2025இல் தங்கமும், வெள்ளியும் போட்டி போட்டு விலை உயர்ந்துள்ளன. முன்கூட்டியே தங்கம், வெள்ளி விலை உயரும் என கணித்தவர்கள் அனைவரும் தங்களுடைய பணத்தை இதில் முதலீடு செய்து இந்த ஆண்டு பெரிய லாபம் கண்டிருக்கிறார்கள். நடப்பு ஆண்டில் மட்டும் தங்கம் விலை 80 சதவீதத்திற்கும் மேலும் வெள்ளியின் விலை சுமார் 150 சதவீதமும் உயர்வு கண்டிருக்கிறது.
இதனால் 2025 ஆம் ஆண்டில் தங்கத்தை தவற விட்டு விட்டோமே என ஏராளமானவர்கள் வருத்தப்பட்டு வருகின்றனர் . இந்த சூழலில் 2026 ஆம் ஆண்டில் தங்கம், வெள்ளியில் எப்படி முதலீடு செய்தால் லாபம் பார்க்கலாம் என்பதை முதலில் தெரிந்து கொள்ளலாம். 2025ஆம் ஆண்டில் 80 சதவீதம் தங்கம் விலை உயர்ந்திருக்கிறது, 2026இலும் இதே போல் 80 சதவீதம் உயருமா என்றால் கண்டிப்பாக உயரும் என யாராலும் பதில் சொல்ல முடியாது. ஏனெனில் தங்கத்தின் விலை ஒவ்வொரு ஆண்டும் உயரும் ஆனால் இந்த ஆண்டு போலவே அடுத்த ஆண்டும் உயரும் என எண்ண கூடாது.

ஆனால் தங்கத்தின் விலை இப்போது இருக்கும் நிலையிலிருந்து குறையாது , அதே சமயம் விலை உயராமல் அதே நிலையிலும் நீடிக்காது என்பது தான் உண்மை. ஏனெனில் உலக தங்க சந்தையில் அடிப்படையை ரீதியாகவே மாற்றம் வந்துள்ளது. தங்கத்தை வாங்கக்கூடியவர்களாக தற்போது மத்திய வங்கிகள் மாறி இருக்கின்றன . இந்த போக்கு தங்கத்தின் விலையில் மாற்றத்தை ஏற்படுத்தியது. 2026 ஆம் ஆண்டிலும் மத்திய வங்கிகள் தங்கத்தை வாங்குவது நீடிக்கும் .இது தங்கம் விலையை உயர்த்தும்.
தொழில்துறை ரீதியாக வெள்ளிக்கான டிமாண்ட் அதிகரித்துள்ளது. டிமாண்டுக்கு ஏற்ப சப்ளையும் இல்லை என்பதும் ஒரு காரணம் . எனவே வெள்ளி விலையும் கண்டிப்பாக உயரும். ஆனால் வெள்ளி விலை திடீரென உயரும் திடீரென சரியும் என்பதால் உடனடியாக ஏற்ற இறக்கம் காணும் ஒரு உலோகம் அது.,எனவே 2026 ஆம் ஆண்டில் தங்கம், வெள்ளியில் முதலீடு செய்து பணம் பார்க்க வேண்டும் என எண்ணுபவர்கள் சற்றே எச்சரிக்கையுடன் அதில் முதலீடு செய்யலாம் என்பது தான் நிபுணர்களின் கருத்தாக இருக்கிறது.
தங்களின் போர்ட்போலியோவில் கணிசமான பகுதியை தங்கத்திற்கும் வெள்ளிக்கும் ஒதுக்குவது கட்டாயம் . உங்களுடைய மொத்த போர்ட்போலியோவில் 20 இலிருந்து 25 சதவீத பணத்தை தங்கம் ,வெள்ளி முதலீடுக்காக ஒதுக்கி விடுங்கள் என நிபுணர்கள் பரிந்துரை செய்கின்றனர். தங்கம் வெள்ளி விலை தான் உயர்கிறதே என்பதற்காக கையில் இருக்கும் மொத்த பணத்தையும் அதில் போட்டு விடக்கூடாது என்றும் எச்சரிக்கை விடுக்கின்றனர்.
எனவே உங்களுடைய போர்ட் போலியாவில் 20 - 25 சதவீதத்திற்குள் இந்த உலோகங்களுக்கு என ஒதுக்கீடு செய்து விடுங்கள் என கூறும் நிபுணர்கள் , கோல்டு ஈடிஎஃப், சில்வர் ஈடிஎஃப் திட்டங்களில் முதலீடு செய்ய அறிவுரை வழங்குகின்றனர். இது தங்கம், வெள்ளி சார்ந்த மற்ற முதலீடுகளை விட நல்ல லாபம் தருவதாக இருக்கிறது என்றும் கூறுகின்றனர்.
Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Goodreturns.in அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் "நாங்கள்" என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.


Click it and Unblock the Notifications