உலக அளவில் வரலாற்று உச்சம் தொட்ட தங்கம், வெள்ளி விலைகள் ஒரு வார காலத்திலேயே பெரிய சரிவை சந்தித்துள்ளன. தங்கம், வெள்ளி ஆகிய இரண்டு அதிக ஏற்றம் , இறக்கத்தை காட்டும் நிலையில் முதலீட்டாளர்களுக்கும் சாமானிய மக்களுக்கும் இதை புரிந்து கொள்ள முடியவே இல்லையே என குழம்பி போயுள்ளனர்.
இந்த சூழலில் , 2022ஆம் ஆண்டிலேயே வெள்ளியின் விலை உயர்ந்த சரியாக கணித்த டிஎஸ்பி மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனத்தின் தலைமை ஆய்வாளர் சாஹில் கபூர், இந்த சமயத்தில் தங்கம், வெள்ளி முதலீட்டை எப்படி கையாள வேண்டும் என்பது குறித்து எச்சரிக்கையை வெளியிட்டிருக்கிறார்.

தற்போது அவர் அளித்திருக்கும் பேட்டியில் மிக எச்சரிக்கையாக தங்கம் மற்றும் வெள்ளி முதலீட்டைமேற்கொள்ள வேண்டும் என கூறியிருக்கிறார். ஏனெனில் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை பல்வேறு ஆபத்துகளை கொண்டதாக இருக்கிறது என கூறுகிறார். இந்த சமயத்தில் தங்கம் மற்றும் வெள்ளியில் புதிதாக முதலீடு செய்யாமல் காத்திருப்பது தான் சிறந்தது என்கிறார்.
ஏற்கனவே செய்த முதலீடுகள் அப்படியே இருக்கட்டும், புதிதாக எந்த ஒரு முதலீட்டையும் எடுக்காதீர்கள் என கூறி இருக்கிறார். ஏனெனில் தங்க சந்தையே தலைகீழாக மாறி இருக்கிறது என சுட்டிக்காட்டுகிறார். இதற்கு முன்பு மத்திய வங்கிகள் மற்றும் நகை விற்பனையாளர்கள் தான் உலக சந்தையில் அதிகமாக தங்கத்தை வாங்குவார்கள். இவர்களால் தான் தங்க வர்த்தகமே நடந்தது என்கிறார்.

2022 ஆம் ஆண்டிலிருந்து 2024 ஆம் ஆண்டு வரை ஒவ்வொரு ஆண்டும் சராசரியாக 1000 டன்களுக்கு மேல் தங்கத்தை மத்திய வங்கிகள் வாங்கின. ஆனால் இது 2025 ஆம் ஆண்டில் 20 சதவீதம் சரிந்து விட்டது என கூறுகிறார். அதே வேளையில் நகைகளுக்கான தேவை சரிவடைந்து இருப்பதையும் அவர் சுட்டிக் காட்டுகிறார். வழக்கமாக உலக அளவில் விற்பனை செய்யப்படும் தங்கத்தில் கிட்டத்தட்ட 50 சதவீத தங்கம் நகை வடிவமைப்புக்காக தான் செல்லும். ஆனால் தற்போது அந்த சப்ளையும் டிமாண்டும் குறைந்திருக்கிறது என்கிறார். 2025 ஆம் ஆண்டில் 2500 டன்கள் வரை நகை விற்பனையாளர்களால் தங்கம் வாங்கப்படும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் 1500 டன்கள் மட்டுமே வாங்கப்பட்டிருக்கிறது என கூறுகிறார்.
சர்வதேச சந்தையில் தங்கத்தை வாங்குபவர்கள் மாறி இருக்கிறார்கள். மக்கள் தங்கத்தை நகை, நாணயம் மற்றும் கட்டிகளாக வாங்காமல் ஈடிஎஃப் போன்ற வடிவங்களில் வாங்குகிறார்கள் என சுட்டிக்காட்டுகிறார். அதாவது தங்கத்தை வாங்குபவர்களும் தங்கத்தை வாங்கக்கூடிய வடிவமும் மாறி இருக்கிறது என்பதை தெரிவிக்கிறார். அதே போல வெள்ளி அதிக ஏற்ற இறக்கம் காணும் நிலையில் இருக்கிறது என்கிறார். இந்த இரண்டு உலோகங்களும் தங்களின் உண்மையான மதிப்பை எட்டிவிட்டு சரிந்துள்ளன என்பதால் காத்திருத்தல் நல்லது என்கிறார்.
ஏற்கனவே தங்கம், வெள்ளியில் முதலீடு செய்திருப்பவர்கள் மொத்தமாக அதில் இருந்து வெளியேற தேவையில்லை அது அப்படியே இருக்கட்டும் புதிதாக எந்த முதலீடு செய்யாதீர்கள் என்கிறார். உங்களுடைய போர்ட்போலியோவில் கணிசமான அளவு தங்கம், வெள்ளிக்கு என ஒதுக்கி வைத்துக் கொள்ளுங்கள் என சுட்டிக்காட்டுகிறார்.
தங்கம், வெள்ளி ஆகிய இரண்டிலும் ஒப்பிடும் போது அதிகமாக தங்கத்தை வாங்குங்கள், நீண்ட கால அடிப்படையில் சீரான வளர்ச்சியை இது தரும், வெள்ளி குறுகிய கால ஏற்ற இறக்கம் நிறைந்தது ஆனால் நீண்ட கால நோக்கத்தில் முதலீடு செய்யலாம், இருந்தாலும் வெள்ளியை விட தங்கத்தில் அதிக முதலீடு செய்வதே புத்திசாலித்தனம் என கூறுகிறார்.
Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Goodreturns.in அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் "நாங்கள்" என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.
More From GoodReturns

தங்கம் விலை $6,000-ஆ? அடுத்த வருஷம் இன்னும் மோசமா இருக்குமா? சாக்ஸோ வங்கி கொடுத்த ஷாக் ரிப்போர்ட்!

கடந்த ஆண்டு அட்சய திருதியை-இல் ஒரு சவரன் நகை வாங்கி இருந்தால் இன்று அதன் மதிப்பு என்ன தெரியுமா?

மதுரையில் தங்கம் விலை சரிந்தது: இன்று நகை வாங்கலாமா? மேலும் விலை குறையுமா?

Gold price today: தங்கம் வாங்க கடைக்கு போறீங்களா? சென்னை, கோவை, மதுரையில் ஷாக் கொடுக்கும் நிலவரம்?

குறையும் தங்கம் விலை ; உயரும் கச்சா எண்ணெய் விலை - ஈரான் பேச்சுவார்த்தை தோல்வியால் எல்லாமே மாறுது!!

தங்கம் , வெள்ளி விலை தடாலடி உயர்வு: இனி தங்கம் விலை உயர்வை கட்டுப்படுத்த முடியாது!!

தங்கம், வெள்ளி விலை சரிவு: ஈரான் போர் தீவிரமடைந்தால் இன்னும் தங்கம் விலை குறையுமா?

தங்கம் விலை: 11 நாட்களில் 5 நாட்கள் விலை ஏறி இருக்கு!! அப்போ அடுத்த வாரம் என்ன ஆகும்?

தங்கம் விலையில் அதிரடி திருப்பம்! டிரம்ப் கொடுத்த போர் நிறுத்த ட்விஸ்ட்! அடுத்து என்ன நடக்கும்?

கோவையில் இன்று தங்கம் விலை அதிரடி உயர்வு: சாமானிய மக்கள் அதிர்ச்சி!!

ரூ.1 லட்சத்துக்கு கீழ் தங்கமே வாங்க முடியாதா? குறைந்த விலையில் தங்கம் வாங்க வழியே இல்லையா?



Click it and Unblock the Notifications