இன்றைய நவீன உலகில், டிஜிட்டல் பேமெண்ட் தளங்கள் அதிகரித்துவிட்டன. இதனால் பண மோசடிகளும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. மக்களின் பணத்தை பறிக்க தினம் தினம் புதுப்புது யுக்திகளை கையாளுகின்றனர். போலியான அப்ளிகேஷன்களை வைத்து மோசடி செய்வது என அதிகரித்து வரும் மோசடிகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் இந்திய அரசு ஒரு தொலைபேசி எண்ணை அறிமுகப்படுத்தியுள்ளது. அதன் விவரங்கள் குறித்து இந்த பதிவில் பார்ப்போம்.
ஆன்லைன் மூலம் வங்கியில் உள்ள பணத்தை திருடுவது அதிகரித்துக் கொண்டே வருகிறது. உங்களுடைய தனிப்பட்ட OTP-யை பகிர்வதன் மூலமாகவும், தேவையற்ற லிங்க்குகளை கிளிக் செய்வதாலும், உங்களுடைய பேங்க் அக்கவுண்டில் இருந்து பணம் திருடப்படலாம். இதுபோன்ற சைபர் கிரைம் குற்றங்கள் தற்பொழுது அதிகரித்துக் கொண்டே வருகிறது.

மோசடி செய்பவர்கள் உங்கள் வங்கியில் இருந்து பேசுவதாக கூறி உங்கள் மொபைல் எண்ணிற்கு வரும் OTP-யைப் பெற்று பணத்தை திருடுகின்றனர். இது போன்ற மோசடிகளில் பலர் மாட்டிக்கொண்டு பணத்தை இழந்துள்ளனர். நீங்கள் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டிய முக்கியமான விஷயம் என்னவென்றால் வங்கியில் இருந்து கால் செய்து உங்களிடம் OTP-யை எப்பொழுதும் கேட்க மாட்டார்கள்.
சைபர் க்ரைம் தற்பொழுது பணம் மோசடி தொடர்பான சம்பவங்களைப் பற்றி புகார் செய்வதற்கு புகார் எண் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. உங்கள் பணம் மோசடி செய்யப்பட்டிருந்தால் 1930 என்ற எண்ணிற்கு கால் செய்து புகார் அளிக்கலாம். நீங்கள் புகார் செய்த அடுத்த 24 மணி நேரத்திற்குள் உங்கள் பணத்தைத் திரும்பிப் பெற முடியும்.
உங்கள் பணம் வங்கியில் இருந்து பறிப்போனால், இந்த எண்ணை தொடர்பு கொண்டு உங்கள் புகாரை பதிவு செய்யலாம். ஆன்லைன் மூலம் உங்கள் பணம் எந்த விதத்தில் பறிப்போனாலும் 1930 எண்ணை தொடர்பு கொண்டுப் புகார் அளிக்கலாம். நீங்கள் எவ்வளவு விரைவாக புகார் செய்கிறீர்களோ அவ்வளவு விரைவில் உங்கள் பணத்தை மீட்டெடுக்க முடியும்.
ஆனால் அதிக அளவிலான தொகையை இழக்கும் போது, அந்தத் தொகை திருப்பி கிடைக்குமா? கிடைக்காதா? என்ற அச்சம் பலருக்கும் இருக்கும். இதற்காகத்தான் முன்கூட்டியே பாதுகாப்பாக இருப்பது அவசியம்.
நிதி இழப்புகள் ஏற்படாமல் தடுப்பதற்கு உங்களுடைய பெற்றோர், குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நண்பர்கள் என அனைவரிடத்திலும் விழிப்புணர்வை அவ்வப்போது ஏற்படுத்துங்கள். மோசடிகள் குறித்து தெரியாத நபர்கள் யாரேனும் நெட் பேங்கிங் அல்லது டிஜிட்டல் பேமெண்ட் தளங்களை உபயோகித்தால் அவர்களுக்கும் சொல்லி புரிய வையுங்கள். இதுபோன்ற சிறு விஷயங்களை கடைப்பிடித்தாலே மோசடி சம்பவங்களை வெகுவாக குறைக்க முடியும்.


Click it and Unblock the Notifications