தங்க நகை வாங்குற பிளான் இருக்கா? உடனே வாங்கிடுங்க!! 6 மாசத்துக்கு அப்புறம் நினைச்சு கூட பார்க்க முடியாது!!

ஈரான் போர் காரணமாக ரெஸ்ட் மோடில் இருந்த தங்கம் விலை மீண்டும் வேகமெடுக்க தொடங்கியுள்ளது. போர் நிறுத்தம் மற்றும் அமைதி ஒப்பந்தம் கையெழுத்து தொடர்பாக திங்கள்கிழமை அறிவிப்பு வெளியான உடனே தங்கம் விலை உயர தொடங்கிவிட்டது. இனி வரும் நாட்களில் தங்கம் விலை உயர்வு வேகமெடுக்கும் என நிபுணர்கள் கணிக்கின்றனர்.

போர் காரணமாக கச்சா எண்ணெய் விலை உயர்ந்ததால் தங்கத்தை முதலீட்டாளர்கள் சீண்டவில்லை. தற்போது போர் முடிந்து ஒப்பந்தம் கையெழுத்தாகிவிட்டதால் கச்சா எண்ணெய் விலை சரிந்திவிட்டது. எனவே இனிமே லாபம் தரக்கூடியதாக தங்கம் தான் இருக்க போகிறது. இதனால் அடுத்த 6 மாதங்களில் தங்கத்தின் விலை சுமார் 40% வரை உயர வாய்ப்புள்ளதாக நிபுணர்கள் மற்றும் நிதி நிறுவனங்களின் கணிப்புகள் தெரிவிக்கின்றன.

தங்கம் வாங்குற பிளான் இருக்கா? உடனே வாங்கிடுங்க;6 மாசத்துக்கு அப்புறம் நினைச்சு கூட பார்க்க முடியாது

போர் முடிவுக்கு வந்ததால் முதலீட்டு சந்தையில் வரும் வாரம் முதல் அதிக அளவிலான பணம் தங்கத்தில் முதலீடு செய்யப்படும். எனவே டிமாண்ட் அதிகமாகி விலை உயரும். ஏற்கனவே சீனா மற்றும் பிற நாடுகளின் மத்திய வங்கிகள் தங்களின் இருப்புக்காக தொடர்ந்து டன் கணக்கில் அதிக அளவில் தங்கத்தை வாங்கி குவித்து வருகின்றன. குறிப்பாக சீனாவின் தங்கம் இறக்குமதி கணிசமாக உயர்ந்துள்ளது.

Also Read

அமெரிக்காவின் ஃபெடரல் வங்கி வட்டி விகிதங்களை மாற்றாமல் உள்ளது. வட்டி உயர்த்தப்பட்டிருந்தால் முதலீட்டாளர்கள் டாலர் பக்கம் சென்றிருப்பார்கள். ஆனால் அது நடக்கவில்லை என்பதால் இனி அவர்கள் கவனம் முழுக்க தங்கம் மீது தான் இருக்கும் என நிபுணர்கள் கூறுகின்றனர்.

சர்வதேச முன்னணி நிதி நிறுவனங்களான J.P. Morgan மற்றும் Goldman Sachs ஆகியவற்றின் புதிய அறிக்கைகளின்படி, தற்சமயம் சர்வதேச சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கம் சுமார் $4,300 டாலராக இருக்கும் நிலையில், இது 2026-ன் இறுதிக்குள் $6,000 முதல் $6,300 டாலர் வரை உயரக்கூடும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இது முந்தைய கணிப்புகளை விட 40% க்கும் மேல் அதிகம். அதாவது அடுத்த 6 மாதங்களில் தங்கம் விலை 40% உயரும் என்கிறது.

Recommended For You

இந்திய சந்தையை பொறுத்தவரை, தற்சமயம் 24 கேரட் தங்கம் 10 கிராம் சுமார் ரூ.1.48 லட்சம் முதல் ரூ.1.55 லட்சம் வரை விற்பனையாகும் நிலையில், அடுத்த 6 மாதங்களில் அல்லது இந்த ஆண்டின் இறுதிக்குள் இது ரூ.1.80 லட்சம் முதல் ரூ 2.3 லட்சம் வரை உயரக்கூடும் என Motilal Oswal போன்ற நிறுவனங்கள் கணித்துள்ளன. சில்லறை விற்பனையில் என பார்த்தால் இன்று 22 கேரட் ஆபரண தங்கம் ஒரு சவரன் 1,12,480 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. இதில் 40% என்றால் 1.5 லட்சம் ரூபாயை கடக்கும். அதாவது ஒரு சவரன் தங்கம் வாங்க ஒன்றரை லட்சம் ரூபாய் தேவைப்படுமாம்.

Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Goodreturns.in அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் "நாங்கள்" என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+