கொரோனா வைரஸ் பிரச்சனையினால் ஊரே லாக்டவுனினால் முடங்கியுள்ள நிலையில், மறுபக்கம் சத்தமேயில்லாமல் தங்கம் ஆன்லனில் விற்பனை களைகட்டியுள்ளதாக கூறப்படுகிறது.
இதற்கிடையில் பெரிய பெரிய தங்க நகைகடைகள் அட்சய திருதியை நாளில் ஆன்லைன் வாயிலாக வாங்கலாம். அதற்காக வழிமுறைகளை வாடிக்கையாளர்களுக்கு இணையதளம் வாயிலாக அறிவித்தது.
நகை விற்பனை
மும்பை ஜூவல்லர்ஸ் அசோசியேஷனின் துணைத் தலைவரும் யுடி சவேரியின் உரிமையாளருமான குமார் ஜெயின் அறிக்கையின் படி, சாதாரனமான நேரத்தில் அட்சய திரிதியை போது மஹாராஷ்டிராவில் தங்க நகைகள் மற்றும் டைமண்ட் விற்பனை 200 கோடி ரூபாயாக இருக்கும். ஆனால் தற்போது லாக்டவுன் காரணமாக 10-20% மட்டும் வர வாய்ப்புள்ளது.
வாடிக்கையாளார்களுக்கு தள்ளுபடி
தங்க நகைகள் மீதான தொழிலாளர் கட்டணத்தில் 30% தள்ளுபடியையும் ஜெயின் கூறியுள்ளார். இதே வைரத்திற்கு 40%மும், இதே சில கிரெடிட் கார்டுகள் மூலம் வாங்குபவர்களுக்கு 5% தள்ளுபடியும் தனது உரிமையாளர்களுக்கு வழங்கி வருவதாகவும் தெரிவித்துள்ளார். எனினும் எந்த சலுகைகள் வழங்கினாலும், தள்ளுபடி கொடுத்தாலும், கடந்த ஆண்டிலை ஒப்பிடும்போது 80% குறையலாம் என்று கூறுகிறார் மற்றொரு நபர்.
என்ன சொல்கிறது சென்கோ தங்கம் மற்றும் வைரம்
கிழக்கு இந்தியாவின் மிகப்பெரிய சில்லறை வியாபாரியான சென்கோ தங்கம் மற்றும் வைர விற்பனையாளர், தங்கம் விலையில் கிராமுக்கு 400 ரூபாய் தள்ளுபடி வழங்கியுள்ளதாக தெரிவித்துள்ளார். இதே ஏப்ரல் 22 -27 காலகட்டத்திற்கு இந்த சலுகை செல்லுபடியாகும். லாக்டவுன் காலத்தில் இந்த விலை குறைப்பானது மக்களுக்கு பயன் அளிக்கும் என்றும் தெரிவித்துள்ளது.
இதைவிட இந்த நிறுவனம் தனது விற்பனையில் 1 சதவீதத்தினை பிரதமரின் கோவிட்-19 நிதிக்கு வழங்கி வருவதாகவும் தெரிவித்துள்ளது.
கல்யாண் ஜூவல்லர்ஸ் சலுகை
கல்யாண் ஜூவல்லர்ஸ் தங்க உரிமையாளர் சான்றிதழை வழங்கியுள்ளது. அதாவது அட்சய திருதியை நாளன்றோ, அதற்கு முன்பாகவோ கல்யாண் ஜூவல்லர்ஸ் நிறுவனத்தின் இணையதளத்தில் (https://at.kalyanjewellers.net/goc) வாடிக்கையாளர்கள் இந்த தங்க உரிமையாளர் சான்றிதழை பெற முடியும். இதில் 2 கிராம் அல்லது அதற்கு மேல் நகை வாங்க முடியும். அட்சய திருதியை நாளன்று அவர்களுக்கு கிடைக்குமாறு இ-மெயில், வாட்ஸ் அப் மூலமாக தங்க உரிமை சான்றிதழ் அனுப்பப்படும்.
எப்படி பெறுவது தங்கத்தினை?
தற்போது ஊரடங்கு காலம் என்பதலால் கடைகள் திறக்கப்பட்ட பிறகு வாடிக்கையாளர்கள் இந்த சான்றிதழைக் காண்பித்து தங்க நகை அல்லது நாணயங்களை 2020 டிசம்பர் 31-க்குள் பெற்றுக்கொள்ளலாம். ஒருவேளை, நகையை பெறும் நாளில் விலை குறைந்திருந்தால், குறைவான விலை கணக்கில் கொள்ளப்படும். இத்திட்டம் கடந்த 21-ம் தேதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மேற்கண்ட இணையதளத்தில் வாடிக்கையாளர்கள் தங்களது இருப்பிடம் உள்ளிட்ட விவரங்களை உள்ளீடு செய்து நகை வாங்க பதிவு செய்யலாம். அதோடு எஸ்பிஐ கார்டு உரிமையாளார்கள் 5% வரை கேஸ் பேக் ஆஃபர் பெற்றுக் கொள்ளலாம். இந்த சலுகையானது 1,250 ரூபாய் வரையில் இருக்கும் என்றும் கல்யாண் ஜுவல்லர்ஸ் தெரிவித்துள்ளது.
தனிஷ்க் ஜுவல்லரி சலுகை
தனிஷ்க் ஜுவல்லரி தங்க நகை மற்றும் டைமண்ட் நகைக்கான செய்கூலியில் 25% சலுகையும் வழங்கியுள்ளது. இந்த திட்டம் Gold Rate protection scheme திட்டத்தின் மூலம் வழங்கப்படுகிறது. இந்த திட்டம் நவம்பர் 2020 வரையில் நடைமுறையில் இருக்கும் என்றும் தெரிவித்துள்ளது.
பிஎன்ஜி ஜூவல்லர்ஸ்
187 வருட பழமையான பாரம்பரிய நகை விற்பனையாளாரான மஹாராஷ்டிராவினை சேர்ந்த பிஎன்ஜி ஜூவல்லர்ஸ் Vedhani E-Vouchers என்ற சலுகையினையும், Pure Price offer என்ற சலுகையினையும் அறிவித்துள்ளது.
இந்த ஈ-வவுச்சர்கள் மூலம் 1,2,5 & 10 கிராம் என்ற அளவில் தங்கம் கிடைக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் லாகடவுன் முடிந்த பிறகு வாடிக்கையாளர்கள் தங்கத்தினை பெற்றுக் கொள்ள முடியும் என்றும் கூறப்படுகிறது.
மலபார் கோல்டு
மலபார் கோல்டு ஜூவல்லரியை பொறுத்தவரையில் 30% செய்கூலியில் தள்ளுபடியும்,டைமண்ட் நகைகளுக்கு 20% தள்ளுபடியும் வழங்கப்படும் என்றும் அறிவித்துள்ளது. அதோடு, 5% எஸ்பிஐ கார்டு மூலம் சலுகையும் பெற முடியும் என்றும் கூறப்படுகிறது. இப்படியாக ஒவ்வொரு நிறுவனமும் தங்களது பங்குகளுக்கு சலுகைகளை வாரி வழங்குகின்றன.
More From GoodReturns

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

மதுரை தங்கம் விலையில் இன்று அதிரடி சரிவு..! தங்கம் வாங்க இதுதான் சரியான நேரம்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

தங்கம் விலை இனி எகிற போகுது: சிக்னல் தந்த உலக சந்தை..! ஈரான் போரில் நடந்த திடீர் திருப்பமே காரணம்?

மதுரை மக்களுக்கு குட்நியூஸ்.. தங்கம் விலையில் இன்றும் அதிசயம்.. வாங்க நல்ல வாய்ப்பு.. ஆனா ஒரு விஷயம்..!!

தங்கம், வெள்ளி விலை: வாரத்தின் முதல் நாளிலேயே குட் நியூஸ்..!! தங்கம் வாங்க சிறந்த நாள்..!!

தங்கம் விலை அதிரடி உயர்வு.. மதுரையில் ஒரு கிராம் தங்கம் விலை என்ன தெரியுமா..?

கோயம்புத்தூரில் இன்று தங்கம் விலை உயர்வு.. ஈரான் போருக்கு மத்தியில் மாட்டிக்கொண்ட தங்க நகை சந்தை..!

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

மதுரை தங்கம் விலை அதிரடி உயர்வு.. ஈரான் போரில் நடந்த எதிர்பாராத டிவிஸ்ட்.. சர்ரென உயர்ந்த Gold Rate..!

ஆசை காட்டி மோசம் செய்யும் தங்கம்..!! ஆறுதல் தந்த வெள்ளி..!! இப்போ வாங்கலாமா? வெயிட் பண்ணலாமா?



Click it and Unblock the Notifications