ஜிஎஸ்டி இல்லாமல் தங்கம் வாங்க முடியுமா? இத்தன நாளா இது தெரியாம பணத்த வேஸ்ட் பண்ணிட்டமே..!!

தங்கம் வாங்குங்க வாங்குங்க என அனைவரும் கூறுகிறார்கள். ஆனால் அவ்வளவு பணம் என்னிடம் இல்லை என ஏராளமானவர்கள் புலம்புவதை பார்க்க முடிகிறது. ஒரு சவரன் தங்க நகை வாங்க குறைந்தது 1.30 லட்சம் ரூபாய் தேவை. தங்க நகையாக இல்லாமல் நாணயம் வாங்கினால் கூட அதற்கு ஜிஎஸ்டி மற்றும் குறைந்தபட்ச செய்கூலி கட்ட வேண்டும்.

1.3 லட்சம் ரூபாய் என்பது பல குடும்பங்களுக்கும் 2 முதல் 3 மாத கால வருமானம். தங்கம் வாங்க வேண்டும் ஆனால் என்னிடம் 1 லட்சம் ரூபாய் பணமில்லை என்பவர்களுக்காகவே இந்தியாவில் ஒரு வரப்பிரசாதமான தங்க முதலீட்டு திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. இதில் மில்லி கிராம் முதல் நீங்கள் தங்கம் வாங்கலாம். இதற்கு செய்கூலி , சேதாரம், ஜிஎஸ்டி என எதுவுமே செலுத்த வேண்டாம்.

ஜிஎஸ்டி இல்லாமல் தங்கம் வாங்க முடியுமா? இத்தன நாளா இது தெரியாம பணத்த வேஸ்ட் பண்ணிட்டமே..!!

அண்மையில் செபி அங்கீகாரத்துடன் ஈஜிஆர் (EGR - Electronic Gold Receipt) எனப்படும் 'எலக்ட்ரானிக் தங்க ரசீது' முதலீட்டு திட்டம் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. டிஜிட்டல் முறையில் தங்கத்தை சேமிப்பதற்கான ஒரு பாதுகாப்பான வழிமுறை இது. இந்த ஈஜிஆர் (EGR) திட்டத்தில் குறைந்தபட்சம் 100 மில்லி கிராம் முதல் 1 கிலோ வரை தங்கம் வாங்க முடியும்.

உதாரணமாக இன்று 24 கேரட் தங்கம் விலை ஒரு கிராம் 15,491 ரூபாய் என்றால் நீங்கள் சுமார் 1500 ரூபாய் செலுத்தி 100 மில்லிகிராம் தங்கம் வாங்கலாம். 100 மில்லிகிராம் தொடங்கி 1 கிலோ வரை தங்கத்தை வாங்கலாம். நாம் ஒரு கடைக்கு சென்று தங்கம் வாங்கும்போது ஜிஎஸ்டி மற்றும் பிற வரிகள் செலுத்தப்பட வேண்டும். ஆனால், இந்த ஈஜிஆர் (EGR) முறையில் டிஜிட்டல் தங்கத்தை வாங்குவதற்கும் விற்பதற்கும் ஜிஎஸ்டி (GST) வரி கிடையாது. இது நமக்கு பெரிய லாபமாகும்.

Also Read

அதாவது நாம் கொடுக்கும் பணம் முழுவதுமே தங்கம் வாங்குவதற்கான முதலீடாகவே இருக்கும், வரி செய்கூலி சேதாரம் போன்ற கூடுதல் செலவு இல்லை. இந்த ஈஜிஆர் (EGR) தங்க முதலீடு அரசின் செபி அமைப்பால் முறைப்படுத்தப்பட்ட, மிகவும் பாதுகாப்பான ஒரு டிஜிட்டல் தங்க முதலீடு. பங்குகளை எப்படி டிமேட் கணக்கில் வாங்கி வைக்கிறோமோ அதே போல, தங்கத்தையும் பாதுகாப்பாக டிஜிட்டல் வடிவில் வைத்திருக்கலாம்.

நகையாக வாங்கி வீட்டில் வைத்தால் திருட்டு பயம் எனவே நகை பாதுகாப்புக்காக லாக்கர்இல் வைத்து அதற்கு தனி செலவு செய்ய வேண்டும். இந்த ஈஜிஆர் தங்கத்தில் அந்த செலவு நமக்கு இல்லை. 24 கேரட் தங்கம் விலை உயர உயர நீங்கள் வாங்கிய தங்கதின் மதிப்பும் உயரும். பின்னாளில் உங்களுக்கு தேவைப்படும்போது, தங்க கட்டியாக நீங்கள் உங்கள் தங்கத்தை பெறலாம் அல்லது பங்குச்சந்தையில் விற்று பணமாக்கி கொள்ளலாம்.

Recommended For You

தங்க நகை என்றால் அவசர தேவைக்கு கடன் வைத்து பணமாக்குகிறோம் அல்லவா அதே போல டிஜிட்டல் இஜிஆர்-ஐ அடகு வைத்து சில நொடிகளிலேயே கடன் பெற முடியும் என சொல்லப்படுகிறது. தங்கத்தை நகையாக பார்க்காமல் முதலீடாகவே பார்ப்பவர்கள் பெரிய தொகை சேர்த்து தங்கம் வாங்குவதற்குப் பதிலாக, சிறுக சிறுக பாதுகாப்பான முறையில் தங்கத்தில் முதலீடு செய்ய ஈஜிஆர் திட்டம் வழிவகை செய்கிறது.

You May Also Like

நீங்கள் ஸெரோதா போன்ற புரோக்கரேஜ் செயலிகளில் டீமேட் கணக்கு தொடங்கி நேரடியாக ஈஜிஆர் திட்டத்தில் பங்குச் சந்தையில் எப்படி நாம் ஒரு நிறுவன பங்கினை வாங்குகிறோமோ அதேபோல இந்த எலக்ட்ரானிக் கோல்ட் ரெசிப்டையும் வாங்க முடியும். 100 மில்லி கிராம் தொடங்கி 1 கிராம், 10 கிராம் , 100 கிராம் , 1 கிலோ என்ற கணக்கீட்டில் இந்த தங்கத்தை நாம் வாங்க முடியும்.

Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Goodreturns.in அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் "நாங்கள்" என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+