2025ஆம் ஆண்டில் உலகம் முழுவதுமே தங்கம் மற்றும் வெள்ளி ஆகிய இரண்டின் விலையும் கணிக்க முடியாத அளவு உயர்ந்துவிட்டது. வெள்ளியின் விலை சுமார் 50%, தங்கத்தின் விலை சுமார் 45% உயர்ந்திருக்கிறது. இந்த நிலையில் தான் பலரும் தங்கம் மற்றும் வெள்ளியில் தற்போது முதலீடு செய்யலாமா எவ்வாறு முதலீடு செய்தால் எதிர்காலத்தில் லாபம் பார்க்க முடியும் என்பது குறித்த குழப்பத்தில் ஆழ்ந்திருக்கின்றனர்.
ஒன் பைனான்ஸ் நிறுவனத்தின் தலைமை ஆலோசகரான அகில் ரதி பிசினஸ் டுடே தளத்திற்கு அளித்துள்ள போட்டியில் இந்த தீபாவளிக்கு எப்படி தங்கம் மற்றும் வெள்ளியில் முதலீடு செய்யலாம் என்பதை விளக்கமாக தந்திருக்கிறார். முதலில் அவர் எதற்காக நீங்கள் தங்கத்தில் முதலீடு செய்கிறீர்கள் என்பது தான் முக்கியம் என கூறுகிறார்.

தங்கம் எனக்கு நகையாக தான் தேவைப்படுகிறது என்பவர்கள் நகையாக வாங்கி கொள்ளலாம் என அறிவுரை வழங்குகிறார். ஆனால் தங்கத்தை முதலீடாகவே பார்க்கிறேன் என்பவர்கள் தங்க நகையாக வாங்க கூடாது என கூறுகிறார். தங்கத்தை நான் முதலீடாக தான் பார்க்கிறேன் அடுத்த நான்கிலிருந்து ஐந்து ஆண்டு காலத்திற்கு அந்த பணம் எனக்கு தேவையில்லை அது தங்க முதலீடாக வளர்ந்து வந்தால் போதும் என்பவர்கள் நகையாக வாங்க கூடாது என்கிறார்.
நகை வாங்க வேண்டும் என்ற தேவையில் இருப்பவர்கள் மட்டுமே நகை வாங்க வேண்டும் தங்கத்தை வாங்க வேண்டும் என எண்ணுபவர்கள் ஈடிஎஃப் திட்டங்களில் முதலீடு செய்யலாம் என அறிவுரை வழங்குகிறார். அதேபோல தற்போது வெள்ளியின் விலை உயர்வதால் சில்வர் ஈடிஎஃப் திட்டங்களிலும் கவனம் செலுத்தலாம் என தெரிவிக்கிறார் . இந்த முதலீட்டினை நீங்கள் அடுத்த நான்கு முதல் ஐந்து ஆண்டுகள் காலத்திற்கு அப்படியே வைத்திருந்தால் நல்ல லாபம் பார்க்க முடியும் என கூறுகிறார்.

தங்கத்தை நகையாக வாங்கும்போது அதற்கு செய்கூலி சேதாரம், ஜிஎஸ்டி உள்ளிட்ட கட்டணத்தை நாம் கூடுதலாக செலுத்துகிறோம் , அதுவே ஈடிஎஃப் திட்டங்களில் அது இல்லை என்கிறார். நகையா வாங்கினால் நாம் செலுத்தக்கூடிய பணத்தில் கணிசமான பகுதி செய்கூலி சேதாரம் ஜிஎஸ்டி என்றே சென்றுவிடும். இதுவே ஈடிஎஃப் முறையில் பணம் முழுவதுமே தங்கமாக தான் முதலீடு செய்யப்படுகிறது என கூறுகிறார்.
தங்கத்தை முற்றிலும் முதலீடாக மட்டுமே பார்ப்பவர்கள் நகை பக்கம் செல்லாதீர்கள், ஈடிஎஃப் திட்டங்களில் முதலீடு செய்யலாம் என கூறும் அவர் நகையாக தான் எனக்கு தேவை என்பவர்கள் நகை வாங்கி வைத்து கொள்ளுங்கள் என்கிறார். ஏனெனில் அடுத்த தீபாவளிக்கு இதே தங்கத்தை வாங்க நாம் கூடுதல் தொகை வழங்க வேண்டிய நிலை இருக்கும் என்கிறார்.
இந்தியாவில் கோல்டு ஈடிஎஃப் திட்டங்கள் இரண்டு ஆண்டுகளில் 108% லாபம் தந்துள்ளன என குறிப்பிட்டுள்ள அவர் அதிக டிரேடிங் வால்யூம் கொண்ட ஃபண்டுகளை வாங்க அறிவுரை வழங்குகிறார்.


Click it and Unblock the Notifications