சில காலமாக கிரெடிட் கார்டுகளின் பயன்பாடு அதிகரித்துவிட்டது. இதனால் அது தொடர்புடைய மோசடிகளும் அதிகரித்து வருகின்றன. மோசடிகள் பெட்ரோல் பங்குகளிலும் நடந்து வருகிறது. கார்டு ஸ்கிம்மிங் மற்றும் பிற யுக்திகளை பயன்படுத்தி மோசடிகள் பெருகி வருவதால் உங்களுடைய நிதி சார்ந்த தகவல்களை பாதுகாப்பாக வைத்திருப்பது அவசியம். பெட்ரோல் பங்குகள் மற்றும் ஏரிவாயு நிலையங்களில் கிரெடிட் கார்டுகளைப் பயன்படுத்துபவர்கள் கவனமாக இருக்க வேண்டும்.
கார்டு ஸ்கிம்மிங் என்பது ஏடிஎம், டெபிட் அல்லது கிரெடிட் கார்டுகளைப் பயன்படுத்தும் போது தகவல்களை திருடும் முறையாகும்.

இன்றெல்லாம் பெட்ரோல் போடச் செல்லும்போது பலர் தங்களுடைய கிரெடிட் கார்டுகளை பயன்படுத்துகின்றனர். அப்படி பயன்படுத்தும் போது தவிர்க்க வேண்டிய சில விஷயங்கள் குறித்து இந்தப் பதிவில் பார்ப்போம்.
கார்டு ரீடரை முன்கூட்டியே சரிபார்க்கவும்: உங்கள் கிரெடிட் கார்டை ஸ்வைப் செய்வதற்கு முன்பு கார்டு ரீடரை ஒரு முறை சரி பார்க்கவும். ஏனெனில் திருடர்கள் பெரும்பாலும் கார்டு விவரங்களை திருட ஸ்கிம்மிங் சாதனங்களை வைத்திருப்பார்கள். இது ஒரு நிமிடத்தில் செய்யக்கூடிய ஒரு சிறு சோதனை தான். கார்டு ரீடரை மெதுவாக அசைப்பது அத்தகைய போலி சாதனங்களை கண்டறிய உதவும். ஏனெனில் முறையான இடங்களில் பாதுகாப்பான கார்ட் ரீடர் தான் இருக்கும்.
தொடர்பில்லாத கட்டணங்களை தேர்வு செய்யவும்: டேப் டு பே கார்டுகள் அல்லது மொபைல் வாலட்டுகள் போன்ற தொடர்பில்லாத கட்டண முறைகளை தேர்வு செய்யலாம். இந்த முறைகள் ஸ்கிம்மிங் அபாயத்தை வெகுவாக குறைக்கின்றன. ஏனெனில் உங்கள் கார்டுடன் இவை நேரடி தொடர்பில் இல்லாததால் கார்டு தகவல்கள் போன்றவற்றை மோசடிக்காரர்களால் எடுக்க முடியாது. இதனால் பரிவர்த்தனை பாதுகாப்பாகவும் வேகமாகவும் இருக்கும். எனவே மோசடிகளில் இருந்து உங்களை பாதுகாத்துக் கொள்ள பெட்ரோல் பங்குகளில் டாப் டுபே கார்டுகள் அல்லது மொபைல் வாலட்டுகளை பயன்படுத்துங்கள்.
பரிவர்த்தனைகளை சரி பாருங்கள்: ஏதேனும் அங்கீகரிக்கப்படாத பரிவர்த்தனை நடந்துள்ளதா? என்பதை வங்கியின் அறிக்கைகள் மற்றும் கிரெடிட் கார்டு அறிக்கைகளை தவறாமல் மதிப்பாய்வு செய்து கண்டுபிடிங்கள். மோசடியை முன்கூட்டியே கண்டறிவது பெரிய அளவிலான பாதிப்புகள் ஏற்படாமல் தடுக்க உதவும். ஒருவேளை ஏதேனும் அங்கீகரிக்கப்படாத பரிவர்த்தனை இருந்தால் உடனடியாக உங்கள் நிதி நிறுவனத்திற்கு தெரிவிக்க வேண்டும். அது கிரெடிட் கார்டு வழங்குனராக இருக்கலாம் அல்லது வங்கியாகவும் இருக்கலாம். மெயில் அல்லது எஸ்எம்எஸ் மூலம் பரிவர்த்தனை தொடர்பான நோட்டிபிகேஷன்களை ஆன் செய்து வையுங்கள். இது நிகழ் நேரத்தில் நீங்கள் பணம் செலுத்தும் போது அறிவிப்புகளை பெற உதவும்.
பணம் செலுத்தும்போது விழிப்புடன் இருங்கள்: பணம் செலுத்தும் போது உங்களுடைய கிரெடிட் கார்டை உன்னிப்பாக கண்காணியங்கள். பரிவர்த்தனை உங்கள் முன்னிலையில் நடக்கிறதா? என்பதைச் சரி பாருங்கள். பணம் செலுத்தப்பட்டதும் உடனடியாக உங்களிடம் கார்டு ஒப்படைக்கப்பட வேண்டும். குறிப்பாக கார்டு க்ளோனிங் அல்லது அங்கீகரிக்கப்படாத ஸ்வைப் போன்ற மோசடிகளை குறைப்பதற்கு இந்த ஸ்டெப் மிகவும் முக்கியம். பணம் செலுத்தும் போது இயந்திரம் தொலைதூரத்தில் இருந்தால் உதவியாளிடம் அதை உங்களிடம் கொண்டு வரச் சொல்லுங்கள். உங்கள் கிரெடிட் கார்டை கவனிக்காமல் தூரத்தில் நிற்காதீர்கள்.
நற்பெயர் கொண்ட பெட்ரோல் நிலையங்களை பயன்படுத்துங்கள்: முடிந்த வரையில் பாதுகாப்பு கேமராக்கள் மற்றும் பயிற்சி பெற்ற ஊழியர்களை கொண்டு இயங்கி வரும் நன்கு அறியப்பட்ட பெட்ரோல் நிலையங்களை தேர்ந்தெடுத்து பெட்ரோல் போடுங்கள். இதுபோன்ற நிலையங்கள் மோசடியில் ஈடுபடுவதற்கான வாய்ப்புகள் குறைவு. ஒரு வேலை அறிமுகம் இல்லாத பகுதிகளில் அறிமுகம் இல்லாத பெயர்களில் பெட்ரோல் பங்குகள் இருந்தால்.. கூடுதல் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். கட்டன கவுண்டர்களையும் ஆய்வு செய்யுங்கள். முடிந்த வரையில் பணம் கொடுத்து பெட்ரோல் போட முயற்சி செய்யுங்கள்.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!



Click it and Unblock the Notifications