இந்தியாவில் தங்கம் வாங்கும் போது 3% ஜிஎஸ்டி கொடுக்கிறோம், அதே தங்கத்தை லாபத்திற்கு விற்கும் போது மூலதன ஆதாய வரியையும் கொடுக்கிறோம். இந்த இரண்டு வரிகளுக்கும் நடுவில் உங்கள் லாபம் காணாமல் போகாமல் இருக்க வேண்டுமா? அதுவும் ஒவ்வொரு முதலீட்டிற்கும் ஏற்ப வரி விகிதம் மாறுபடுகிறது. தங்கம் முதலீடு என்பது பொதுவாக விலையை சார்ந்ததாக இருந்தாலும், அதன் வரி விகிதமானது ஒவ்வொன்றிற்கும் வேறுபடுகிறது.
தங்கம் மற்றும் வெள்ளி முதலீட்டில் நீங்கள் செய்யக்கூடாத தவறுகள் பற்றி தெரிந்துகொள்ள இதோ ஒரு குட்டி கைடு.

ஒவ்வொன்றுக்கும் வரி மாறுபடும்?
தங்கம்/வெள்ளியை நீங்கள் எந்த வடிவில் வைத்திருக்கிறீர்கள் மற்றும் எவ்வளவு காலம் வைத்திருக்கிறீர்கள் என்பதைப் பொறுத்தே வரி தீர்மானிக்கப்படுகிறது.
முதலீட்டாளர்கள் தங்கம் மற்றும் வெள்ளியை வாங்கும்போதே ஒரு குறிப்பிட்ட தொகையை வரியாகச் செலுத்துகிறார்கள், மீண்டும் விற்கும்போதும் லாபத்தில் ஒரு பகுதியை வரியாக இழக்கிறார்கள். வாங்கும்போது தங்கம் அல்லது வெள்ளியின் மதிப்பில் 3% ஜிஎஸ்டி விதிக்கப்படும். இது பிசிகல் (நகை, நாணயம்) மற்றும் டிஜிட்டல் தங்கம் இரண்டிற்கும் பொருந்தும். செய்கூலியை எடுத்துக் கொண்டால், நீங்கள் நகையாக வாங்கினால் அதன் செய்கூலிக்கு மட்டும் கூடுதலாக 5% ஜிஎஸ்டி விதிக்கப்படும்.
உதாரணத்திற்கு நீங்கள் ரூ.1,00,000 மதிப்புள்ள தங்கம் வாங்குகிறீர்கள் என வைத்துக் கொள்வோம். அதன் செய்கூலி 10,000 ரூபாய் எனில்:
தங்கத்திற்கான வரி (3%): ரூ.3,000
செய்கூலிக்கான வரி (5%): ரூ.500
மொத்த வரி: ரூ. 3,500
விற்கும்போது எவ்வளவு?
பிசிகல் தங்கம்/வெள்ளி - 24 மாதங்களுக்குள் விற்பனை செய்தால் குறுகிய கால ஆதாய வரி விதிக்கப்படும். இதனுடன் செஸ் வரியும் சேரும். உதாரணத்திற்கு 30% ஸ்லாப்-ல் இருந்தால் 31.2% வரியாக வசூலிக்கப்படும். இதையே 24 மாதங்கள் கழித்து விற்பனை செய்தால் நீண்ட கால மூலதன ஆதாய வரியாக 12.5% வசூலிக்கப்படும் (இன்டெக்சேஷன் பலன் இன்றி).
தங்க பத்திரம் (SGBs): ஆர்பிஐ வெளியிடும் தங்கப் பத்திரங்கள், பிசிகல் தங்கத்தை விட அதிக லாபகரமானவை. தங்கத்தின் சந்தை விலை உயரும் போது, உங்கள் முதலீட்டின் மதிப்பும் உயரும். அதோடு ஆண்டுக்கு 2.5% வட்டி (ஆறு மாதங்களுக்கு ஒருமுறை) உங்கள் வங்கி கணக்கில் நேரடியாக செலுத்தப்படும். இந்த தங்க பத்திரங்களை பொறுத்தவரை நீங்கள் எப்போது விற்கிறீர்கள் என்பது வரியை தீர்மானிக்கிறது. பத்திரத்தை வாங்கிய பிறகு 8 ஆண்டுகள் வரையில் காத்திருந்தால், முதிர்வடையும் போது வரி கிடையாது. இதுவே 5 - 8 ஆண்டுகளுக்குள் வெளியேறினால், 12.5% மூலதன ஆதாய வரி விதிக்கப்படும். இது 5 ஆண்டுகளுக்கு பிறகு விற்பனை செய்ய அனுமதிக்கப்பட்டாலும், அதற்கு முன்னதாகவும் சில முக்கிய காரணங்களுக்கு மட்டும் அனுமதிக்கப்படுகிறது. ஆக 12 மாதங்களுக்கு முன்னதாக நீங்கள் விற்பனை செய்தால் குறுகிய கால மூலதன ஆதாய வரியானது விதிக்கப்படும்.
மேலும் பத்திரத்தின் மூலம் கிடைக்கும் 2.5% வட்டிக்கு மட்டும், உங்கள் வருமான வரி வரம்பின் படி வரி செலுத்த வேண்டும்.
தங்கம் மற்றும் வெள்ளி இடிஎஃப் & மியூச்சுவல் ஃபண்ட்ஸ்: செபி அனுமதி பெற்றுள்ள இந்த திட்டங்கள், சுத்தமான தங்கம் மற்றும் வெள்ளியில் முதலீடு செய்கின்றன. மறுபுறம் தங்கம் மற்றும் வெள்ளி மியூச்சுவல் ஃபண்டுகள், தங்கம் மற்றும் வெள்ளி இடிஎஃப்-களில் முதலீடு செய்கின்றன. இடிஎஃப்-க்கள் மற்றும் மியூச்சுவல் ஃபண்டுகளின் நோக்கம் விலையுயர்ந்த உலோகங்களின் விலையை கண்காணிப்பதாக இருந்தாலும், வரி விகிதமும் ஒரே மாதிரியாகத்தான் இருக்கின்றன. தங்கம் இடிஎஃப் மற்றும் மியூச்சுவல் ஃபண்டுகள் முதலீடு செய்யப்பட்டு 12 மாதங்களுக்குள் விற்பனை செய்யப்பட்டால், வருமான வரி வரம்பின் ஸ்லாப் படி குறுகிய கால மூலதன ஆதாய வரி விதிக்கப்படுகிறது. இதே 12 மாதங்களுக்கு பிறகு விற்பனை செய்யப்பட்டால், நீண்ட கால மூலதன ஆதாய வரியாக 12.5% விதிக்கப்படுகிறது
Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Goodreturns.in அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் "நாங்கள்" என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.
More From GoodReturns

கோயம்புத்தூர் தங்கம் விலை: இன்று அதிரடி சரிவு! மார்ச் 6 நிலவரம், முதலீட்டாளர்கள் கவனிக்க வேண்டியவை

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

தங்கம் விலையில் நடந்த மேஜிக்!! 2026இல் இதுவே முதல்முறை!! இனி எதிர்பாராததை எதிர்பாருங்கள்!!

தங்கம் தந்த சர்ப்பிரைஸ்!! ரூ.5000க்கு மேல் விலை குறைவு!! நகை வாங்க இதை விட்டா சான்ஸ் கிடைக்காது!!

தங்கம், வெள்ளி விலை 3-8% சரியும் அபாயம்.. ஈரான் - அமெரிக்கா போருக்கு மத்தியில் திடீர் திருப்பம்..!!

தங்கம்,வெள்ளி விலையில் புது டிவிஸ்ட்!! போர் பதற்றத்துக்கு மத்தியில் தடாலடியாக குறைந்த விலை!!

உக்கிரமடையும் ஈரான் போர்: தங்கம், வெள்ளி விலை எவ்வளவு வரை உயரும்? இப்போது நகை வாங்கலாமா வேண்டாமா?

10 கிராம் தங்கம் 2 லட்சம் வரை உயர வாய்ப்பு..! தங்கம் $6000, வெள்ளி $100 எட்டுமா?

மீண்டும் விஸ்வரூபம் எடுக்கும் தங்கம், வெள்ளி.. ஈரான் - இஸ்ரேல் - அமெரிக்க தாக்குதலின் எதிரொலி..!!

பதறும் மத்திய கிழக்கு நாடுகள்.. எகிறும் தங்கம், வெள்ளி விலை! இனி என்னவாகும்?

டிரம்ப் அறிவிப்பால் இந்தியாவுக்கு சவால்.. ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொல்லும் முக்கிய தகவல்..!!



Click it and Unblock the Notifications