ராபர்ட் கியோஸாகி கடந்த 2008- 2009 ஆம் ஆண்டு உலக அளவில் ஏற்பட்ட நிதி நெருக்கடியை முன்கூட்டியே கணித்தவர். இவர் எழுதிய Rich dad Poor dad புத்தகம் மிகவும் பிரபலமானது. சர்வதேச பொருளாதார நிபுணரான ராபர்ட் கியோசாகி தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் ஃபாலோவர்களுக்கு தொடர்ச்சியாக உலக பொருளாதார நிலவரம் குறித்தும் முதலீட்டு ஆலோசனைகள் குறித்தும் பதிவு செய்து வருபவர் .
இவர் வெளியிட்டு இருக்கக்கூடிய ஒரு எக்ஸ் பதிவு பலரது கவனத்தையும் பெற்று இருக்கிறது . தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் பதிவு செய்திருக்கும் ராபர்ட் கியோசாகி நீண்ட காலமாகவே உலக பொருளாதார பெரிய சரிவை சந்திக்க போகிறது என கூறி வருகிறது. அந்த வகையில் பெரிய வீழ்ச்சி தொடங்கிவிட்டது என பதிவிட்டுள்ளார்.

பெரிய வீழ்ச்சி தொடங்கிவிட்டது, பல மில்லியன்கள் சரிய போகின்றன, வெள்ளி மற்றும் தங்கம், பிட்காயின், எரித்தியம் ஆகியவற்றில் முதலீடு செய்தவர்கள் பிழைப்பார்கள் என கூறியுள்ளார்., ராபர்ட் கியோசாகி கடந்த சில மாதங்களாகவே பங்குச்சந்தை சரியும் என தொடர்ச்சியாக கூறி வருகிறார். கடந்த ஜூன் மாதம் வெள்ளி விலை பல மடங்கு உயரும் என கூறினார். அதற்கு ஏற்ப செப்டம்பர், அக்டோபரில் வெள்ளி விலை வரலாற்று உச்சத்தை தொட்டது.
தற்போது மிகப்பெரிய அளவிலான சரிவு தொடங்கிவிட்டது பல மில்லியன்கள் வீழ்ச்சி அடையப் போகின்றன உங்களை பாதுகாத்துக் கொள்ளுங்கள் வெள்ளி ,தங்கம் ,பிட்காயின் முதலீட்டாளர்கள் பாதுகாப்பாக இருப்பார்கள் என பதிவு செய்திருக்கிறார். அவருடைய இந்த பதிவு உலகம் முழுவதும் கவனம் பெற்று இருக்கிறது.
தங்கம், வெள்ளி போன்ற உலோகங்களும் டிஜிட்டல் கரன்சிகளும் தான் பாதுகாப்பை தரும் முதலீடுகள் என அவர் கூறுகிறார். முதலீட்டாளர் அவினாஷ் மிஸ்ரா, ராபர்ட் கியோசாகி கூறுவதையும் தற்போதைக்கு அமெரிக்காவின் கடன்கள் அதிகரித்து இருப்பது, உலக பொருளாதார சூழல் ஆகியவற்றையும் பார்த்தால் பொருளாதார சரிவு ஏற்படும் என்பதாகவே தெரிகிறது என்கிறார், இதற்காகவே அதிகம் பிட்காயின்களை தான் வாங்கி இருப்பதாக தெரிவிக்கிறார்.
முதலீட்டு நிபுணர் ஜான்சே , ராபர் கியோசாகி கூறுவதை போல பெரிய சந்தை சரிவு இருக்காது என்றாலும் லேசான சரிவினை எதிர்பார்க்கலாம் என கூறுகிறார். உலக அளவில் ஏற்கனவே தங்கம் மற்றும் பிட்காயின் மதிப்பு வரலாற்று உச்சத்தை எட்டி தற்போது லேசான சரிவில் இருக்கின்றன. உலக பொருளாதாரத்தில் ஏதேனும் சிக்கல் நேர்ந்தால் உடண்டியாக தங்கம் விலையை தான் அது உயர்த்தும்.
Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Goodreturns.in அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் "நாங்கள்" என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.


Click it and Unblock the Notifications