு.
தங்க பத்திர முதல் சீரிஸ்
அந்த வகையில் நடப்பு நிதியாண்டின் முதல் சீரிஸ் கடந்த மே 17 அன்று வெளியிடப்பட்டது. இதன் கடைசி தேதி மே 21, இதன் பத்திர வெளியீடு மே 25 ஆகும். இது கிராமுக்கு 4,777 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. இதே ஆன்லைன் மூலமாக வாங்குபவர்கள் 4727 ரூபாய்க்கு வாங்கிக் கொள்ளலாம். அதெல்லாம் சரி இதனை நேரடியாக ஆன்லைனில் எஸ்பிஐ மூலமாகவும் வாங்கிக் கொள்ளலாம். எப்படி வாங்குவது. இதற்கு எஸ்பிஐயில் கணக்கு வேண்டுமா? வாருங்கள் பார்க்கலாம்.
ஆன்லைனில் எப்படி வாங்குவது?
உங்களது எஸ்பிஐ நெட் பேங்கிங் கணக்கினை லாகின் செய்து கொள்ளுங்கள். அதில் eServices என்ற ஆப்சனில் Sovereign Gold Bond என்பதை கிளிக் செய்யவும்.
அதன் பிறகு டெர்ம் அன்ட் கண்டிசன்ஸ் என்பதனை கிளிக் செய்து proceed கொடுக்கவும்.
அதன் பிறகு registration form- னையும் பூர்த்தி செய்து சப்மிட் கொடுக்கவும்.
அதோடு உங்களது நாமினி விவரங்கள், எவ்வளவு வாங்க போகிறீர்கள் என்பதையும் தெளிவாக வாங்கும் படிவத்தில் கொடுக்கவும்.
இதன் பிறகு சப்மிட் என்பதை கிளிக் செய்யவும். இதனை கொடுக்கும் முன்பு, நீங்கள் கொடுத்த விவரங்கள் சரியானதா என்பதை பார்த்துக் கொள்ளுங்கள்.
More From GoodReturns

Gold price today: தங்கம் வாங்க கடைக்கு போறீங்களா? சென்னை, கோவை, மதுரையில் ஷாக் கொடுக்கும் நிலவரம்?

தங்கம், வெள்ளி விலையில் நடந்த திடீர் மாற்றம்: நகை வாங்க இது நல்ல நேரமா?

தங்கம், வெள்ளி விலை லைவ் அப்டேட்ஸ்: இனி வரும் நாட்களில் விலை ஏறுமா? இறங்குமா?

தங்கம் விலையேற இதுதான் காரணமா? 23 மாதங்களாக தொடரும் வேட்டை!அமெரிக்காவையே ஓரங்கட்டிய நாடுகள்? ஏன்?

மதுரை மக்களே தங்கம் வாங்குற பிளான் இருக்கா? உங்களுக்கு தான் இந்த செய்தி

கோவையில் இன்று தங்கம் விலை அதிரடி உயர்வு: சாமானிய மக்கள் அதிர்ச்சி!!

ஈரான் போர் நிறுத்தம்: உயர்ந்தது தங்கம் விலை; சரிந்தது கச்சா எண்ணெய் விலை!! ஓவர் நைட்டில் எல்லாமே மாறியது!!

கோயம்புத்தூரில் இன்று ஒரு சவரன் தங்கம் விலை என்ன? இன்று தங்கம் வாங்கலாமா?

Gold விலை ஏறினாலும் தணியாத மோகம்! இந்தியர்களின் அதிரடி வேட்டை! கவலையில் நிதியமைச்சகம்?

Akshaya Tritiya 2026:குறைந்த விலையில் தங்கம் வாங்க இப்பவே பிரைஸ் லாக் செய்யலாம்! கவலையே வேண்டாம்?

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!



Click it and Unblock the Notifications