இந்தியாவை சேர்ந்த மிடில் கிளாஸ் மக்கள் தங்கம் வாங்கி வைப்பதற்கு முக்கிய காரணம் ஒரு அவசர தேவை என்றால் உடனடியாக தங்கத்தை அடகு வைத்து பணமாக மாற்றிக் கொள்ளலாம் . நம் கைவசம் இருக்கும் எந்த ஒரு சொத்தையும் இத்தனை எளிதாக நம்மால் அவசர தேவைக்கு பணமாக மாற்ற முடியாது.
உங்கள் கையில் தங்க நகை இருக்கிறது திடீரென ஒரு பணத் தேவை இருக்கிறது என்றால் உங்கள் வீட்டிற்கு அருகில் இருக்கக்கூடிய ஒரு வங்கிக்கோ அல்லது வங்கி சாராத நிதி நிறுவனத்திற்கு சென்றால் அடுத்த 15 நிமிடங்களில் அந்த நகையை அடகு வைத்து உங்களால் பணம் பெற்றுக் கொள்ள முடியும். இதனால் தான் சாமானிய மக்கள் எவ்வளவு விலை உயர்ந்தாலும் தங்களால் முடிந்த அளவுக்கு தங்கத்தை வாங்குகிறார்கள் .

அந்த வகையில் இந்தியாவில் தங்கத்திற்கான டிமாண்ட் ஒருபோதும் குறையாது. தங்க நகைகளை அடகு வைத்து கடன் வாங்கும் போக்கும் கடந்த சில ஆண்டுகளாகவே அதிகரித்து வருகிறது. தங்கத்தின் வரலாறு காணாத விலை உயர்வும் இதற்கு முக்கிய காரணம் . இந்தியாவில் பிரத்தியேகமாக தங்க நகை கடன் வழங்கும் நிறுவனங்கள் வேகமான வளர்ச்சி அடைந்து வருவதும் தங்க கடன் தந்தையின் வளர்ச்சிக்கு ஒரு முக்கிய சான்று.
தற்போது தங்க நகைக்கு மாற்றாக கோல்டு ஈடிஎஃப்கள், கோல்டு மியூச்சுவல் ஃபண்டு திட்டங்கள் மக்களிடையே புகழ்பெற தொடங்கியுள்ளன. நாம் எப்படி ஒரு அவசரத்திற்கு தங்கத்தை அடகு வைத்து கடன் வாங்குகிறோம் அதே போல நம்முடைய கோல்டு ஈடிஎஃப்களையும், கோல்டு மியூச்சுவல் ஃபண்டுகளையும் அடகு வைத்து கடன் வாங்க முடியுமா என்ற சந்தேகம் மக்கள் மத்தியில் எழுந்துள்ளது. இதற்கு அண்மையில் ரிசர்வ் வங்கி வெளியிட்ட வழிகாட்டி நமக்கு விரிவான விளக்கத்தை அளிக்கிறது.
ரிசர்வ் வங்கி 2025 ஆம் ஆண்டு ஜூன் 6ஆம் தேதி தங்கம் மற்றும் வெள்ளியை அடமானமாக வைத்து வழங்கப்படும் கடன்கள் தொடர்பாக ஒரு வழிகாட்டுதலை வெளியிட்டது . அதன்படி தங்கத்தை நகைகளாகவும் நாணயங்களாகவும் இருந்தால் மட்டுமே அடமானமாக பெற்று கடன் வழங்க வேண்டும். மற்ற எந்த வடிவிலான தங்கத்திற்கும் கடன் வழங்கக் கூடாது என ரிசர்வ் வங்கி தன்னுடைய வழிகாட்டுதலில் தெளிவாக குறிப்பிட்டு இருக்கிறது.

ரிசர்வ் வங்கி தன்னுடைய அறிக்கையில் கோல்டு ஜுவல்லரி , கோல்டு ஆர்னமென்ட்ஸ், கோல்டு காயின் என்ற மூன்று வார்த்தையை பயன்படுத்துகிறது. கோல்டு ஜூவல்லரி என்றால் நாம் அணிய கூடிய நகைகள், ஆர்னமென்ஸ்ட் என்றால் அலங்கார பொருட்கள் மற்றும் பாத்திரங்கள், காயின் என்றால் நாணயங்கள். எனவே இவற்றை அடமானமாக பெற்று மட்டுமே நிறுவனங்கள் கடன் வழங்கும்.
கோல்டு பார், கோல்டு ஈடிஎஃப், டிஜிட்டல் கோல்டு, கோல்டு மியூச்சுவல் ஃபண்டு ஆகியவற்றை ரிசர்வ் வங்கி முதன்மை தங்கம் அல்லது முதன்மை தங்கத்தால் ஆதரிக்கப்படும் முதன்மை சொத்துக்கள் என வரையறை செய்கிறது. எனவே இந்த முதன்மை தங்கம் என்ற வரையறையின் கீழ் வரக்கூடிய பொருட்களுக்கு வங்கிகள் கடன் வழங்க முடியாது.
அந்த வகையில் நாம் பார்க்கும்போது டிஜிட்டல் தங்கம், கோல்டு மியூச்சுவல் ஃபண்ட் மற்றும் கோல்டு ஈடிஎஃப், கோல்டு பார்களை நீங்கள் அடகு வைத்து வங்கிகளிலோ நிதி நிறுவனங்களிலோ ஒருபோதும் கடன் வாங்க முடியாது . எனவே தங்கத்தை நகையாகவும் , பொருளாகவும் நாணயமாகவும் இருந்தால் மட்டுமே உங்களால் அடகு வைத்து கடன் வாங்க முடியும் .
அப்படி பார்க்கும்போது தங்கம் நகை என்றால் ஒரு கிலோவிற்குள் தான் உங்களால் அடகு வைத்து கடன் வாங்க முடியும். அதேபோல தங்க நாணயத்தை அடகு வைக்கிறோம் என்றால் 50 கிராம்களுக்கு மேல் அடகு வைத்து கடன் வாங்க முடியாது . மேலும் தங்க கடனுக்கான காலமே 12 மாதங்கள் தான் , 12 மாதங்கள் முடியும்போது கடன் பெற்ற நபர் பணத்தை கொடுத்து அந்த தங்க நகையை மீட்க வேண்டும்.
More From GoodReturns

தங்கம் விலையில் அதிரடி திருப்பம்! டிரம்ப் கொடுத்த போர் நிறுத்த ட்விஸ்ட்! அடுத்து என்ன நடக்கும்?

தங்கம் விலையேற இதுதான் காரணமா? 23 மாதங்களாக தொடரும் வேட்டை!அமெரிக்காவையே ஓரங்கட்டிய நாடுகள்? ஏன்?

கோயம்புத்தூரில் இன்று ஒரு சவரன் தங்கம் விலை என்ன? இன்று தங்கம் வாங்கலாமா?

Gold price: நகை பிரியர்களுக்கு குட் நியூஸ் வருமா? 3வது நாளாக குறைந்த தங்கம் விலை மீண்டும் குறையுமா?

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

தங்கம் விலையில் நடந்த திடீர் டிவிஸ்ட்!! 6 மணி நேரத்தில் நடந்த அதிரடி மாற்றம்!!

தங்கம் , வெள்ளி விலை தடாலடி உயர்வு: இனி தங்கம் விலை உயர்வை கட்டுப்படுத்த முடியாது!!

கோவையில் இன்று தங்கம் விலை அதிரடி உயர்வு: சாமானிய மக்கள் அதிர்ச்சி!!

Gold விலை ஏறினாலும் தணியாத மோகம்! இந்தியர்களின் அதிரடி வேட்டை! கவலையில் நிதியமைச்சகம்?

தங்கம் விலை ஏற்ற இறக்கம் குறித்து கவலையே வேண்டாம்: இப்படி முதலீடு செஞ்சா லாபம் கொட்டும்!!

டிரம்ப் கவுன்ட்டவுன் ஸ்டார்ட்ஸ்! ஈரானுக்கு 48 மணிநேர கெடு- நாளைக்கு தங்கம் பங்குச்சந்தை என்னவாகுமோ?



Click it and Unblock the Notifications