தீபாவளிக்கு ஒரு கிராம் தங்கமாவது வாங்கணும்னு நினைக்கிறீங்களா? கடைக்கு போறதுக்கு முன்னாடி இத படிங்க!!

இந்தியாவில் வட மாநிலங்களில் எல்லாம் தீபாவளி பண்டிகை என்றாலே தங்கம் வாங்கி வைக்கும் பழக்கம் இருக்கிறது. தற்போது தென் மாநிலங்களிலும் அந்த பழக்கம் மெதுவாக பரவி வருவதை பார்க்க முடிகிறது.அதாவது தீபாவளி போன்ற பண்டிகை நாட்களில் தங்கத்தை வாங்கும்போது அது நமக்கு மேலும் செல்வத்தையும் வளத்தையும் வழங்கும் என்ற நம்பிக்கை மக்களிடையே பரவலாக காணப்படுகிறது . தீபாவளி பண்டிகைக்குள் தங்கம் ஒரு சவரன் ஒரு லட்சம் ரூபாயை எட்டி விடக் கூடிய சூழலில் இருக்கிறது. அந்த அளவிற்கு தங்கத்தின் விலை ராக்கெட் வேகத்தில் உயர்ந்து வருகிறது.

சர்வதேச பொருளாதார சூழல்கள் வர்த்தக மோதல்கள் என பல்வேறு காரணங்களும் தங்கத்தின் விலை உயர்வுக்கு காரணமாக அமைந்திருக்கின்றன. சென்னையில் தற்போது ஒரு நாளைக்கு இரண்டு முறை தங்கம் விலை என்பது உயர்த்தப்படுகிறது. ஒரு கிராம் ஆபரண தங்கத்தின் விலை 11,425 ரூபாய் என்றும் ஒரு சவரன் ஆபரண தங்கத்தின் விலை 91,400 என்றும் விற்பனை செய்யப்படுகிறது.

தீபாவளிக்கு ஒரு கிராம் தங்கமாவது வாங்கணும்னு நினைக்கிறீங்களா? கடைக்கு போறதுக்கு முன்னாடி இத படிங்க!!

தீபாவளிக்கு ஒரு கிராம் ஆவது தங்கம் வாங்கி வைத்துவிட வேண்டும் என எண்ணுபவர்கள் தங்க நகை கடைக்கு செல்வதற்கு முன்னர் குறிப்பிட்ட சில விஷயங்களை தெரிந்து கொண்டு செல்வது நல்லது. தீபாவளி பண்டிகை அதுவும் தங்கத்தை வாங்குகிறோம் , உலகிலேயே மதிப்பு மிக்க உலோகத்தை வாங்குகிறோம் அதற்கு முன்பாக சில விஷயங்களை கவனித்தால் பெரிய ஏமாற்றங்களில் இருந்து நம்மால் தப்பிக்க முடியும்.

இன்றைய விலை: கடைக்கு செல்வதற்கு முன் அன்றைய நாளில் தங்கத்தின் விலை எவ்வளவு என்பதை தெரிந்து கொண்டு செல்வது நல்லது. தங்கம் விலையை பொருத்தவரை இந்தியாவில் எல்லா நகரங்களிலும் ஒரே மாதிரியாக இருப்பதில்லை . அது நகரத்திற்கு நகரம் சிறிய வேறுபாட்டுடன் தான் இருக்கிறது. எனவே கடைக்கு செல்வதற்கு முன்பாக அன்றைய தினம் தங்கத்தின் விலை என்ன என்பதை தெரிந்து கொள்ளுங்கள். தற்போது சென்னையில் ஒரு நாளைக்கு இரண்டு முறை தங்கம் விலை மாற்றம் செய்யப்படுகிறது . எனவே விலை தெரிந்து கொண்டு அதற்கு ஏற்ப உங்கள் திட்டத்தை முடிவு செய்து கொள்வது நல்லது.

முதலில் கவனிக்க வேண்டியது: நகை வாங்கும் போது போலி நகைகள் வாங்காமல் தப்பிப்பதற்கு முதலில் நீங்கள் வாங்கக்கூடிய நகை எத்தனை கேரட் என்பதை தெரிந்து கொள்ளுங்கள். அத்தனை கேரட்டிற்கும் ஏற்றபடி அதில் ஹால்மார்க் முத்திரை இடப்பட்டு இருக்கிறதா என்பதை கவனிப்பது அவசியம். ஹால்மார்க் இருந்தால் தான் அது உண்மையான தூய்மையான தங்கம் . அதில் இருக்கக்கூடிய எண் தான் நீங்கள் வாங்கக்கூடிய தங்கத்தின் தூய்மை தன்மையை காட்டுகிறது. எனவே ஒரு சிறிய மூக்குத்தி வாங்கினால் கூட அதில் ஹால்மார்க் குறியீடு இருக்கிறதா என்பதை கவனிப்பது நல்லது. இல்லையென்றால் நீங்கள் ஏமாந்து தான் போவீர்கள்.

தீபாவளிக்கு ஒரு கிராம் தங்கமாவது வாங்கணும்னு நினைக்கிறீங்களா? கடைக்கு போறதுக்கு முன்னாடி இத படிங்க!!

செய்கூலி : நகை கடைகளில் இருப்பவர்கள் நகைகளை விற்க வேண்டும் என்பதற்காக நீங்கள் ஒரு நகை தேர்வு செய்யும் போது ஒரு கணக்கினை கூறுவார்கள் நீங்கள் கட்டணம் செலுத்தும் போது ஒரு கணக்கினை கூறுவார்கள். எனவே எப்பொழுது நீங்கள் தங்கத்தை வாங்கினாலும் குறிப்பிட்ட சில நகைகளை தேர்ந்தெடுத்து வைத்துவிட்டு நகைக்கடையில் வேலை செய்பவர்களிடம் இந்த நகை எவ்வளவு எடை கொண்டது இதற்கு எவ்வளவு செய்கூலி செய்தாரம் ஜிஎஸ்டி எவ்வளவு என மொத்த தொகையையும் அப்போதே கணக்கிட்டு காட்ட சொல்லுங்கள். ஒவ்வொரு நகைக்கும் இவ்வாறு கணக்கீடு செய்ய சொல்லி அதன் பிறகு முடிவெடுங்கள். நீங்களும் உங்களுடைய போன் கால்குலேட்டரின் கட்டணங்களை கணக்கீடு செய்து கொள்வது நல்லது.

மோசடிகள்: தீபாவளி பண்டிகை நெருங்குவதால் போலி நகைகளும் போலியான தள்ளுபடி விளம்பரங்களும், போலி ஹால்மார்க் கொண்ட நகைகளும் சந்தையில் அதிக அளவில் புழக்கத்திற்கு வரும் . எனவே நீங்கள் கடைகளுக்கு செல்லும்போது அது நல்ல பெயர் பெற்ற நீண்ட ஆண்டு இந்த துறையில் இருக்கக்கூடிய தடையாக இருப்பதை உறுதி செய்யுங்கள் . அதேபோல கடையில் நுழைந்தவுடன் நீங்கள் வாங்கக்கூடிய நகையின் ஹால்மார்க்கை பரிசோதனை செய்வது நல்லது.

ரசீது: சில இடங்களில் தங்க நகைகளுக்கு ரசீது கொடுக்க மாட்டார்கள். தெரிந்த கடை என நம்பி விட்டுவிடாதீர்கள். நகையில் ஏதேனும் குறைபாடு இருந்தால் ரசீது இல்லை எனில் திரும்ப அந்த கடைக்கு சென்று கேட்கவும் முடியாது முறையாக புகார் அளிக்கவும் முடியாது. எனவே நகை வாங்கும் போது கேரட் வேல்யூ, எடை, செய்கூலி சேதாரம் விகிதம், வரி உள்ளிட்ட அனைத்தும் இடம்பெற்ற விரிவான ரசீது வாங்குங்கள்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+