நிம்மதியாக வாழ வேண்டுமா?, கடனை மட்டும் வாங்காதே என்று முன்பு பெரியவர்கள் அடிக்கடி சொல்வதை கேட்டு இருப்போம். அத்தியாவசிய தேவைக்காக என்றால் கடன் வாங்குவது தவறில்லை. ஆனால் இன்றைய உலகில் விருப்பப்பட்ட பொருளை வாங்க கையில் காசு இல்லை என்றாலும் கடன் வாங்கியாவது வாங்கி விடும் மனோபாவத்தில்தான் பலரும் இருக்கிறார்கள். மேலும் பல தனியார் நிறுவனங்களும் போட்டி போட்டு கடன் வசதியை வழங்குகின்றன. நிதி சேவை நிறுவனங்களுக்கு இடையே ஏற்பட்ட போட்டி காரணமாக, வாடிக்கையாளர்களுக்கு விரைந்து கடன் கொடுப்பதில் தீவிரம் காட்டி வருகின்றன.
அந்த வகையில் தற்போது விரைவாக கடன்கள் வழங்கும் உடனடி கடன் செயலிகள் (இன்ஸ்டன்ட் லோன் ஆப்ஸ்) மிகவும் பிரபலமாகி வருகிறது. குறைந்த ஆவணங்கள் மற்றம் விரைவான ஒப்புதல் மற்றும் உடனடியாக கடன் கிடைக்கிறது. என்ற காரணங்களால் உடனடி கடன் ஆப்ஸ் பிரபலமாகி வருகிறது. ஆனால் அதில் பெரும்பாலான செயலிகள் மோசடி செயலிகளாக உள்ளன.

ஆனால் கடன் உடனடியாக கிடைக்கிறது என்ற ஆர்வத்தில் சிலர் மோசடியான கடன் செயலிகளில் கடனுக்கு அப்ளை செய்து தங்களது பணம், டேட்டாவை இழப்பதோடு நிம்மதியையும் இழந்து தவிக்கின்றனர். மோசடி உடனடி கடன் செயலிகளின் முக்கிய நோக்கமே உங்கள் பணம் மற்றும் டேட்டாவை திருடுவதுதான். அதனால் மோசடியான உடனடி கடன் செயலிகளின் வலையில் சிக்கி உங்கள் பணத்தை இழந்து விடாதீர்கள். மோசடி உடனடி கடன் செயலிகளை நாம் எளிதாக அடையாளம் காணலாம். முதலில், அந்த செயலிக்கு இந்திய ரிசர்வ் வங்கி ஒப்புதல் வழங்கியுள்ளதாக பாருங்க.
அடுத்து அந்த உடனடி கடன் செயலியின் தொடர்பு விவரங்கள், ரேட்டிங்ஸ் மற்றும் அனுமதிகளை செக் செய்யுங்க. சில மோசடி உடனடி லோன் செயலிகள், முன்பணம் செலுத்தும்படியும் அல்லது கேஓய்சி இல்லாமல் கடன் வழங்குவதாக கூறினால் எச்சரிக்கையாக இருங்கள். அந்த செயலிகள் மோசடி கடன் செயலிகள். எப்போதுமே நம்பிக்கைக்குரிய கடன் செயலிகளை மட்டுமே தேர்வு செய்யுங்க. கடனுக்கு விண்ணபிக்கும் முன் அந்த செயலியின் சட்டப்பூர்வமான தன்மையை சரிபார்த்துக் கொள்ளுங்க.
நிதி மோசடிகள் தொடர்பாக மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் இந்திய ரிசர்வ் வங்கி பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதேசமயம் மக்களாகிய நாமும் எதையும் உடனடியாக நம்பாமல், தீவிர விசாரித்தே அடுத்த செயலை செய்ய வேண்டும். இதனால் நாம் மோசடியான உடனடி கடன் ஆப்ஸ்களின் வலையில் சிக்காமல் தப்பித்து கொள்ளலாம். வரும் முன் காப்பதே சிறந்தது அதனால் எப்போதும் விழிப்புடன் செயல்படுவதே சிறந்தது.
More From GoodReturns

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!

165 ஆண்டுகளில் இல்லாத தரமான சம்பவத்தை செய்த டிரம்ப்..!! வாயடைத்துப்போன எதிர்க்கட்சியினர்..!!



Click it and Unblock the Notifications