சென்னை: நாட்டிலேயே முன்னோடி திட்டமாக குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் 1000 ரூபாய் உரிமை தொகை வழங்கும் திட்டத்தை தமிழ்நாடு அரசு வெற்றிகரமாக செயல்படுத்தி வருகிறது. கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் தொடங்கப்பட்ட இந்தத் திட்டத்தின் வாயிலாக ரேஷன் அட்டை அடிப்படையில் தகுதி வாய்ந்த குடும்பத் தலைவிகள் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு மாதந்தோறும் 1000 ரூபாய் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டு வருகிறது.
கிட்டத்தட்ட 13 மாதங்களாக தமிழ்நாட்டை சேர்ந்த தகுதி வாய்ந்த குடும்பத் தலைவிகள் 1000 ரூபாய் மகளிர் உரிமை தொகையை பெற்று வருகின்றனர். அண்மையில் கூட அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் இந்த திட்டத்தில் பணம் பெற விண்ணப்பம் செய்திருப்பவர்களில் தகுதி வாய்ந்த அனைவருக்கும் 1000 ரூபாய் கிடைக்க வழிவகை செய்யப்படும் என கூறி இருந்தார். எனவே கூடிய விரைவில் தகுதி இருந்தும் விடுபட்ட பெண்களும் இந்த திட்டத்தில் 1000 ரூபாயை பெற உள்ளனர்.

பெண்கள் சரியாக திட்டமிட்டு முதலீடு செய்தால் இந்த 1000 ரூபாய் உரிமை தொகை பின்னாளில் அவர்களுக்கு பெரிய சேமிப்பாக மாறும். அந்த வகையில் 1000 ரூபாய் தொகையை சேமிப்பதற்கு நமது தபால் நிலையங்களில் என்னென்ன திட்டங்கள் இருக்கின்றன என்பதை நாம் தெரிந்து கொள்ளலாம்..
தொடர் வைப்பு நிதி: தபால் நிலையங்களில் National Savings Recurring Deposit Account(RD) எனப்படும் தொடர் வைப்பு நிதி திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இதில் உங்களுக்கு கிடைக்கும் 1000 ரூபாயை மாதந்தோறும் வரவு வைக்கலாம். இந்த திட்டத்தில் ஆண்டுக்கு 6.7% வட்டி வழங்கப்படுகிறது. இதில் ஒவ்வொரு காலாண்டிற்கும் உங்கள் கணக்கில் இருக்கும் தொகை காம்பவுண்டிங் முறையில் கணக்கீடு செய்யப்பட்டு வட்டி வரவு வைக்கப்படுகிறது.
சேமிப்பு நிதி: அதேபோல நம்முடைய தபால் நிலையங்களில் National Savings Time Deposit Account(TD) எனப்படும் ஃபிக்ஸடு டெபாசிட் திட்டமும் கிடைக்கிறது. இதில் குறிப்பிட்ட மாதங்களுக்கு 1000 ரூபாயை சேமித்து வைத்து முதலீடு செய்யலாம். இதில் குறைந்தபட்சம் ஆயிரம் ரூபாய் முதல் ஒருவர் டெபாசிட் செய்யலாம். நமது டெபாசிட் காலத்தை பொறுத்து வட்டி வழங்கப்படுகிறது. ஓராண்டு என்றால் 6.9%, 2 ஆண்டு என்றால் 7%, 3 ஆண்டுகள் என்றால் 7.1%, 5 ஆண்டுகள் என்றால் 7.5% என வட்டி கணக்கீடு செய்து வழங்கப்படுகிறது.
சுகன்யா சம்ரிதி திட்டம்: அடுத்ததாக உங்கள் வீட்டில் பெண் குழந்தைகள் இருந்தால் பெண் குழந்தைகள் பெயரிலும் நீங்கள் பணத்தை சேமித்து வைக்க முடியும். பின்னாளில் இது அவர்களின் மேற்படிப்புக்கு உதவியாக இருக்கும். உங்கள் வீட்டில் 10 வயதுக்கு உட்பட்ட பெண் குழந்தை இருந்தால் அவர்கள் பெயரில் தபால் நிலையத்தில் சுகன்யா சம்ரிதி சேமிப்பு எனப்படும் செல்வமகள் சேமிப்பு திட்டத்தில் முதலீடு செய்யலாம். இந்த திட்டத்தில் தற்போது 8.2% வட்டி வழங்கப்படுகிறது.
பொன்மகன் சேமிப்புத் திட்டம்: தமிழ்நாட்டில் ஆண் குழந்தைகளுக்கு என பொன்மகன் சேமிப்புத் திட்டம் என்ற பிரத்தியேக சேமிப்பு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் கீழ் குறைந்தபட்சம் 500 ரூபாயிலிருந்து முதலீடு செய்ய முடியும் இதில் ஓர் ஆண்டுக்கு 9.7 சதவீதம் வட்டி வழங்கப்படுகிறது.
மாதம் 1000 ரூபாய் வீதம், வருடத்திற்கு 12000 ரூபாய் தொகையை இதில் சேமித்தால் நீண்ட கால அடிப்படையில் இந்த தொகை பெரியதாக மாறுவது மட்டும் அல்லாமல் பிள்ளைகளின் படிப்பு செலவு, அவசர கால மருத்து செலவுகள், வீடு அல்லது வாகனம் வாங்கும் போது என வாழ்க்கையின் முக்கியமான கட்டத்தில் இந்த தொகை பெரிய அளவில் உதவும்.
இந்த 1000 ரூபாய் தொகை வருமானத்தில் பின்தங்கிய மக்களுக்கு மட்டுமே கொடுக்கப்பட்டாலும், இதை நிதி சுதந்திரத்திற்காகவும், ஆபத்து காலத்தில் பயன்படுத்துவதற்காகவும் வைத்துக்கொண்டால் முக்கியமான காலத்தில் ஏற்படும் நிதி தடுமாற்றத்தை எளிதாக ஒருவர் கடக்க முடியும்.
More From GoodReturns

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!

கேஸ் இணைப்பே வேண்டாம் என முடிவெடுக்கும் மக்கள்: LPG பிரச்சினைக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள மேஜர் மாற்றம்

TCS நிறுவனத்திற்கு பெரிய கும்பிடு போட்டு வெளியேறும் ஊழியர்கள்!! என்ன நடக்குது?

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

பெட்ரோல் விலை லிட்டர் ரூ.119, டீசல் விலை லிட்டர் ரூ.192: உண்மையை போட்டுடைத்த அரசு..!!

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?



Click it and Unblock the Notifications