தங்கம் நின்னு ஆடப் போகுது!! வெள்ளி ரெஸ்ட் எடுக்க போகுது!! இவங்களே இப்படி சொல்லிட்டாங்களே!!

தங்கம், வெள்ளி ஆகிய இரண்டுமே உலக அளவில் போட்டி போட்டுக் கொண்டு விலை ஏறி வருகிறது. இதற்கு முன்பெல்லாம் உலக பொருளாதாரத்திற்கு அச்சுறுத்தல் ஏற்படக்கூடிய ஒரு நிகழ்வு நடந்தால் தங்கத்தின் விலை தான் ஏறும். ஆனால் அண்மைக்காலமாக தங்கத்துக்கு நிகராக வெள்ளியின் விலை உயர்கிறது. இது முதலீட்டாளர்கள் மத்தியில் ஒரு குழப்பத்தை உண்டாக்கி இருக்கிறது.

தங்கத்தில் முதலீடு செய்யலாமா, ஆனால் தங்கத்தை விட வெள்ளி விலை குறைவாக உள்ளது, தங்கத்தை விட அதன் வளர்ச்சியும் அதிகமாக இருக்கிறது. ஆனால் முதலுக்கும் மோசம் வந்துவிட கூடாது. ஏற்கனவே பங்குச்சந்தை முதலீடுகள் படுத்துவிட்டன, மேலும் ஒரு நஷ்டத்தை எதிர்கொள்ள தயாராக இல்லை. இதுதான் பெரும்பாலான முதலீட்டாளர்களின் மனநிலை.

தங்கம் நின்னு ஆடப் போகுது!! வெள்ளி ரெஸ்ட் எடுக்க போகுது!! இவங்களே இப்படி சொல்லிட்டாங்களே!!

இந்த குழப்பத்திற்கு பதில் அளித்துள்ளது பிரபல தரகு நிறுவனமான மோதிலால் ஓஸ்வால். தங்கம் வெள்ளி விவகாரத்தை முதலீட்டாளர்கள் எப்படி கையாள வேண்டும் என்பதற்கான ஒரு தெளிவான விளக்கத்தை தந்திருக்கிறது. மோதிலால் ஓஸ்வால் பைனான்சியல் சர்வீசஸ் லிமிடெட் நிறுவனம் வெளியிட்டு இருக்கக்கூடிய அறிக்கையில் கடந்த 12 மாதங்களில் உலக அளவில் தங்கம் 80 சதவீதமும் வெள்ளி 200 சதவீதமும் வளர்ச்சி அடைந்திருப்பதாக தெரிவிக்கிறது.

வெள்ளியின் மதிப்பு 200 சதவீதம் உயர்ந்து விட்டது என்பதற்காக பணத்தை கொண்டு சென்று அதில் கொட்டாதீர்கள் என எச்சரிக்கை விடுத்திருக்கிறது. ஏனெனில் கடந்த ஓராண்டு காலத்தில் வெள்ளியின் விலை 200% வரை உயர்ந்து விட்டது இது மிக வேகமான வளர்ச்சி எனக் குறிப்பிடுகிறது. ஒரு பொருளின் விலை இவ்வளவு வேகமாக உயர்கிறது என்றால் அதே வேகத்தில் குறைய வாய்ப்புள்ளது என மோதிலால் ஓஸ்வாலின் அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.

தற்போதைய சூழலில் வெள்ளியில் முதலீடு செய்வது என்பது சற்றே அபாயமானது என குறிப்பிடுகிறது. தங்கம் தான் இன்றும் பாதுகாப்பான முதலீடாக திகழ்கிறது என சுட்டிக்காட்டுகிறது. ஏனெனில் தங்கத்தின் வளர்ச்சி மிதமான அளவிலேயே இருப்பதாக தெரிவிக்கிறது.

தங்கம் நின்னு ஆடப் போகுது!! வெள்ளி ரெஸ்ட் எடுக்க போகுது!! இவங்களே இப்படி சொல்லிட்டாங்களே!!

கோல்டு -சில்வர் ரேஷியோ எனப்படும் தங்கத்திற்கும் வெள்ளிக்கும் இடையேயான விலை விகிதம் இப்போது மிக குறைவாக உள்ளது . அதாவது வழக்கமாக 70 - 80 அவுன்ஸ் வெள்ளியை கொண்டுதான் ஒரு அவுன்ஸ் தங்கத்தை வாங்க முடியும் தற்போது வெள்ளியின் விலை பல மடங்கு உயர்ந்திருப்பதால் இந்த விகிதம் 50 ஆக குறைந்துவிட்டது. வரலாற்று ரீதியாகவே இந்த விகிதம் இந்த அளவுக்கு குறைகிறது எனும்போது மீண்டும் அது 70 அவுன்ஸ் என்று பழைய நிலைக்கு தான் வரும்.

அதாவது தங்கத்தின் விலை அடுத்த சில மாதங்களிலேயே வெள்ளியை விட வேகமாக உயரும் வெள்ளியின் விலை வேகமாக குறையும் என தெரிவிக்கிறது. அடுத்ததாக வெள்ளி விலை தற்போது அதிகபட்ச ஏற்ற இறக்கம் கொண்ட நிலையில் இருக்கிறது ஆனால் தங்கம் ஓரளவுக்கு நிலையான இடத்தில் நிற்கிறது. தற்போதைய போர் பதற்றம் , வர்த்தக பதற்றம் மற்றும் பொருளாதார மாற்றங்களுக்கு மத்தியில் வெள்ளியில் முதலீடு செய்வது அதிக ரிஸ்க் எடுக்க வழி வகுக்கும் என அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.

எனவே தங்கம் மற்றும் வெள்ளியில் முதலீடு செய்ய வேண்டும் அதில் லாபம் பார்க்க வேண்டும் என எண்ணுபவர்கள் தங்களுடைய பணத்தை பிரித்த முதலீடு செய்ய அறிவுரை வழங்குகிறது. அதாவது 75% தங்கத்திலும் 25% வெள்ளியிலும் முதலீடு செய்ய அறிவுரை வழங்குகிறது. தங்கத்தில் செய்யும் 75% முதலீடு பாதுகாப்பையும் நிலையான லாபத்தையும் தரும் வெள்ளியில் செய்யும் 25 சதவீதம் முதலீடு நீண்ட கால வளர்ச்சிக்கு வழிவகுக்கும் எனக் கூறுகிறது.

சுருக்கமாக கூறினால் வெள்ளி ஏற்கனவே வேகமாக ஓடி அதன் உயரத்தை எட்டி விட்டது இனி அது ரெஸ்ட் எடுக்க போகிறது, ஆனால் தங்கம் தற்போது ஓட தயாராகி வருகிறது எனவே தங்கத்தில் முதலீடு செய்வது தான் புத்திசாலித்தனம் என மோதிலால் ஓஸ்வால் அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.

Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Goodreturns.in அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் "நாங்கள்" என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+