தங்கத்தின் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வந்தாலும் தங்கத்தை வாங்கும் போக்கு குறையவில்லை. பெரும்பாலான முதலீட்டாளர்களுக்கு தங்கத்தின் விலை அதிகரிப்பது அந்த சொத்தின் மீதான நம்பிக்கையையும் அதிகரிக்க செய்திருக்கிறது. எனவே தற்போதைக்கு தங்கத்தை வாங்கி வைத்தால் அடுத்த சில ஆண்டுகளில் அது இன்னும் பலமடங்கு லாபம் தரும் என எண்ணுகின்றனர்.
இவ்வாறு தங்கத்தை வாங்குவதற்கு பலரும் கிரெடிட் கார்டுகளை பயன்படுத்துகின்றனர். கிரெடிட் கார்டை பயன்படுத்தி தங்கம் வாங்குவது நல்ல முடிவாக இருக்குமா என்பது குறித்து தற்போது தெரிந்து கொள்ளலாம். கிரெடிட் கார்டு பயன்படுத்தி தங்கம் வாங்குவதற்கு இந்திய ரிசர்வ் வங்கி சில கட்டுப்பாடுகளை விதித்திருக்கிறது. இந்திய ரிசர்வ் வங்கி 2013 ஆம் ஆண்டில் தங்கத்திற்கான பரிவர்த்தனைகளை இஎம்ஐ-ஆக மாற்ற வேண்டாம் என வங்கிகளுக்கு உத்தரவிட்டது.

மேலும் வங்கிக் கிளைகளில் தங்க நாணயங்களை வாங்குவதற்கு கிரெடிட் கார்டு பயன்படுத்துவதற்கு தடை விதித்தது. இந்த கட்டுப்பாடுகள் இருந்தாலும் பல வங்கிகளும் விமான டிக்கெட்டுகள், மொபைல் போன்கள், மற்றும் தங்க நகைகள் போன்ற அதிக மதிப்புள்ள பரிவர்த்தனைகளுக்கு தொடர்ந்து இஎம்ஐ வசதிகளை வழங்கி வருகின்றன.
சில வங்கிகள் சில வியாபார நிறுவனங்களோடு ஒப்பந்தம் மேற்கொண்டு வாடிக்கையாளர்களுக்கு வட்டியில் தள்ளுபடி, செயலாக்க கட்டணத்தை குறைப்பது போன்ற சலுகைகளையும் வழங்குகின்றன. இந்த நிலையில் 2018 ஆம் ஆண்டு மீண்டும் ஒரு அறிவிப்பை வெளியிட்ட இந்திய ரிசர்வ் வங்கி கிரெடிட் கார்டு மூலம் தங்கம் வாங்குவதற்கு சில கட்டுப்பாடுகளை விதித்தது. இதனை தொடர்ந்து பல்வேறு முன்னணி வங்கிகளும் கிரெடிட் கார்டை பயன்படுத்தி தங்க நகை வாங்குவதற்கு இஎம்ஐ வாய்ப்புகளை இப்போது வழங்குவது கிடையாது.
கிரெடிட் கார்டில் தங்கம் வாங்கும் போது விசா, மாஸ்டர் கார்டு உள்ளிட்ட நிறுவனங்கள் செயலாக்க கட்டணம் விதிக்கும். அது 3.5 சதவீதம் அல்லது அதற்கு மேல் இருக்கும். அது தவிர மெர்ச்சன்ட் பீஸ் என ஒரு கட்டணம் வசூல் செய்யப்படுகிறது. உதாரணமாக மெர்ச்சன்ட் பீஸ் என்பது நீங்கள் வாங்கக்கூடிய பொருளின் மதிப்பில் 2.5 சதவீதம் மற்றும் ஒரு பரிவர்த்தனைக்கு 0.30 பைசா என வசூல் செய்யப்படுகிறது. அதாவது ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள தங்கத்தை நீங்கள் கிரெடிட் கார்டு கொண்டு வாங்கும் போது மெர்ச்சன்ட் கட்டணமாக 25 ரூபாய் 30 காசுகளை செலுத்த வேண்டி இருக்கும்.
கிரெடிட் கார்டு என வரும்போது நம் கையில் பணம் இல்லை என்றாலும் நமக்கு தேவையான நகையை நாம் உடனடியாக வாங்குவதற்கான வாய்ப்பினை வழங்குகிறது. சில கிரெடிட் கார்டு நிறுவனங்கள் 45 லிருந்து 50 நாட்கள் வரை வட்டி இல்லாமல் அசல் தொகையை மட்டும் செலுத்துவதற்கான வாய்ப்பை கூட வழங்குகின்றன. ஆனால் நீங்கள் முழு நிலுவை தொகையும் சரியான நேரத்தில் செலுத்தவில்லை என்றால் கிரெடிட் கார்டு வழங்கிய நிறுவனங்கள் உங்களுக்கான வட்டி கட்டணங்களை அதிகரிப்பதற்கான வாய்ப்பு இருக்கிறது.
சில நிறுவனங்கள் கேஷ் பேக், ரிவார்டுகள் உள்ளிட்டவற்றை வழங்கினாலும் அதனை வேறு கட்டணங்கள் மூலம் உங்களிடம் இருந்து வசூல் செய்துவிடும் . அதுமட்டுமின்றி பெரிய அளவிலான பரிவர்த்தனைகளை செய்யும்போது உங்களுடைய கடன் அளவு அதாவது நீங்கள் திரும்ப செலுத்த வேண்டிய கடன் அதிகரிக்கிறது. இது உங்களின் கிரெடிட் ஸ்கோரை பாதித்து எதிர்காலத்தில் நீங்கள் கடன் பெறுவதில் பிரச்சனையை ஏற்படுத்தலாம் .
More From GoodReturns

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

தங்கம் விலை அதிரடி உயர்வு.. மதுரையில் ஒரு கிராம் தங்கம் விலை என்ன தெரியுமா..?

கோயம்புத்தூர் மக்களே தங்கம் விலை உயர்ந்தது.. இனி ஒவ்வொரு ஸ்டெப்பும் கவனம் வைக்கனும்..!

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

சென்னை அசோக் நகர்.. ஒரே காரில்.. ரூ.77 கோடி தங்கம் - வெள்ளி.. பறக்கும் படை 'கப்'பென பிடித்தது..!!

மதுரை தங்கம் விலை அதிரடி உயர்வு.. ஈரான் போரில் நடந்த எதிர்பாராத டிவிஸ்ட்.. சர்ரென உயர்ந்த Gold Rate..!

தங்கம் விலை: 2 நாட்களில் நடந்த திருப்பம்!! மார்ச் மாத மேஜிக் முடிவுக்கு வந்ததா?

தங்கம் விலை சரிவு: கோயம்புத்தூர் மக்களே நகை வாங்க இன்று தான் நல்ல நாள்!!

தங்கம் விலை இனி எகிற போகுது: சிக்னல் தந்த உலக சந்தை..! ஈரான் போரில் நடந்த திடீர் திருப்பமே காரணம்?

கண்ணாமூச்சி ஆடும் தங்கம்.. ரிவர்ஸ் எடுக்கும் வெள்ளி..! இந்த 2 பேர் எடுக்கிற முடிவுல தான் எல்லாமே இருக்கு!



Click it and Unblock the Notifications