நாட்டில் கொரோனாவின் தாக்கம் மிகக் குறைவாக இருந்தாலும், அதனால் ஏற்பட்டுள்ள நிதி நெருக்கடியானது இன்னும் எவ்வளவு காலத்திற்கு இருக்கும் என்பது தெரியவில்லை.
இதற்கிடையில் நிலவி வரும் நிதி பிரச்சனையை சமாளிக்க தங்களின் கைகளில் இருக்கும் தங்கத்தினை அடகு வைத்து கடனாக பெற்று சமாளித்து வருகின்றனர்.
இன்றளவிலும் பல நடுத்தர குடும்பங்களில் தங்கம் வாங்கி வைப்பதே, அவசர தேவைக்கு உடனடியாக வைத்து பணம் பெறலாம் என்பதால் தான். இது பாரம்பரியத்தின் ஒரு அம்சமாக கருத்தப்பட்டாலும், இன்றைய நாளிலும் பல நடுத்தர குடும்பங்களில் அவசர தேவைக்கு ஆபத்பாந்தவனாக உதவுவது தங்கம் தான்.
பெரிதாக ஆவணங்கள் தேவையில்லை
ஏனெனில் நினைத்த நேரத்தில்? எந்த கேள்வியும் கேட்காமல்? குறைந்த நேரத்தில் பணம் கிடைக்கும் என்றால் அது நகைக்கடன் தான். இதே மற்ற கடன் களுக்கு பல விதிமுறைகள், ஆவணங்கள் தேவைப்படும் நிலையில், நகைக்கடனுக்கு அப்படியில்லை. ஆனால் நகைக்கடனுக்கோ அப்படியொன்றும் பெரியதாக தேவையில்லை. சொல்லப்போனால் உங்களது முகவரி சான்று மற்றும் அடையாள சான்று என இருந்தால் போதுமானது.
வட்டி விகிதம் எவ்வளவு?
நகைக்கடனுக்கான வட்டி விகிதம் என்பது வங்கிக்கு வங்கி மாறுபடுகிறது. இது 7% முதல் 29% வரை உள்ளது. வங்கி அல்லாத நிதி நிறுவனங்களை விட வங்கிகளில் வட்டி விகிதம் குறைவாகவே உள்ளது குறிப்பிடத்தக்கது. அதே போல செயல்பாட்டு கட்டணமும் வங்கிகளில் சற்று குறைவு தான்.
ஐஐஎஃப்எல்லில் வட்டி
இதே ஐஐஎஃப்எல் பைனான்ஸில் வட்டி விகிதம் வருடத்திற்கு 9.24% முதல் 24% வரையிலும், இதில் செயல்பாட்டுக் கட்டணமாக உங்கள் கடன் திட்டத்தினை பொறுத்தும் இருக்கலாம். இதில் கடனை திரும்ப செலுத்தும் காலம் 3 -11 மாதங்கள் ஆகும்.
கோடக் மகேந்திராவில் வட்டி விகிதம்
கோடக் மகேந்திரா வங்கியில் வட்டி விகிதம் 10 - 17% வரையில் உள்ளது. இதே செயல்பாட்டுக் கட்டணம் 2% வரையிலும் வசூலிக்கப்படுகிறது. இதில் கடன் தொகையானது 1.5 கோடி ரூபாய் வரையில் வழங்கப்படுகிறது. இங்கு காலஅவகாசம் 4 வருடம் வரையில் கொடுக்கப்படுகிறது.
பந்தன் வங்கியில் வட்டி
பந்தன் வங்கியில் வட்டி விகிதம் 10.99 - 18% வரையில் உள்ளது. இங்கு செயல்பாட்டுக் கட்டணமாக 1% வரையில் வசூலிக்கப்படுகிறது. இங்கு கடன் தொகையாக 10,000 ரூபாயில் இருந்து ஆரம்பிக்கிறது. இங்கு கால அவகாசம் மூன்று ஆண்டு வரையில் கிடைக்கிறது.
மணப்புரம் கோல்டு லோன்
மனப்புரம் பைனான்ஸில் வருடத்திற்கு வட்டி விகிதம் 12 - 29% வரையில் உள்ளது. இங்கு 1000 ரூபாய் முதல் 1.5 கோடி ரூபாய் வரையில் கடனாக பெற்றுக் கொள்ளலாம். இங்கு கால அவகாசம் 365 நாட்கள் வரையில் கிடைக்கிறது.
முத்தூட் பைனான்ஸ்
இதே முத்தூட் பைனான்ஸில் வட்டி விகிதம் 27% உள்ளது. இங்கு செயல்பாட்டு கட்டணமாக 1% வரையில் உள்ளது. இங்கும் கடன் தொகையாக 1500 ரூபாய் முதல் வழங்கப்படுகிறது. இங்கும் கடனை செலுத்தும் கால அவகாசம் 3 வருடம் வரையில் கொடுக்கப்படுகிறது.
வட்டி விகிதம் குறைவு தான்
பஞ்சாப் & சிந்த் வங்கியில் வட்டி விகிதம் வருடத்திற்கு 7 - 7.50% வரையில் விதிகப்படுகிறது. இந்த வங்கியில் செயல்பாட்டுக் கட்டணம் லோன் விகிதத்தினை பொறுத்து 500 ரூபாய் முதல் 10,000 ரூபாய் வரையில் வசூலிக்கப்படுகிறது.
கனரா வங்கியில் எவ்வளவு வட்டி?
கனரா வங்கியில் வட்டி விகிதம் வருடத்திற்கு வட்டி விகிதம் 7.35% ஆக வசூலிக்கப்படுகிறது. இதில் செயல்பாட்டுக்கு கட்டணம் கடன் தொகையில் 0.75% வரையில் வசூலிக்கப்படுகிறது. இதில் கடனை திரும்ப செலுத்தும் காலம் 1 வருடம் ஆகும்.
பிஎன்பியில் எவ்வளவு?
இதே பஞ்சாப் நேஷனல் வங்கியில் வட்டி விகிதம் 8.75% - 9% வரையில் உள்ளது. இங்கு உங்களது கடன் தொகையினை பொறுத்து 2% வரையில் வசூலிக்கப்படுகிறது. இதில் கடனை திரும்ப செலுத்தும் காலம் 1 வருடம் ஆகும்.
More From GoodReturns

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

தங்கம், வெள்ளி விலை தடாலடியாக உயர காரணம் என்ன? இனி வரும் நாட்கள் எப்படி இருக்கும்?

மதுரையில் தங்கம் விலை திடீர் உயர்வு..!! இன்று தங்கம் வாங்கலாமா? காத்திருக்கலாமா?

கோயம்புத்தூர் மக்களே உங்க ஊரில் இன்று ஒரு சவரன் தங்கம் விலை என்ன?

மதுரை தங்கம் விலையில் இன்று அதிரடி சரிவு..! தங்கம் வாங்க இதுதான் சரியான நேரம்?

மதுரை மக்களுக்கு குட்நியூஸ்.. தங்கம் விலையில் இன்றும் அதிசயம்.. வாங்க நல்ல வாய்ப்பு.. ஆனா ஒரு விஷயம்..!!

கோயம்புத்தூரில் தங்கம் விலை சரிவு.. வாரத்தின் முதல் நாளே சர்ப்ரைஸ்.. நல்ல சான்ஸ்..!

தங்கம், வெள்ளி விலை: வாரத்தின் முதல் நாளிலேயே குட் நியூஸ்..!! தங்கம் வாங்க சிறந்த நாள்..!!

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

தங்கம் விலை: 2 நாட்களில் நடந்த திருப்பம்!! மார்ச் மாத மேஜிக் முடிவுக்கு வந்ததா?

தங்கம் விலை அதிரடி உயர்வு.. மதுரையில் ஒரு கிராம் தங்கம் விலை என்ன தெரியுமா..?



Click it and Unblock the Notifications