பிரபல முதலீட்டாளரான மார்க் மோபியஸ் அனைவருமே தங்கள் போர்ட்போலியோவில் 10% தங்கத்திற்காக ஒதுக்க வேண்டும் என கூறி இருக்கிறார்.
அமெரிக்கா சீனா இடையிலான வர்த்தக போர் தற்காலிகமாக முடிவுக்கு வந்துள்ளது. பல்வேறு நாடுகளும் அமெரிக்காவுடன் வர்த்தக ஒப்பந்த பேச்சுவார்த்தையை நடத்தி வருகின்றன. இதன் காரணமாக உலகளவில் தங்கத்தின் விலை சற்றே குறைந்து வருகிறது. இத்தகைய சூழலில் தான் மார்க் மோபியஸ் தங்கத்தில் முதலீடு செய்வது குறித்து பேசியுள்ளார்.

பிஸ்னஸ் டுடேவுக்கு அவர் அளித்துள்ள பேட்டியில் தங்கத்தை நாணயம், நகை உள்ளிட்ட பிசிக்கல் வடிவங்களில் வாங்கி வைப்பது சிறந்தது என்றும் தானும் அவ்வாறு வைப்பத்திருப்பதாகவும் கூறியுள்ளார். தங்கத்தின் விலை நாளை எப்படி இருக்கும் அடுத்த வாரம் எப்படி இருக்கும் என்பதை நம்மால் கணிக்க முடியாது. அதனால் எப்போதுமே உங்கள் போர்ட்போலியோவில் தங்கத்திற்கு 10% ஒதுக்கீடு செய்துவிடுங்கள் என கூறியுள்ளார்.
தங்கம் விலை கணிக்க முடியாதது என்பதால் கையில் காசை வைத்து கொண்டு விலை குறைய வேண்டும் என காத்திருக்க வேண்டாம் என யோசனை கூறும் அவர் பணம் இருக்கும் போது தங்கம் வாங்கி வைத்துவிடுங்கள் என தெரிவித்துள்ளார். குறைந்தபட்ச தொகையாக இருந்தாலும் அதற்கேற்ப வாங்கி வையுங்கள் என தெரிவித்துள்ளார்.
முன்னதாக உலக அளவில் பொருளாதார நிலையற்ற தன்மை ஏற்பட்டதை அடுத்து மார்க் மோபியஸ் பணம் தான் தற்போதைக்கு அரசன் என தெரிவித்திருக்கிறார். அதாவது ரொக்கமாக பணத்தை கையில் வைத்திருப்பதே தற்போதைய சூழலுக்கு உகந்தது என அவர் கூறி இருந்தார். அடுத்த ஆறு மாத காலத்திற்கு சர்வதேச அளவில் வர்த்தக பதட்டங்கள் நிகழும் என கூறிய மார்க் மோபியஸ் தன்னுடைய பெரும்பாலான முதலீடுகளை தான் பணமாக்கி வைத்திருப்பதாக குறிப்பிட்டிருந்தார்.
மார்க் மோபியஸ் 30 ஆண்டு காலம் பங்குச்சந்தையில் முதலீடு செய்த அனுபவம் கொண்டவர். உலக அளவில் புகழ்பெற்ற முதலீட்டாளர்களில் ஒருவராகவும் இவர் இருக்கிறார். மார்க் மோபிஸ் கேபிடல் என்ற பெயரில் 300 மில்லியன் டாலர்கள் மதிப்பு கொண்ட சொத்து மேலாண்மை நிறுவனத்தை கடந்த ஆண்டு இவர் தொடங்கினார். இவர் எப்போதுமே தங்கத்தில் முதலீடு செய்வது தான் சரி என கூறி வருபவர்.
கடந்த மாதம் எல்லாமே தங்கம் உலக சந்தையிலும் உள்ளூர் சந்தையிலும் வரலாறு காணாத உச்சத்தை எட்டியது. வர்த்தக மோதல்கள், அமெரிக்கா பொருளாதார மந்த நிலை ஆகியவை காரணமாக அனைவருமே தங்கத்தில் முதலீடு செய்தனர். எனவே தங்கத்தின் விலை அதிகரித்து வந்தது. இந்தியாவிலும் பண்டிகை , அட்சய திருதியை ஆகியவை காரணமாக தங்கத்தின் டிமாண்டும் விலையும் அதிகரித்தது. கடந்த வாரம் முதல் சற்றே சரிய தொடங்கியுள்ளது.


Click it and Unblock the Notifications