பெண்களின் சேமிப்பை ஊக்குவிக்கும் விதமாக கடந்த 2023ஆம் ஆண்டு பட்ஜெட்டின் போது மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்த திட்டம் தான் மகிளா சம்மான் சேமிப்பு திட்டம். வரும் 2025ஆம் ஆண்டு மார்ச்31 ஆம் தேதியுடன் இந்த திட்டத்தின் காலம் முடிகிறது. எனவே பெண்கள் இந்த வாய்ப்பை தவறவிடாமல் இந்த திட்டத்தில் முதலீடு செய்து லாபம் பார்க்கலாம்.
மகிளா சம்மான் சேமிப்பு திட்டம்: பெண்கள், தங்கத்தை மட்டுமே பாதுகாப்பான முதலீடாக கருதக் கூடாது மற்ற திட்டங்களிலும் முதலீடு செய்ய முன் வர வேண்டும் என்ற நோக்கில் கொண்டு வரப்பட்டது தான் மகிளா சம்மான் சேமிப்பு திட்டம். கடந்த 2023ஆம் ஆண்டு பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட மகிளா சம்மான் சேமிப்பு திட்டம், பெண்களுக்கான குறுகிய கால சேமிப்பு திட்டம். இந்த திட்டம் வரும் 2025 மார்ச் 31 உடன் முடிகிறது.

வட்டி விகிதம் எவ்வளவு?: மகிளா சம்மான் சேமிப்பு திட்டத்தில் வங்கிகளின் FDஇல் கிடைப்பதை விட அதிக வட்டி கிடைக்கிறது. அதாவது ஆண்டுக்கு 7.5% வட்டி வழங்கப்படுகிறது. பொதுவாக எந்த ஒரு குறுகிய கால சேமிப்பு திட்டத்திலும் இவ்வளவு அதிக வட்டி கிடைக்காது.
எவ்வளவு முதலீடு செய்யலாம்?: மகிளா சம்மான் சேமிப்பு திட்டத்தில் பெண்கள் குறைந்தபட்சம் ரூ.1,000இல் தொடங்கி ரூ.2,00,000 வரை முதலீடு செய்ய முடியும். எனவே ஆயிரங்களில் இருந்தே சேமிப்பை தொடங்கி விடலாம். அடுத்த ஓராண்டுக்குள் முதலீடு செய்யும் வாய்ப்பு உள்ளது. எனவே பெண்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்வது நன்று.
ரூ.2 லட்சம் முதலீடு செய்தால் எவ்வளவு கிடைக்கும்?: உதாரணத்திற்கு கௌசல்யா என்பவர் மகிளா சம்மான் சேமிப்பு திட்டத்தில் ரூ.2,00,000 முதலீடு செய்கிறார் என வைத்துக் கொள்ளலாம். அவர் மார்ச் 1, 2024இல் முதலீடு செய்கிறார். இந்த திட்டத்தின் காலம் இரண்டு ஆண்டுகள். எனவே இரண்டு ஆண்டுகளில் அவரது முதலீடு ரூ.2,32,044ஆக உயர்ந்திருக்கும்.
அதாவது அவரது முதலீட்டு தொகை 2 லட்சம் ரூபாய்க்கு 2 ஆண்டுகளுக்கு 32,044 ரூபாய் வட்டி கிடைக்கும். இரண்டு ஆண்டுகளின் முடிவில் முதிர்வு தொகையாக 2,32,044 ரூபாய் கிடைக்கும்.
இந்த திட்டத்தில் வீட்டில் உள்ள பெண் குழந்தைகள் பெயரிலும் சேமிப்பை தொடங்க முடியும். ஒரு பெண் இந்த திட்டத்தில் முதலீடு செய்த 3 மாதங்களுக்கு பின் இரண்டாவது முறையாக மீண்டும் ஒரு முதலீட்டை தொடங்கலாம் என்பது இதன் சிறப்பு.
எப்படி முதலீடு செய்வது?: அருகில் உள்ள அஞ்சல் அலுவலகத்திற்கு சென்று எளிதாக முதலீட்டை தொடங்கலாம். முகவரி மற்றும் புகைப்படச் சான்றுகளை கொண்டு சென்று விண்ணப்பத்தை வாங்கி பூர்த்தி செய்து முதலீடு செய்யும் தொகையை செலுத்துங்கள். உடனே உங்கள் சேமிப்பு பத்திரம் வழங்கப்படும். இரண்டு ஆண்டுகள் முடிந்த பின் அதனை கொண்டு சென்று வட்டியையும் சேர்த்து முதிர்வு தொகையை பெற்றுக் கொள்ளலாம். இதில் கிடைக்கும் வட்டிக்கு வருமான வரி கிடையாது.
Story Written by: Devika


Click it and Unblock the Notifications