இன்றளவிலும் நெருக்கடியான நேரத்தில் மக்களுக்கு எளிமையாக மிக விரைவாக கிடைக்கும் கடன் என்பது நகைக்கடன் தான். இது சிறந்த ஆபரணமாக மட்டும் அல்லாமல், பல நடுத்தர குடும்பங்களில் அவசர தேவைக்கு ஆபத்பாந்தவனாக உதவுகிறது.
ஏனெனில் நினைத்த நேரத்தில் எந்த கேள்வியும் கேட்காமல் குறைந்த நேரத்தில் பணம் கிடைக்கும் என்றால் அது நகைக்கடன் தான். இதே மற்ற கடன்களுக்கு பல விதிமுறைகள், ஆவணங்கள் தேவைப்படும் நிலையில், நகைக்கடனுக்கு அப்படியில்லை.
ஆக குறைந்த நேரத்தில் பல லட்சம் கடன்களை பெற முடியும். வட்டியை மட்டும் செலுத்திக் கொண்டு, நம் கையில் பணம் இருக்கும்போது அசலை திரும்ப செலுத்திக் கொள்ளலாம் என்பதால், மக்களின் விருப்பமான ஒன்றாக இருக்கிறது.
தகுதியானவர்கள் யார்?
இந்த நகைக்கடனை பெற குறைந்தபட்சம் 18 வயது அல்லது அதற்கு மேற்பட்டவர்கள் பெற்றுக் கொள்ளலாம். உங்களது நகை குறைந்தபட்சம் 18 காரட் ஆவது இருக்க வேண்டும். கிரெடிட் ஸ்கோரும் ஏற்றதாக இருக்க வேண்டும். எனினும் குறைந்த அளவிலான கடன் களுக்கு இவை தேவையிருக்காது. பெரியளவில் நகைக்கடன் வாங்கும்போது தான் இது பார்க்கப்படுகிறது. உங்களது கிரெடிட் ஸ்கோரை பொறுத்து வட்டி விகிதம் தீர்மானிக்கப்படுகிறது. இது வங்கி மற்றும் நிதி நிறுவனங்களை பொறுத்து மாறுபடும்.
என்னென்ன ஆவணங்கள் தேவை?
தங்க நகைக்கடனுக்கோ பெரியதாக ஆவணம் ஒன்றும் தேவையில்லை. சொல்லப்போனால் உங்களது முகவரி சான்று மற்றும் அடையாள சான்று என இருந்தால் போதுமானது, சில வங்கிகள் போட்டோவினையும் கேட்கின்றன. ஆதார் கார்டு அல்லது பான் அட்டை அடையாள அட்டையாகவும், முகவரி ஆவணமாக ஓட்டுனர் உரிமம், ஆதார் கார்டு, தேர்தல் வாக்காளர் அடையாள அட்டை, மின்சார கட்டண ரசீது, டெலிபோன் பில் உள்ளிட்டவற்றை கொடுக்கலாம்.
எவ்வளவு கடன் பெறலாம்?
நகைக்கடன் மூலம் ஒரு தனி நபர் லட்சக்கணக்கில் கடன் வாங்கிக் கொள்ள முடியும். ஏனெனில் இந்த விகிதமானது ஒவ்வொரு வங்கியிலும் ஒவ்வொரு விதமாக உள்ளது. உதாரணத்திற்கு எஸ்பிஐ 20,000 ரூபாய் முதல் 20 லட்சம் வரையில் வாங்கிக் கொள்ளலாம். இதே வங்கி அல்லாத நிதி நிறுவனமான முத்தூர்ட் குறைந்தபட்சம் 1,500 ரூபாயிலிருந்து, அதிகபட்சம் எவ்வளவு வேண்டுமானாலும் வாங்கிக் கொள்ளலாம்.
என்னென்ன ஆவணங்கள் தேவை?
முகவரி சான்றாக ஆதார் கார்டு, பாஸ்போர்ட், வாக்காளர் அடையாள அட்டை உள்ளிட்ட பலவற்றையும் ஏற்றுக் கொள்கிறது.இதே அடையாள சான்றுக்காக பான் கார்டு உள்ளிட்ட ஆவணங்களையும் கேட்கிறது. எனினும் சில வங்கிகள் கூடுதலாக சில ஆவணங்களையும் கொடுக்கலாம்.
முக்கிய நன்மைகள்
உங்களின் அவசர தேவைக்கு இந்த கடன் பயன்படும். குறிப்பாக மருத்துவ மனை அவசரம், கல்விக் கட்டணம் உள்ளிட்ட பலவற்றிற்கும் தேவையான நேரத்தில் கடன் பெறலாம். இதனை பல வங்கிகளும், நிதி நிறுவனங்களும் வழங்குகின்றன. இதனால் நினைத்த நேரத்தில் வாங்க முடியும். இதற்கு உடனடியாக அடகு வைத்துக் கடன் பெற முடியும். மற்ற கடன்களுக்கு போல் அதிக ஆவணங்கள் தேவையில்லை. முன்னதாக கடனை செலுத்தினால் 1% தான் கட்டணம். வருமானம் ஆதாயம் தேவையில்லை.
நகைக்கடன் வாங்கும்போது கவனிக்க வேண்டியவை
மற்ற கடன்களுடன் ஒப்பிடும்போது நகைக்கடனுக்கு வட்டி சற்று குறைவு தான். மேலும் பாதுகாப்பானது. அதோடு இந்த வட்டி விகிதங்கள் வங்கிகளுக்கு வங்கி வித்தியாச்சப்படும். நிதி நிறுவனங்களிலும் வட்டி வித்தியாசப்படுவதால், உங்களுக்கு ஏற்றதொன்றை தேர்தெடுக்கலாம். இங்கு செயல்பாட்டில்க் கட்டணம் உண்டு. இதுவும் வங்கிக்கு வங்கி மாறுபடும். இது தவிர டாக்குமெண்ட் கட்டணம்,அப்ரைசர் கட்டணம், ஒவர்டியூ கட்டணம் உள்ளிட்டவற்றை கவனிக்க வேண்டும். கடனை திரும்ப செலுத்தும் கால அவகாசத்தினையும் கவனிக்க வேண்டும். எப்போதுமே நகைக்கடன் வாங்கும்போது ஒப்பிட்டு பார்த்து வாங்குவது நல்லது.
எந்த வங்கியில் எவ்வளவு வட்டி?
- பஞ்சாப் & சிந்த் வங்கி வருடத்திற்கு - 7%
- பேங்க் ஆப் இந்தியா வருடத்திற்கு - 7.35%
- எஸ்பிஐ-யில் வருடத்திற்கு - 7.5%
- கனரா வங்கியில் வருடத்திற்கு 0 7.65%
- யூனியன் வங்கியில் வருடத்திற்கு - 8.2%
- கர்நாடகா வங்கியில் வருடத்திற்கு - 8.37%
- இந்தியன் வங்கியில் வருடத்திற்கு - 8.5%
- யூகோ வங்கியில் வருடத்திற்கு - 8.5%
- ஃபெடரல் வங்கியில் வருடத்திற்கு - 8.5%
- பஞ்சாப் நேஷனல் வங்கியில் வருடத்திற்கு -8.75%
- ஜே & கே வங்கியில் வருடத்திற்கு - 8.85%
- சென்ட்ரல் பேங்கில் வருடத்திற்கு - 9.05%
- இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் வருடத்திற்கு - 9.25%
- ஹெச்டிஎஃப்சி வங்கியில் வருடத்திற்கு - 9.5%
- பேங்க் ஆப் பரோடாவில் - 9.6%
- தனலட்சுமி வங்கியில் - 9.7%
- கரூர் வைஷ்யா வங்கியில் வருடத்திற்கு - 10.1%
- ஐசிஐசிஐ வங்கியில் - 11%
- சவுத் இந்தியன் வங்கியில் 11.95%
- ஆக்ஸிஸ் வங்கியில் 12.5%
More From GoodReturns

தங்கம் - வெள்ளி விலையில் கனவிலும் நினைக்காத விஷயம் நடத்திருக்கு.. 23 நாளில் நடந்த மெகா மேஜிக்..!!

அலர்ட்.. தங்கம் ரூ.7300,வெள்ளி ரூ.15000 சரிவு.. Big drop.. சொல்லி வைச்ச மாதிரியே நடக்குதே..!

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!

பட்டென சரிந்த தங்கம் விலை.. சட்டென நகை கடைக்கு கிளம்புங்க.. ஆனா ஒரு விஷயம்..!!

கண்ணாமூச்சி ஆடும் தங்கம்.. ரிவர்ஸ் எடுக்கும் வெள்ளி..! இந்த 2 பேர் எடுக்கிற முடிவுல தான் எல்லாமே இருக்கு!

தங்கம் விலை 7 வது நாளாக வீழ்ச்சி:அடுத்த இலக்கு ரூ.1 லட்சமா அல்லது இன்னும் குறையுமா?

மதுரை மக்களே இன்று தங்கம் வாங்கலாமா? உங்க ஊரில் ஒரு சவரன் விலை என்ன?

கோவையில் இன்று தங்கம் விலை நிலவரம் என்ன? மக்கள் இன்று தங்கம் வாங்கலாமா?

கோயம்புத்தூர் தங்கம் விலை: தடாலடியாக சரிவு, முதலீட்டு செய்ய நல்ல வாய்ப்பு.. ஆனாலும் பொறுமையாக இருங்க..!!

தங்கம் விலை இனி எகிற போகுது: சிக்னல் தந்த உலக சந்தை..! ஈரான் போரில் நடந்த திடீர் திருப்பமே காரணம்?

தங்கம் விலை: 24 மணி நேரத்தில் 4 முறை மாறிய விலை!! ஈரான் போரால் நடக்கும் அக்கப்போர்!!



Click it and Unblock the Notifications