பிக்சட் டெபாசிட் போன்ற நிலையான வருமானம் தரும் சொத்துக்களை காட்டிலும் அதிக வருவாய் தரும் பங்குகளில் மக்கள் முதலீடு செய்ய ஆர்வம் காட்டி வருகின்றனர். இருப்பினும் பங்குகளில் முதலீடு செய்வதில் ரிஸ்க் இல்லாமல் இல்லை.
ரிஸ்க் குறைந்தால் வருமானமும் குறைவாகவே வரும், ரிஸ்க் அதிகமாக இருந்தால் வருமானமும் அதிகமாக வரும். அந்த வகையில் அதிக வருவாய் தரும் 4 பங்குச் சந்தை சார்ந்த முதலீட்டு வாய்ப்புகளை இங்கு பார்ப்போம்.

1. பங்குகள் : மும்பை பங்குச் சந்தை அல்லது தேசிய பங்குச் சந்தை ஆகியவற்றில் வர்த்தகம் செய்யப்படும் பங்குகளில் முதலீடு செய்வது இரண்டாம் நிலை சந்தையை குறிக்கிறது. அவற்றில் முதலீடு செய்ய நீங்கள் முதலில் பங்கு தரகு நிறுவனத்தில் டீமேட் கணக்கை தொடங்க வேண்டும். அதன் பிறகுதான் பங்குகளில் முதலீடு செய்ய முடியும்.
பங்குகளில் நேரடியாக முதலீடு செய்வதன் அபாயத்தை எதிர்கொள்ளும் வகையில் உங்கள் முதலீட்டை பிரித்து பல துறை நிறுவன பங்குகளில் முதலீடு செய்யலாம். இது உங்கள் இடர்பாட்டை குறைக்கும். பங்குகளில் முதலீடு செய்வது என்பது பங்கு சொத்து பிரிவில் ஒருவர் முதலீடு செய்வதை வெளிப்படுத்துகிறது.
அபாயம்: வருமானம் அடிப்படையில் பார்த்தால் பங்குகள் வாயிலான வருவாய் நிலையற்றது. மேலும் பங்கு விலை வாங்கிய விலையை காட்டிலும் குறைந்தால் முதலீட்டில் கணிசமான பகுதியை இழக்கும் அபாயமும் அதிகம். இருப்பினும். நீண்ட கால அடிப்படையில் பார்த்தால், அனைத்து சொத்து வகைகளிலும் பணவீக்கம் சரிசெய்யப்பட்ட வருவாயை விட பங்குகளால் அதிக வருவாய் வழங்க முடியும்.
2.ஐபிஓ : ஒரு நிறுவனத்தின் பங்குகள் எந்தவொரு சந்தையிலும் பட்டியலிடப்படுவதற்கு, ஐ.பி.ஓ. அதாவது முதன்மை சந்தை வாயிலாக பொதுமக்களுக்கு முதலில் கிடைக்க வேண்டும் ஐ.பி.ஓ. என்பது ஒரு குறிப்பிட்ட விலையில் ஒரு நிறுவனத்தின் பங்கு மூலதனம் பொதுமக்களுக்கு வழங்கப்படுகிறது.
இது முடிந்ததும், நிறுவனம் பரிந்துரைக்கப்பட்ட விதிகள் மற்றும் விதிமுறைகளின் விண்ணப்பதாரர்களுக்கு பங்குகளை ஒதுக்குகிறது. நிறுவன பங்கு பட்டியலிடப்பட்ட தேதியில், அது இரண்டாம் நிலை சந்தையின் ஒரு பகுதியாக மாறும். முதலீட்டாளர்கள் அதை வாங்கலாம் அல்லது விற்பனை செய்யலாம்.
இடர்பாடுகள்: ஐ.பி.ஓ.வில் பங்கு கோரி விண்ணப்பித்து உள்ளீர்கள் அதற்காக உங்களுக்கு பங்குகள் ஒதுக்கப்படும் என்ற உறுதி கிடையாது. ஐ.பி.ஒ.வில் நீங்கள் விண்ணப்பித்த ஒரு பங்கு கூட கிடைக்காமல் போகலாம். பட்டியலிடப்பட்ட தேதியில், முதலீட்டாளர்களுக்கு இடையே விலை கண்டுபிடிப்பு நிகழ்கிறது.
ஐ.பி.ஓ. விலையானது அடிப்படை விலை கிடையாது என்பதை எப்போது நினைவில் கொள்ளுங்கள். பட்டியலிடப்பட்ட தேதியில் பங்கு விலை இரட்டிப்பாகலாம் அல்லது பெரிய விலை சரிவை சந்திக்கலாம்.
3.ஸ்மால், மிட்கேப் ஈக்விட்டி மியூச்சுவல் பண்டுகள்: பங்குகளின் சந்தை மூலதனத்தின் அடிப்படையில் பரஸ்பர நிதி நிறுவனங்கள் முதலீடு செய்யும் பல்வேறு வகையான பங்கு பரஸ்பர நிதி திட்டங்களில், மிட்கேப் மற்றும் ஸ்மால்கேப் திட்டங்கள் அதிக ஏற்ற இறக்கத்திற்கு ஆளாகின்றன.
எனவே இந்த திட்டங்கள் அதிக வருமான வழங்குவதற்கான சாத்தியங்கள் உள்ளன.செபி விதிமுறைகளின்படி, சந்தை மூலதனத்தில் 101 முதல் 250 வரை உள்ள நிறுவனங்களில் மிட்கேப் பரஸ்பர நிதி திட்டங்கள் முதலீடு செய்வது கட்டாயமாக்கப்பட்டு்ள்ளன. இந்த நிறுவனங்கள் எதிர்காலத்தில் பெரிய நிறுவனங்களாக உயரலாம்.
சந்தை மூலதனத்தின் அடிப்படையில் 250க்கும் கீழே உள்ள நிறுவனங்களில் ஸ்மால் கேப் திட்டங்கள் முதலீடு செய்ய வேண்டும். மிட்கேப் மற்றும் ஸ்மால் கேப் நிறுவனங்களின் பங்கு மற்றும் பங்கு தொடர்பான திட்டங்களில் குறைந்தபட்ச முதலீடு திட்டத்தின் மொத்த சொத்துக்களில் 65 சதவீதமாக பராமரிக்கப்பட வேண்டும்.
அபாயங்கள்: இந்த இரண்டு திட்டங்களும், நடுத்தர மற்றும் சிறிய அளவிலான நிறுவனங்களில் பந்தயம் கட்டுவதால், அவை அதிக ஆபத்தை கொண்டுள்ளன. எனவே அதிக வருமானம் பெறுவதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளன.
மிட் கேப் பண்டில் முதலீடு செய்ய முடிவு செய்வதற்கு முன், இது உங்கள் போர்ட்போலியாவின் அடித்தளத்தை உருவாக்க முடியாது என்பதை நினைவில் கொள்ளுங்கள். வருவாயை அதிகரிக்க உங்கள் ரிஸ்க் எடுக்கும் திறன் அளவிற்கு மட்டுமே இது சேர்க்கப்பட வேண்டும்.
4. பங்கு சார்ந்த சேமிப்பு திட்டங்கள் (ELSS): பங்கு சார்ந்த சேமிப்பு திட்டங்கள் என்பது பங்கு சார்ந்த பரஸ்பர நிதி முதலீடாகும். இது அதன் சொத்துக்களில் 80 சதவீதத்தை பங்கு அல்லது பங்கு தொடர்பான திட்டங்களில் முதலீடு செய்கிறது. ELSSல் செய்யப்படும் ரூ.1.5 லட்சத்துக்குள்ளான முதலீடுக்கு வருமான வரிச் சட்டத்தின் 80சி பிரிவின் கீழ், வரி விலக்கு பெறலாம்.
ELSSல் நீங்கள் முதலீடு செய்யும் தொகை உங்கள் வரிக்குரிய வருமானத்தில் இருந்து கழிக்கப்படும். இது வருமான வரியின் அளவை குறைக்கிறது மற்றும் நீங்கள் செலுத்த வேண்டிய வருமான வரியின் அளவைக் குறைக்கிறது.
ELSSல் முதலீடுகள் 3 ஆண்டு கால லாக் இன் காலத்திற்கு உட்பட்டவை என்று இந்தியாவின பரஸ்பர நிதி நிறுவனங்கள் சங்கம் தெரிவித்துள்ளது. நீண்ட காலத்துக்கு முதலீடு செய்ய வேண்டும் மற்றும் சில வரிகளை சேமிக்க வேண்டும் என்ற நோக்கம் இருந்தால் அதற்கு ELSS திட்டங்கள் ஒரு நல்ல முதலீட்டு சொத்தாக இருக்கும்.
இடர்பாடு: லாக் இன் காலம் முடிந்ததும் ELSS திட்டமானது சில சமயங்களில் நீங்கள் எதிர்பார்த்த லாபத்தை அளிக்காமல் போகலாம். எனவே அந்த திட்டத்தை மதிப்பாய்வு செய்து அதன் மோசமான செயல்திறனுக்கான காரணங்களை மதிப்பீடு செய்து, அதை தொடர வேண்டுமா அல்லது வெளியேற வேண்டுமா என்பதை முடிவு செய்யுங்கள்.
More From GoodReturns

தங்கம் விலை: திடீரென ரூட்டை மாற்றும் தங்கம்.. இப்போ தங்கம் வாங்குறது தான் புத்திசாலித்தனமா?

ஆரம்பமே அட்டகாசம்: நிதியாண்டின் முதல் நாளில் பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு சர்ப்பிரைஸ்!!

பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி!! சென்செக்ஸ் 1000 புள்ளிகளுக்கு மேல் வீழ்ச்சி!!

தங்கம், வெள்ளி விலை: வாரத்தின் முதல் நாளிலேயே குட் நியூஸ்..!! தங்கம் வாங்க சிறந்த நாள்..!!

இந்த வாரம் 4 நாட்கள், அடுத்த வாரம் 3 நாட்கள்: பங்குச்சந்தை முதலீட்டாளர்களே முதல்ல இத படிங்க

சரிவிலேயே இருக்கும் இந்திய பங்குச்சந்தை இந்த வாரமாவது மீண்டு வருமா?

ஆசை காட்டி மோசம் செய்யும் தங்கம்..!! ஆறுதல் தந்த வெள்ளி..!! இப்போ வாங்கலாமா? வெயிட் பண்ணலாமா?

பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு கருப்பு வெள்ளி..!! ஒரே நாளில் ரூ.8 லட்சம் கோடி அவுட்..!!

தங்கம் விலை: 2 நாட்களில் நடந்த திருப்பம்!! மார்ச் மாத மேஜிக் முடிவுக்கு வந்ததா?

பங்குச்சந்தை சரிவில் இந்த தப்பு மட்டும் பண்ணாதீங்க - முதலீட்டாளர்களுக்கு விஜய் கேடியா கூறும் டிப்ஸ்

திங்கட்கிழமை பங்குச்சந்தை ஒரு காட்டு காட்ட போகுது.. ஆனந்த் ஸ்ரீனிவாசன் வார்னிங்..!!



Click it and Unblock the Notifications