வீட்டு வாடகை செலுத்துவது, பொருட்கள் மற்றும் சேவைகளுக்கு கிரெடிட் கார்டு மூலம் பணம் செலுத்துவதன் மூலம் கேஷ்பேக் மற்றும் ரிவார்டு பாயிண்ட்கள் பெறலாம்.
வாடகை வீட்டில் இருப்பவர்கள் தங்களது வீட்டு வாடகை பணத்தை ஆன்லைன் வாயிலாக வீட்டு உரிமையாளருக்கு செலுத்துவது அதிகரித்து வருகிறது. ஆன்லைனில் வீட்டு வாடகை செலுத்தும் போது பலர் தற்போது கிரெடிட் கார்டை பயன்படுத்துகின்றனர். வாடகை செலுத்துவதற்கான காலக்கெடு நெருங்கும்போது, வங்கி கணக்கிலோ அல்லது கையிலோ பணம் இல்லை என்றாலும் எளிதாக கிரெடிட் கார்டு பயன்படுத்தி வாடகை பணத்தை செலுத்தி விடலாம்.

கிரெடிட் கார்டு தவணைகள் பொதுவாக 45 முதல் 50 நாட்களுக்கு பிறகு செலுத்த வேண்டும். இந்த நேரத்தில் அதே பணத்தை வேறு எங்காவது பயன்படுத்தி கொள்ளலாம். கிரெடிட் கார்டு மூலம் வாடகை செலுத்துவதையும் இ.எம்.ஐ.யாக மாற்றலாம்.
கிரெடிட் கார்டு மூலம் செய்யப்படும் பரிவர்த்தனைகளுக்கு பல கேஷ்பேக் மற்றும் ரிவார்டு புள்ளிகள் உள்ளன. அதேசமயம், சரியான நேரத்தில் முழு கிரெடிட் கார்டு பில் தொகையையும் செலுத்தி விட்டால் உங்கள் கிரெடிட் ஸ்கோரை எதிர்மறையாக பாதிக்காது. எனவே முழு கிரெடிட் பில் தொகையையும் உரிய தேதிக்குள் செலுத்த முடியும் என்றால் மட்டுமே கிரெடிட் கார்டை பயன்படுத்த வேண்டும். அப்படி செய்தால் உங்களுக்கு கிரெடிட் கார்டு வரமாக அமையும்.
கிரெடிட் கார்டு மூலம் வீட்டு வாடகை செலுத்துவற்கான படிநிலைகள்
ஸ்டெப் 1: முதலில் ஏதேனும் ஆன்லைன் சேவை வழங்குநரின் இணையதளம் அல்லது UPI செயலிக்கு செல்ல வேண்டும்.
ஸ்டெப் 2: அதில் வாடகை செலுத்தும் விருப்பத்தை தேர்ந்தெடுக்கவும்
ஸ்டெப் 3: வீடு அல்லது கடை வாடகை, பராமரிப்பு, சொத்து வைப்பு போன்ற விருப்பங்களிலிருந்து ஒன்றை தேர்வு செய்ய வேண்டும்.
ஸ்டெப் 4: வாடகை தொகை மற்றும சொத்து பெயரை டைப் செய்ய வேண்டும்.
ஸ்டெப் 5: தொடரவும் (Continue)என்பதை தொட வேண்டும்.
ஸ்டெப் 6: நில உரிமையாளரின் பெயரை டைப் செய்ய வேண்டும்.
ஸ்டெப் 7: பணம் செலுத்தும் முறையாக கிரெடிட் கார்டை தேர்ந்தெடுக்க வேண்டும்.
ஸ்டெப் 8: நில உரிமையாளரின் வங்கி கணக்கு அல்லது யு.பி.ஐ.த் தேர்வு செய்ய வேண்டும்.
ஸ்டெப் 9: பின்பு வங்கியுடன் இணைக்கப்பட்ட கிரெடிட் கார்டு மூலம் வாடகை தொகையை செலுத்த வேண்டும்.


Click it and Unblock the Notifications