நம் வீடுகளில் தொடங்கி பல்வேறு நாடுகளின் மத்திய வங்கிகள் வரை பாதுகாப்பான முதலீடு என்றாலே தங்கம் தான் முதலில் நினைவுக்கு வரும். கடந்த 2020 ஆம் ஆண்டிலிருந்து உலக அளவில் தங்கத்தின் விலை வேகமான வளர்ச்சியை கண்டு வருகிறது. இதற்கு முக்கிய காரணம் மத்திய பல்வேறு நாடுகளின் மத்திய வங்கிகள் அதிக அளவில் தங்கத்தை வாங்கி குவித்தன.
வெள்ளி: தங்கத்திற்கான டிமாண்ட் அதிகரித்து அதன் விலையையும் அதிகரிக்கச் செய்தது. ஆனால் தற்போது மத்திய வங்கிகளின் இந்த போக்கு மாற்றமடைந்திருக்கிறது. மத்திய வங்கிகள் தங்கத்தை வாங்கி இருப்பு வைப்பதாகத்தான் நாம் இத்தனை நாட்கள் கேள்விப்பட்டிருக்கிறோம் ஆனால் முதன்முறையாக வெள்ளியை வாங்கி இருப்பு வைத்திருப்பது தெரிய வந்திருக்கிறது.

சவுதி அரேபிய வங்கி: சவுதி அரேபியாவின் மத்திய வங்கி அதிக அளவில் வெள்ளியை வாங்கி வைக்க தொடங்கி இருப்பதாக கிர்டான் ஏ ஷா என்ற நிதி ஆலோசகர் தன்னுடைய லிங்குடின் பக்கத்தில் தகவல் வெளியிட்டு இருக்கிறார் . அவர் வெளியிட்டுள்ள பதிவில் மத்திய வங்கிகள் பாரம்பரியமாக தங்கத்தை தான் வாங்கி தங்களுக்கான ஒரு சொத்தாக வைப்பார்கள் ஆனால் சவுதி அரேபியா நாட்டின் மத்திய வங்கி சமீப காலமாக வெள்ளியை வாங்கி வைத்திருக்கிறது என கூறியிருக்கிறார்.
வெள்ளி மீது கவனம்: பெரும்பாலான நாடுகளின் வங்கிகள் தங்கத்தின் மீது கவனம் செலுத்தி வந்த நிலையில் தற்போது அவர்களின் கவனம் வெள்ளியின் பக்கம் திரும்புவதை இது காட்டுகிறது என கூறி இருக்கிறார். சவுதி மத்திய வங்கி குறைந்த அளவிலான வெள்ளியை தான் வாங்கி இருக்கிறது என்றாலும் சங்கத்துக்கு மாற்றாக அவர்கள் வெள்ளியை நோக்கி திரும்புவது முக்கியமான ஒரு விஷயமாக நாம் கவனிக்க வேண்டும் என கூறியிருக்கிறார்.
அதிகரிக்கும் டிமாண்ட்: உலக அளவில் வெள்ளிக்கான டிமாண்ட் அதிகரித்திருக்கிறது என அவர் சுட்டிக் காட்டி இருக்கிறார் . வெள்ளி என்பது நகையாக மட்டுமில்லாமல் எலக்ட்ரானிக் பொருட்கள் ,5ஜி உள்கட்டமைப்புகள் ,சோலார் பேனல்கள் மற்றும் மின்சார வாகனங்கள் உள்ளிட்டவற்றில் அதிக அளவில் பயன்படுத்தப்படுகிறது . இதனால் உலக அளவில் வெள்ளிக்கான டிமாண்ட் அதிகரித்து அதன் விலையும் படிப்படியாக உயர்ந்து வருகிறது எனக் கூறியிருக்கிறார் . மேலும் செமி கண்டக்டர் உற்பத்தியிலும் வெள்ளியின் பங்கு முக்கியமானது என சுட்டிக்காட்டி இருக்கிறார்.
40% விலை உயர்வு: முன்னதாஜ உலக வெள்ளி கூட்டமைப்பு வெளியிட்டு இருக்கக்கூடிய தகவலின் படி தொடர்ந்து நான்காவது ஆண்டாக உலக அளவில் வெள்ளிக்கான சப்ளையில் தட்டுப்பாடு இருப்பதாக தெரிவித்திருக்கிறது. அதாவது வெள்ளிக்கான டிமாண்ட் அதிகரித்து சப்ளை குறைவாக இருப்பதாக கூறியிருக்கிறது. இதனால் வெள்ளியின் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது . 2025 ஆம் ஆண்டு தொடக்கத்தில் இருந்து தற்போது வரை உலக சந்தையில் தங்கத்தின் விலை 30 சதவீதம் உயர்ந்திருக்கிறது என்றால் வெள்ளியின் விலை 40 சதவீதம் அதிகரித்து இருக்கிறது. எனவே முதலீட்டாளர்கள் தங்களுடைய முதலீட்டு போர்ட்போலியோவில் 8% தங்கம், 15 % வெள்ளி என பிரித்து முதலீடு செய்வது சிறந்ததாக இருக்கும் என ஷா தன்னுடைய பதிவில் சுட்டிக்காட்டி இருக்கிறார்.
More From GoodReturns

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

மீண்டும் உயரும் தங்கம், வெள்ளி விலை: முதலீடு செய்ய இது உகந்த தருணமா? எவ்வளவு முதலீடு செய்யலாம்?

தங்கத்தைவிட வெள்ளி லாபமா? ரேஷியோ 72-ஐ தாண்டினால் என்னவாகும்?டாட்டா மியூச்சுவல் தரும் அப்டேட்?

டாடா மோட்டார்ஸ் பங்குகளை கைகழுவிய ராதாகிஷன் தமானி: சில்லறை முதலீட்டாளர்களே கவனம்..

ஒரு நேர சாப்பாட்ட நிறுத்திட்டு அந்த காசுக்கு வெள்ளி வாங்கி வைங்க!! ராபர்ட் கியோசாகி அதிரடி!!

கழுதை மேச்சா ரூ.50 லட்சம்!! அதுவும் அரசாங்கமே தருது!! வேற என்ன வேணும்? ஆரம்பிக்கலாமா?

பெண்களே இந்த மகளிர் தினத்துல இருந்து இதையெல்லாம் செஞ்சீங்கனா உங்க எதிர்காலம் வளமா இருக்கும்!!

40 வயதில் முதலீடு செய்ய தொடங்கினால் ரூ.3 கோடி சாத்தியமா? நிபுணர்கள் சொல்லும் அதிர்ச்சி உண்மை!

பணக்காரர்களின் ரகசியப் பாதை! ஏன் ராபர்ட் கியோசாகியின் முதலீட்டு டிப்ஸ் இன்றும் ஒரு மந்திரம்?

சம்பளம் vs செல்வம்: உங்கள் ரூ.70,000 மாத சம்பளம் ரூ.1 கோடி சொத்துக்கு சமம் - எப்படி தெரியுமா?

ரூ.4கோடி கார்பஸ்! உங்கள் ரிட்டையர்மென்ட்டை ராஜவாழ்க்கையாக்குவது எப்படி? கோடீஸ்வர கனவு நனவாகுமா?



Click it and Unblock the Notifications