மோடி அரசு பட்ஜெட் 2023 அறிக்கையை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்த பின்பு மத்திய நேரடி வரி வாரியம் (CBDT) ஆயுள் காப்பீட்டு திட்டத்தின் மீது எவ்வாறு வரி விதிக்கப்படும் என்பது குறித்து புதிய வழிமுறையை வெளியிட்டது. அதாவது ஏப்ரல் 1, 2023 க்கு பின்பு வாங்கப்படும் ஆயுள் காப்பீட்டு திட்டங்களுக்கு 100 சதவீதம் வரி சலுகை கிடைக்காது என அறிவிக்கப்பட்டு உள்ளது.
ஆயுள் காப்பீடு திட்டம் தான் இல்லாத போது தன் குடும்பத்தில் நிதியியல் அடிப்படையில் பாதுகாக்கும் ஒரு கருவியாக இருக்கிறது. ஆனால் இது வருமான வரி சேமிக்கும் கருவியாகவும் உள்ளது. இந்த வேளையில் புதிய வழிமுறை பலருக்கும் அதிர்ச்சி அடைய செய்துள்ளது. இப்புதிய வழிமுறையால் யாருக்கு அதிக பாதிப்பு..? எவ்வாறு பாதிக்கிறது..? இந்த பாதிப்பு எப்போதில் இருந்து துவங்குகிறது..?

மோடி அரசு பட்ஜெட் 2023 அறிக்கையில் ஆயுள் காப்பீட்டு திட்டத்திற்கு வருடாந்திர ப்ரீமியம் தொகை 5 லட்சம் ரூபாய் அளவை தாண்டினால், அத்திட்டத்தின் முதிர்வு தொகைக்கு வருமான வரி விதிப்பு உள்ளது என அறிவித்துள்ளது. இதற்கான வழிமுறைகளை ஆகஸ்ட் 16, 2023ல் வெளியான அறிக்கையில் மத்திய நேரடி வரி வாரியம் தெரிவித்தது.
மத்திய நேரடி வரி வாரியம் வழிக்காட்டுதல் படி ஏப்ரல் 1, 2023 அன்றோ அதற்கு பின்போ ஆயுள் காப்பீட்டு திட்டத்தை வாங்கியிருந்தால், அதற்கான ப்ரீமியம் தொகை 5 லட்சத்தை தாண்டும் பட்சத்தில் வருமான வரி விதிப்பு உண்டு. இதேபோல் மார்ச் 31, 2023 ஆம் தேதி வரையில் விற்கப்பட்ட அனைத்து காப்பீடு திட்டத்திற்கு ப்ரீமியம் தொகை எவ்வளவு இருந்தாலும் அதற்கு முழு வருமான வரி சலுகை பொருந்தும்.
ஒன்று அல்லது பல ஆயுள் காப்பீடு திட்டங்கள் முதிர்வு அடைந்து பெறும் தொகைக்கு, பாலிசி காலத்தில் செலுத்தப்பட்ட ப்ரீமியம் தொகை அடிப்படையில் வரி விதிக்கப்படுகிறது. பாலிசி காலத்தில் செலுத்தப்பட்ட தொகை 5 லட்சத்தை தாண்டினால் ஆயுள் காப்பீட்டு முதிர்வு தொகையின் மீது வருமான வரி விதிக்கப்படும் என மத்திய நேரடி வரி வாரியம் வழிக்காட்டுதலில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
ஆனால் ஆயுள் காப்பீடு திட்டத்தை பெற்ற ஒருவர் மரணம் அடைந்து அத்தொகையை பெற்றால் எந்தொரு வரி இல்லாமல் முதிர்வு தொகையை பெற முடியும் எனவும் மத்திய நேரடி வரி வாரியம் வழிக்காட்டுதலில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
உதாரணம் 1:
ஏப்ரல் 1, 2022ல் 5 லட்சம் வருடாந்திர ப்ரீமியம் தொகை உடன் 50 லட்சம் ரூபாய்க்கு ஆயுள் காப்பீடு திட்டத்தை பெற்று இருந்தால், நவம்பர் 1, 2032-ல் 60 லட்சம் ரூபாய் கிடைக்கும். இதில் எவ்விதமான வருமான வரியும் இல்லை.
உதாரணம் 2:
இதேபோல் ஏப்ரல் 1, 2023ல் 6 லட்சம் வருடாந்திர ப்ரீமியம் தொகை உடன் 60 லட்சம் ரூபாய்க்கு ஆயுள் காப்பீடு திட்டத்தை பெற்று இருந்தால், நவம்பர் 1, 2033-ல் 70 லட்சம் ரூபாய் கிடைக்கும். இந்த முதிர்வு தொகைக்கு வருமான வரி விதிப்பு உள்ளது.
உதாரணம் 3:
இதேபோல் ஏப்ரல் 1, 2023ல் வாங்கப்பட்ட திட்டங்களின் வருடாந்திர ப்ரீமியம் தொகை 4.99 வரும் வரையில் வருமான வரி விதிப்பு இல்லை. இதற்கு முக்கிய காரணம் இந்த புதிய வழிமுறை 2023-24 ஆம் நிதியாண்டில் கணக்கில் வராது, இது முதிர்வு காலத்தில் கணக்கில் வைக்கப்படும்.
உதாரணம் 4:
இந்த நிலையில் ஏப்ரல் 1, 2024-ல் 1 லட்சம் வருடாந்திர ப்ரீமியம் தொகை உடன் 10 லட்சம் ரூபாய்க்கு ஆயுள் காப்பீடு திட்டத்தை பெற்று இருந்தால், நவம்பர் 1, 2034-ல் 12 லட்சம் ரூபாய் கிடைக்கும். இந்த முதிர்வு தொகைக்கு வருமான வரி விதிப்பு உள்ளது.
காரணம் 2023-24 முதல் 2033-24 வரையிலான காலக்கட்டத்தில் செலுத்தப்பட்ட ப்ரீமியம் தொகை 5 லட்சம் ரூபாயை தாண்டும் காரணத்தால் இதற்கு வருமான வரி விதிப்பு இருக்கும்.

மேலே உள்ள புகைப்படத்தின் X, A, B ஆகிய 3 திட்டங்களுக்கு வருமான வரி விதிப்பு கிடையாது. C திட்டத்திற்கு மட்டுமே வருமா வரி விதிப்பு உள்ளது காரணம் வருடாந்திர ப்ரீமியம் தொகை 5 லட்சம் அளவீட்டை தாண்டுகிறது.

இந்த புகைப்படத்தின் படி X திட்டத்திற்கு மட்டுமே வருமான விரி விதிப்பு இல்லை, காரணம் 2023-24 நிதியாண்டில் பெற்ற திட்டத்தில் வருடாந்திர ப்ரீமியம் 5 லட்சம் அளவீட்டை தாண்டாது தான். ஆனால் மற்ற 3 திட்டத்திற்கும் வருமான வரி விதிப்பு உள்ளது, காரணம் 2023-24 முதல் 2033-34 வரையிலான காலக்கட்டத்தில் செலுத்தப்பட்ட ப்ரீமியம் தொகை 5 லட்சத்தை தாண்டும் காரணத்தால் வரி விதிப்பு உள்ளது.
அதாவது 2023-24 நிதியாண்டில் பெற்ற திட்டத்தில் வருடாந்திர ப்ரீமியம் 5 லட்சத்தை தாண்டவில்லை எனில் முதிர்வு தொகைக்கு வருமான வரி இல்லை, இதுவே 2024-25 முதல் வாங்கப்படும் திட்டத்திற்கு பாலிசி காலத்தில் மொத்தமாக செலுத்தப்பட்ட ப்ரீமியம் தொகை 5 லட்சத்தை தாண்டுவதால் வருமான வரி விதிப்பு உள்ளது.
இதுவே பாலிசி காலத்தில் பாலிசிதாரர் மரணம் அடைந்தால் எவ்விதமான வரியும் இல்லை.
More From GoodReturns

1986-ல் ஒரு புல்லட் இவ்வளவு தானா? வைரலாகும் பழைய பில்! அப்பவே கெத்து தான்!

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

கிடுகிடுவென சரியும் தங்கம், வெள்ளி விலை! இது வாங்குவதற்கு சரியான நேரமா? நிபுணர்களின் அதிரடி ஆலோசனை!

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த ஷாக்.. கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரமா..? தங்கம் விலையில் Big Jump வரபோகுது..!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

டிரம்ப்-ன் அந்த ஒரு வார்த்தை.. ஈரான் அரசு கடும் கோபம்.. வெளியான உச்சக்கட்ட எச்சரிக்கை..!!



Click it and Unblock the Notifications