தீபாவளி போன்ற பண்டிகை நாட்களின் போது தங்கம் ,வெள்ளி உள்ளிட்டவற்றை வாங்குவது அடுத்த ஓராண்டு காலத்திற்கு மேலும் செல்வ வளத்தை கொண்டு சேர்க்கும் என்ற நம்பிக்கை இந்தியர்களிடையே பரவலாக நீடிக்கிறது. இதன் காரணமாக தான் தீபாவளியை ஒட்டி தங்கத்தின் விலை உயர்வும், தங்கத்திற்கான டிமாண்டும் பெருமளவில் பேசக்கூடிய ஒரு பொருளாக இருக்கிறது.
தங்கம் என வந்துவிட்டால் நகை தான் வாங்க வேண்டும் என்ற அவசியம் கிடையாது தங்கத்தை நாம் நகையாக மட்டுமில்லாமல் ஈடிஎஃப் திட்டங்கள் மற்றும் அரசு வெளியிடக்கூடிய தங்க பத்திர திட்டங்களிலும் முதலீடு செய்து நம்மால் எளிதாக லாபம் பார்க்க முடியும். அந்த வகையில் இந்த கட்டுரையில் நாம் தங்க நகை, ஈடிஎஃப் திட்டம் மற்றும் தங்க பத்திர திட்டம் உள்ளிட்டவற்றில் செய்யும் ஒரு லட்சம் ரூபாய் முதலீடு அடுத்த ஐந்து ஆண்டுகளில் நமக்கு எவ்வளவு திரும்ப வழங்கும் என்பதை தெரிந்து கொள்ள போகிறோம்.

Taxbuddy.com நிறுவனர் சுஜீத் பங்கார் தன்னுடைய லிங்குடின் பக்கத்தில் இந்தியர்கள் எந்த வடிவத்தில் அதிக தங்கம் வாங்குகிறார்கள் எதில் அவர்களுக்கு சிறந்த லாபம் கிடைக்கிறது என்பதை விரிவாக பதிவு செய்து இருக்கிறார். அவருடைய இந்த பதிவு இந்த தீபாவளிக்கு தங்கம் வாங்க வேண்டும் என்ற முடிவில் இருப்பவர்களுக்கு சரியான முடிவு எடுப்பதற்கு ஒரு வழிகாட்டியாக அமைந்திருக்கிறது.
பாரம்பரியம் என நாம் நினைக்கக்கூடிய ஒரு விஷயம் நமக்கு லாபமாக இருக்க வேண்டும் என அவசியம் கிடையாது, தங்கத்தை நாம் நாணயம் ,நகை ,கோல்டு ஈடிஎஃப் திட்டங்கள் மற்றும் தங்க பத்திரங்கள் என நான்கு வழிகளில் வாங்க முடியும் என கூறியுள்ளார். இந்த நான்கு முறைகளிலுமே அதற்கே உரிய சாதக பாதங்கள் இருக்கின்றன என குறிப்பிட்டு இருக்கிறார் .
ரூ.1 லட்சம் முதலீடு:
நாணயம்: 3% ஜிஎஸ்டி + 5% செய்கூலி + லாக்கர் கட்டணம்= ரூ.1,29,150
நகை: 3% ஜிஎஸ்டி + 20% செய்கூலி + லாக்கர் கட்டணம்= ரூ.1,44,600
ஈடிஎஃப்: எக்ஸ்பென்ஸ் ரேஷியோ மட்டுமே = ரூ.1,00,000
தங்க பத்திரம்: ஜிஎஸ்டி செய்கூலி , லாக்கர் இல்லை = ரூ.1,00,000
இந்த முதலீடுகள் 5 ஆண்டுகளில் எவ்வளவு வளர்ச்சி பெறும் என்பதையும் அவர் விரிவாக பதிவு செய்துள்ளார். இதன்படி
நாணயம்: ரூ.1,84,031 (CAGR 5.19%)
நகை: ரூ.1,85,963 (CAGR 3.66%)
ஈடிஎஃப்: ரூ.1,79,950 (CAGR 8.76%)
தங்க பத்திரங்கள்: ரூ. 2,02,274 (CAGR 10.59%)

அதாவது நம்முடைய 1 லட்சம் ரூபாய் முதலீட்டில் நமக்கு அதிக லாபம் தரக்கூடியதாக இருப்பது தங்க பத்திரங்கள் தான் என அவர் கூறுகிறார். தங்க நகை, நாணயங்கள் மீது செய்யும் முதலீட்டில் நமக்கு வருமானத்தில் கணிசமான பகுதி செய்கூலி, ஜிஎஸ்டி மற்றும் லாக்கர் பாதுகாப்பு , நீண்ட கால மூலதன ஆதாய வரியான 12.5% என சென்று விடும் எனவே நமக்கு மிஞ்சுவது சொற்ப தொகை தான் என கூறுகிறார்.
இதுவே ஈடிஎஃப் முதலீடுகள் என்றால் ஜிஎஸ்டி, செய்கூலி சேதாரம் செலவு இல்லை. ஆனால் எக்ஸ்பென்ஸ் ரேஷியோ மற்றும் 12.5% நீண்ட கால மூலதன ஆதாய வரி உண்டு. இதுவே தங்க பத்திரங்கள் எனில் ஜிஎஸ்டி, செய்கூலி சேதாரம் செலவு இல்லை, நம் முதலீட்டுக்கு ஆண்டுக்கு 2.5 % வட்டி மேலும் நீண்டகால மூலதன ஆதாய வரியில் இருந்து விலக்கு என பல நன்மைகள் இருக்கின்றன.
ஆனால் உடனே பணமாக்க முடியுமா என பார்த்தால் நகை, நாணயத்தை உடனே கடைக்கோ நிதி நிறுவனத்துக்கோ சென்று விற்பனை செய்யலாம் அல்லது அடகு வைத்து பணமாக்கலாம். ஈடிஎஃப் பங்குச்சந்தை நேரங்களில் விற்பனை செய்து பணமாக்கலாம். ஆனால் அன்றைய நாளின் தங்கம் விலை, குறிப்பிட்ட ஈடிஎஃப்பின் யூனிட் விலையை பொறுத்தது. தங்க பத்திரத்தை நாம் முதிர்வு காலம் வரை காத்திருக்க வேண்டும் அல்லது செகண்ட்ரி மார்க்கெட்டில் விற்கலாம். ஆனால் நாம் எதிர்பார்க்கும் விலை கிடைக்குமா என்பது சற்றே சந்தேகம் என பதிவு செய்துள்ளார்.
More From GoodReturns

17 ஆண்டுகளுக்குபிறகு கடும் வீழ்ச்சி கண்ட தங்கம்! திடீர் யூ டர்ன் அடித்த காரணம்? அடுத்த இலக்கு?

தங்கம், வெள்ளி விலை அடுத்த 1 வருடத்தில் எங்கிருக்கும்? இப்போது முதலீடு செய்வது லாபமா? நஷ்டமா?

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

தங்கம், வெள்ளி விலை சரிந்தது: இப்போதே முதலீடு செய்யலாமா? இன்னும் விலை குறையுமா?

டீ குடிக்கிற காசு போதும்!5 வருடத்தில் லட்சாதிபதி ஆக இந்த மேஜிக் கணக்கை பாருங்க!

மதுரை தங்கம் விலையில் இன்று அதிரடி சரிவு..! தங்கம் வாங்க இதுதான் சரியான நேரம்?

தங்கம் விலை அதிரடி உயர்வு.. மதுரையில் ஒரு கிராம் தங்கம் விலை என்ன தெரியுமா..?

கோயம்புத்தூர் மக்களே தங்கம் விலை உயர்ந்தது.. இனி ஒவ்வொரு ஸ்டெப்பும் கவனம் வைக்கனும்..!

சென்னை அசோக் நகர்.. ஒரே காரில்.. ரூ.77 கோடி தங்கம் - வெள்ளி.. பறக்கும் படை 'கப்'பென பிடித்தது..!!

ஆசை காட்டி மோசம் செய்யும் தங்கம்..!! ஆறுதல் தந்த வெள்ளி..!! இப்போ வாங்கலாமா? வெயிட் பண்ணலாமா?

ஆரம்பமே அட்டகாசம்: நிதியாண்டின் முதல் நாளில் பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு சர்ப்பிரைஸ்!!



Click it and Unblock the Notifications