இந்திய ரிசர்வ் வங்கி பணவீக்கத்தினை கட்டுக்குள் கொண்டு வர, சில தினங்களுக்கு முன்பு வட்டி விகிதத்தினை 50 அடிப்படை புள்ளிகளை அதிகரித்துள்ளது.
இதன் எதிரொலியாக எல்ஐசி ஹவுஸிங் பைனான்ஸ் லிமிடெட் நிறுவனம் 50 அடிப்படை புள்ளிகள் வட்டி விகிதத்தினை அதிகரித்துள்ளது.
குறிப்பாக எல்ஐசி ஹவுஸிங் பிரைம் லெண்டிங் ரேட்டிங் (LHPLR) 0.50% வட்டி விகிதத்தினை அதிகரித்துள்ளது.
கூடுதல் சுமை
இதனால் எல்ஐசி ஹவுஸிங் பைனான்ஸ் வாடிக்கையாளர்கள் கூடுதல் சுமையை எதிர்கொள்ளலாம். இதனால் இனி மாத மாதம் செலுத்த வேண்டிய தவணை தொகை அதிகரிக்கலாம். இதனால் இனி கூடுதலாக செலுத்த வேண்டிய நிலைக்கு தள்ளப்படலாம். பண்டிகை காலத்தில் இந்த அறிவிப்பானது வந்துள்ள நிலையில், இது மேற்கோண்டு கூடுதல் சுமையை ஏற்படுத்தலாம்.
யாருக்கெல்லாம் பிரச்சனை
இதனால் புதிய வாடிக்கையாளர்கள் தொடங்கி, ஏற்கனவே வாடிக்கையாளர்களாக உள்ளவர்கள் வரையில் அதிக தொகை செலுத்த வேண்டிய நிலைக்கு தள்ளப்படலாம். இனி புதியதாக கடன் வாங்குபவர்களும் கூடுதல் சுமையை எதிர்கொள்ளலாம். குறிப்பாக விழாக்கால பருவத்தில் தேவை அதிகரிக்கலாம் என்ற நிலையில், இதன் தாக்கம் அதிகரிக்கலாம்.
ரிசர்வ் வங்கியின் நடவடிக்கை
எல்ஐசி ஹவுஸிங் பைனான்ஸின் இந்த நடவடிக்கையானது, இந்திய ரிசர்வ் வங்கி பணவீக்கத்தினை கட்டுக்குள் கொண்டு வர, 50 அடிப்படை புள்ளிகள் வட்டி விகிதத்தினை அதிகரித்தது. இதன் எதிரொலியாக பல்வேறு வங்கிகளும் கடன்களுக்கான வட்டி விகிதத்தினை அதிகரித்து வருகின்றன.
இனியும் அதிகரிக்கலாம்
தொடர்ச்சியாக கடந்த 5 மாதங்களில் 4 முறை வட்டி விகிதம் அதிகரித்துள்ள நிலையில், இது மேற்கொண்டு அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இது மேற்கொண்டு வீட்டுக் கடன், வாகனக் கடன், தனி நபர் கடன் விகிதத்தினை அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.
ஹெச் டி எஃப் சி
ஹெச் டி எஃப் சி நிறுவனம் RPLR விகிதத்தினை 50 அடிப்படை புள்ளிகள் அக்டோபர் 1 முதல் அதிகரித்துள்ளது. ஹெச் டி எஃப் சி கடந்த ஐந்து மாதங்களில் 7வது முறையாக வட்டி விகிதத்தினை அதிகரித்துள்ளது.


Click it and Unblock the Notifications