2025ஆம் ஆண்டு தங்கத்திற்கான ஆண்டு என கூறும் அளவுக்கு இந்த ஆண்டு மட்டும் 35% க்கும் மேல் தங்கம் விலை உயர்ந்துள்ளது. இதுவரை இல்லாத அளவு வரலாறு காணாத உச்சத்தை எட்டி தங்கம் சாமானிய மக்களுக்கு எட்டாக்கனியாக மாறி இருக்கிறது.
தங்கம் விலை உச்சத்தை எட்டியது, பண்டிகை காலம் தொடக்கம், ஜி.எஸ்.டி 2.0 சீர்திருத்தங்கள் மற்றும் பாதுகாப்பான முதலீட்டு விருப்பமான தங்கம் மாறி இருப்பது ஆகிய காரணங்களால் நகைத்துறை பங்குகள் கவனம் பெற்றுள்ளன. இப்படி தங்கம் விலை உச்சத்தில் இருக்கும் போது நகை கடை நிறுவன பங்குகளில் முதலீடு செய்யலாமா என்ற சந்தேகம் எழுகிறது.

கல்யாண் ஜூவல்லர்ஸ் , டைட்டன், சென்கோ கோல்ட் மற்றும் பி.என். காட்கில் ஜூவல்லர்ஸ் பங்குகள் செப்டம்பர் 11 அன்று சுமார் 0.25 முதல் 1 சதவீதம் வரை சரிந்தன. வர்த்தகம் பலவீனமாக இருந்தபோதிலும், எஸ்.எம்.சி குளோபல் செக்யூரிட்டிஸ் நிறுவனத்தின் மூத்த ஆராய்ச்சி ஆய்வாளர் சீமா ஸ்ரீவஸ்தவா, நகை பங்குகள் மீது நம்பிக்கையுடன் இருக்கிறார். அவர் டைட்டன், கல்யாண் ஜூவல்லர்ஸ் மற்றும் சென்கோ கோல்ட் பங்குகளை வாங்கலாம் என முதலீட்டாளர்களுக்குப் பரிந்துரை செய்கிறார்.
ஸ்ரீவஸ்தவா ரத்தினம் மற்றும் நகை தொழிலுக்கு நேரடி வரி நிவாரணம் கிடைக்கவில்லை என்றாலும், மற்ற துறைகளில் ஜி.எஸ்.டி விகித குறைப்பு நுகர்வோரின் செலவழிப்பு வருமானத்தை அதிகரிக்கலாம். இது, பண்டிகை காலங்களில் நகை தேவையை மறைமுகமாக உயர்த்தும் என எதிர்பார்ப்பதாக கூறுகிறார்.
நகை பங்குகளில் முதலீடு செய்யலாமா என்ற கேள்விக்கு, யா வெல்த் நிறுவனத்தின் இயக்குனர் அனுஜ் குப்தா , தங்கம் விலை உயர்வு குறுகிய காலத்தில் இருந்தால், அது நகை தயாரிப்பு நிறுவனங்களின் உபரி இருப்புக்கு லாபத்தை அளிக்கும். இதனால் நகை பங்குகள் உயரும் என்கிறார். தங்கம் விலை உயர்ந்தாலும் ஜிஎஸ்டி திருத்தம் பண புழக்கத்தை அதிகரித்து மக்கள் நகை வாங்கும் போக்கை அதிகரிக்கும் என கூறுகிறார்.
எஸ்.எம்.சி குளோபல் செக்யூரிட்டிஸ் நிறுவனத்தின் சீமா ஸ்ரீவஸ்தவா , முதலீட்டாளர்கள் தங்க முதலீட்டில் இருந்து பங்குகள் பக்கம் நகர்ந்து வருவதால், சிறந்த நகை பங்குகள் நல்ல வருமானத்தை அளித்துள்ளன. இருப்பினும், உலகளாவிய விலை ஏற்ற இறக்கம் மற்றும் குறைவான லாபம் போன்ற சவால்கள் இருப்பதை மறுப்பதற்கில்லை என்கிறார்.
தங்க நகை கடை நிறுவனங்களின் எதிர்கால வளர்ச்சி நிறுவனங்களின் உத்திகள் மற்றும் நுகர்வோர் உணர்வைப் பொறுத்து மாறும், திடமான அடிப்படை கூறுகள் மற்றும் சந்தைப் போக்குகளை அடிப்படையாகக் கொண்டு நகை பங்குகளில் முதலீடு செய்யலாம் என்கிறார்.
Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Goodreturns.in அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் "நாங்கள்" என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.
More From GoodReturns

முதலீட்டாளர்களுக்கு இன்ப அதிர்ச்சி: 1500 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்த சென்செக்ஸ்!!

திங்கட்கிழமை பங்குச்சந்தை ஒரு காட்டு காட்ட போகுது.. ஆனந்த் ஸ்ரீனிவாசன் வார்னிங்..!!

4 வார ஈரான் போர்.. தரைமட்டத்திற்கு வந்த டெக் பங்குகள்.. அமெரிக்க அலறல்..!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

மதுரை மக்களுக்கு குட்நியூஸ்.. தங்கம் விலையில் இன்றும் அதிசயம்.. வாங்க நல்ல வாய்ப்பு.. ஆனா ஒரு விஷயம்..!!

கோயம்புத்தூரில் தங்கம் விலை சரிவு.. வாரத்தின் முதல் நாளே சர்ப்ரைஸ்.. நல்ல சான்ஸ்..!

ஆசை காட்டி மோசம் செய்யும் தங்கம்..!! ஆறுதல் தந்த வெள்ளி..!! இப்போ வாங்கலாமா? வெயிட் பண்ணலாமா?

தங்கம் விலை: 2 நாட்களில் நடந்த திருப்பம்!! மார்ச் மாத மேஜிக் முடிவுக்கு வந்ததா?

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

கோயம்புத்தூர் மக்களே தங்கம் விலை உயர்ந்தது.. இனி ஒவ்வொரு ஸ்டெப்பும் கவனம் வைக்கனும்..!

மதுரை, திண்டுக்கல், தேனி மக்களே தங்கம் விலையில் திடீர் டிவிஸ்ட்.. நகை வாங்கும் முன் இதை படிங்க..!!



Click it and Unblock the Notifications