சொந்த வீடு கனவு நனவாக .. குறைந்த வட்டியில் வீட்டுக் கடன்.. எந்த வங்கி பெஸ்ட்..!

இன்றைய காலகட்டத்தில் பலரின் வீட்டுக் கனவும் நனவாக வீட்டுக் கடன் என்பது மிக அவசியமாகும்.

வீட்டுக் கடன் என்பது இல்லையெனில் பலருக்கும் சொந்த வீடு கனவு என்பது கனவாகவே போய்விடும். அதுவும் சென்னை போன்ற பெருங் நகரங்களில் சாத்தியமில்லாத ஒரு விஷயம் எனலாம்.

சென்னை போன்ற பெருநகரங்களில் வாடகை கொடுக்கும் காசை வைத்திருந்தாலே, சொந்த வீட்டினை வாங்கி விடலாம். அந்தளவுக்கு கட்டணம் அதிகம்.

சொந்த வீடு தான் முடிவு

சொந்த வீடு தான் முடிவு

உண்மையில் சென்னை போன்ற பெரும் நகரங்களில் நல்ல வீடாக பார்த்தோம் எனில், மாதம் சுமார் 10,000 ரூபாயாவது வாடகை கொடுக்க வேண்டியிருக்கும். அது இருந்தாலே மாத இஎம்ஐ செலுத்தி விடலாம், அந்தளவுக்கு அதிகம் இன்று சென்னை மட்டும் அல்ல, தமிழகத்தின் மற்ற பகுதிகளிலும் வாடகை விகிதம் என்பது அதிகரித்துள்ளது. ஆக இதற்கெல்லாம் ஒரே முடிவு சொந்த வீடு தான்.

Array

Array

சமீபத்திய வாரத்தில் நாட்டின் முன்னணி பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ, குறைந்த வட்டி விகிதத்தினை மீண்டும் அதிகரித்துள்ளது. எனினும் நாம் இன்று பார்க்கவிருப்பது தனியாரை சேர்ந்த முன்னணி வங்கியான கோடக் மகேந்திரா வங்கி மற்றும் ஹெச்டிஎஃப்சி-யில் என்ன வட்டி விகிதம் என்று தான் பார்க்கவிருக்கிறோம்.

குறைந்த வீட்டுக் கடன் வட்டி

குறைந்த வீட்டுக் கடன் வட்டி

ஏப்ரல் 8, 2021 நிலவரப்படி, கோடக் மகேந்திரா வங்கியில் 75 லட்சம் ரூபாய் கடனுக்கு, 20 வருட காலத்திற்கு மாத இஎம்ஐ விகிதம் 56,582 ரூபாயாகும். வீட்டுக் கடன் வட்டி விகிதம் வருடத்திற்கு 6.65% ஆகும்.

இதே ஐசிஐசிஐ வங்கியில் வருடத்திற்கு வட்டி விகிதம் 6.70% ஆகும். இவ்வங்கியில் மாத இஎம்ஐ 56,805 ரூபாயாகும்.

 

Array

Array

ஹெச்டிஎஃப்சி லிமிடெட்டில் வருடத்திற்கு வட்டி விகிதம் 6.70% ஆகும். இதிலும் 75 லட்சம் ரூபாய்க்கு, மாத இஎம்ஐ 56,805 ரூபாயாகும்.

இதே பேங்க் ஆப் பரோடாவில் வருடத்திற்கு வட்டி விகிதம் 6.75% ஆகும். இதிலும் 75 லட்சம் ரூபாய்க்கு, மாத இஎம்ஐ 57,027 ரூபாயாகும்.

 

Array

Array

பஞ்சாப் நேஷனல் வங்கியில் வட்டி விகிதம் வருடத்திற்கு 6.80% ஆகும். இவ்வங்கியில் மாத தவணை தொகையாக 57,250 ரூபாயாகும்.

இதே டாடா கேப்பிட்டலில் வருடத்திற்கு வட்டி விகிதம் 6.80% ஆகும். இவ்வங்கியில் மாத தவணை தொகையாக 57,250 ரூபாயாகும். இதே பஜாஜ் பின்செர்வ்விலும் வட்டி விகிதம் 6.80% ஆகும்.

 

Array

Array

சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியாவிலும், பஞ்சாப் சிந்த் வங்கியிலும் வருடத்திற்கு வட்டி விகிதம் 6.85% ஆகும். இவ்வங்கிகளில் மாத தவணை தொகை 57,474 ரூபாயாகும்.

இதே கனரா வங்கி, யூனியன் பேங்க் ஆப் இந்தியா, ஆக்ஸிஸ் வங்கி, யூகோ வங்கி, ஐடிபிஐ வங்கி, பேங்க் ஆப் மஹராஷ்டிரா, எல்ஐசி ஹவுஸிங் பைனான்ஸ் உள்ளிட்ட வங்கிகள் மற்றும் தனியார் நிறுவனங்களில் வருடத்திற்கு வட்டி விகிதம் 6.90% ஆகும். இதன் படி மாத தவணை தொகையானது 57,698 ரூபாயாகும்.

 

Array

Array

எஸ்பிஐ, பேங்க் ஆப் இந்தியா, கன் பின் ஹோம்ஸில் வட்டி விகிதம் வருடத்திற்கு 6.95% ஆகும். மாத தவணை தொகை 57,923 ரூபாயாகும். வீட்டுக் கடனுக்கான வட்டி விகிதம் பல வருடங்களில் இல்லாத அளவுக்கு சரிவினைக் கண்டுள்ள நிலையில், இது சொந்த வீடு கட்ட அல்லது வாங்க சரியான நேரம் என்றே கூறலாம்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+