தேசிய ஓய்வூதிய திட்டம் என்பது ஓய்வுகாலத்தினை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட சேமிப்பு திட்டமாகும்.
இது மக்களின் ஓய்வுகாலங்களில் நிதி பிரச்சனை இல்லாமல் இருக்கும் விதமாக உருவாக்கப்பட்ட திட்டமாகும். இது வயதான காலகட்டத்தில் நிதி ரீதியாக யாரையும் சாரமல் இருக்க பயனுள்ளதாக அமையும்.
மொத்தத்தில் வயதான காலத்தில் பயனாளர்களுக்கு பாதுகாப்பினை கொடுக்கிறது. இந்த திட்டத்தில் வரிச்சலுகையும் கிடைக்கிறது.
யார் யார் இணையலாம்
இந்த திட்டத்தினை ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையத்தால் (PFRDA) நிர்வகிக்கப்படுகிறது. முன்னதாக அரசு ஊழியர்கள் மட்டுமே பென்சன் பெற முடியும் என்ற சூழல் இருந்தது. ஆனால் தேசிய ஓய்வூதிய திட்டத்தின் மூலம் இந்தியர்கள் யார் வேண்டுமானாலும் இந்த தேசிய ஓய்வூதிய திட்டத்தினை தொடங்கிக் கொள்ளலாம். அதில் இது ஓய்வு காலத்திற்கு பிறகு மக்கள் பாதுகாப்புடன் இருப்பதற்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது.
யார் முதலீடு செய்யலாம்?
இந்த திட்டத்தினை தங்களது ஓய்வூகாலத்திற்கு மாத மாதம் வருமானம் வேண்டும் என நினைப்பவர்கள் முதலீடு செய்யலாம். ரிஸ்கும் எடுக்க விரும்பவில்லை. வருமானம் ஓரளவு கிடைத்தால் போதும். அதோடு செய்யும் முதலீடுக்கு வரிச் சலுகையும் வேண்டும். நீண்டகால நோக்கில் இந்த திட்டத்தினை தொடர்ந்து கொள்ளலாம் என நினைப்பவர்கள் மட்டுமே தொடர்ந்து கொள்ளலாம்.
பங்கு சந்தையில் எவ்வளவு?
இந்த ஓய்வூதிய திட்டமான இது ஈக்விட்டி மற்றும் கடன் சந்தையில் முதலீடு செய்யக் கூடிய வாய்ப்பினையும் கொடுக்கிறது. இது மாத மாதம் வருமானம் கிடைக்கவும், முதிர்வு காலத்தில் ஒரு கணிசமான தொகையினையும் பெற முடியும். இந்த என்பிஎஸ் திட்டத்தில் பங்கு சந்தையில் அதிகபட்ச வரம்பு என்பது 75% வரம்பாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
படிப்படியாக குறையும்
எனினும் இந்த 75% வரம்பானது 50 ஆண்டுகள் வரையில் மட்டுமே ஆகும். அடுத்ததாக ஒவ்வொரு ஆண்டு அதிகரிக்கும் பட்சத்தில் 2.5% உங்களது ஈவிட்டி முதலீடு குறையும், 50 வயதில் 75% ஈக்விட்டியில் செய்பவர், 60 வயதில் 50% மட்டுமே செய்ய முடியும்.
இரண்டு விதமான கணக்குகள்
இது டயர் 1 மற்றும் டயர் 2 கணக்குகள் என உண்டு. இதில் முதன்மை கணக்கு மூலம் ஆரம்பத்தில் 500 ரூபாய் செலுத்தி தொடங்கிக் கொள்ளலாம். அதன் பிறகு ஒவ்வொரு நிதியாண்டிலும் 1000 ரூபாய் செலுத்த வேண்டியிருக்கும்.
இதே இரண்டாவது கணக்கில் ஆரம்பத்தில் 1000 ரூபாய் செலுத்த வேண்டியிருக்கும். இந்த கணக்கில் இருந்து எப்போது வேண்டுமானாலும் டயர் ஃ கணக்கிற்கு பணத்தினை பரிமாற்றம் செய்து கொள்ளலாம்.
எந்த கணக்கு எப்படி தொடங்கலாம்
இதில் டயர் 1 கணக்கில் பணம் எடுப்பதில் கட்டுப்பாடுகள் உண்டு. டயல் கணக்கில் திரும்ப பெற்றுக் கொள்ளலாம். எனினும் டயர் 2 கணக்கினை தொடங்க டயர் 1 கணக்கு அவசியம்.
இந்த திட்டத்தில் முதலீடு செய்யப்படும் தொகையினை மூன்று வகையான போர்ட்போலியோக்களில் முதலீடு செய்து கொள்ளலாம். பங்கு சந்தை மற்றும் அரசு பத்திரங்கள், கடன் பத்திரங்கள் எல பலவற்றிலும் பிரித்து செய்யலாம்.
வரி சலுகை
இந்த திட்டத்தில் 80சிசிடி (1 பி)ன் படி 50,000 ரூபாய் வரையில் வரிச்சலுகை கிடைக்கும். இதே 80சி-யின் கீழ் 1,50,000 ரூபாய் வரையில் வரிச்சலுகை கிடைக்கும்.
More From GoodReturns

EMI-யும் கட்டியாச்சு,லாபமும் பார்த்தாச்சு! ரூ8 கோடியை வைத்து ரூ10 கோடி வீட்டை வாங்கிய சாதுர்ய நபர்!

வங்கி கடனை விட ஈஸி! உங்கள் PPF பணத்தை வைத்தே கடன் பெறலாம் - புதிய விதிமுறைகள் என்ன?

தங்கம் விலை: திடீரென ரூட்டை மாற்றும் தங்கம்.. இப்போ தங்கம் வாங்குறது தான் புத்திசாலித்தனமா?

முகேஷ் அம்பானிக்கு ரூ.1 லட்சம் கோடி நஷ்டம்; 2 நாட்களில் 6% சரிவடைந்த ரிலையன்ஸ் பங்கு மதிப்பு!!

5 ஆண்டுகளில் ரூ.1 லட்சத்தை ரூ.25 லட்சமாக மாற்றிய பென்னி ஸ்டாக்: உங்க போர்ட்போலியோவுல இருக்கா?

பங்குச்சந்தை ஏறினாலும், இறங்கினாலும் கண்டுக்காதீங்க: சென்செக்ஸ் சொல்லி தரும் பாடம் இது தான்!!

ஆரம்பமே அட்டகாசம்: நிதியாண்டின் முதல் நாளில் பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு சர்ப்பிரைஸ்!!

தங்கம், வெள்ளி விலை அடுத்த 1 வருடத்தில் எங்கிருக்கும்? இப்போது முதலீடு செய்வது லாபமா? நஷ்டமா?

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!

கேஸ் இணைப்பே வேண்டாம் என முடிவெடுக்கும் மக்கள்: LPG பிரச்சினைக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள மேஜர் மாற்றம்



Click it and Unblock the Notifications