கோடிக்கணக்கான இந்திய மிடிஸ் கிளாஸ் மக்களுக்கு ஒரு அவசர பண தேவை என்றால் உடனடியாக கை கொடுப்பது தங்கம் தான். இதனால் தான் மக்கள் தங்க நகைகளுக்கு மாற்றாக ஈடிஎஃப், மியூச்சுவல் ஃபண்டுகள் போன்ற எத்தனை திட்டங்கள் வந்தாலும் கையில் இருக்கும் பணத்திற்கு தங்கத்தை நகையாகவே வாங்கி வைக்கிறார்கள். ஏனெனில் ஒரு அவசர தேவைக்கு உடனடியாக இதை நாம் அடகு வைத்து பணமாக மாற்றிக் கொள்ள முடியும்.
தங்கத்தின் விலை உயர தொடங்கிய கடந்த ஓராண்டு காலத்தில் இந்திய சந்தையில் தங்க நகை கடன் வாங்கும் அளவும் அதிகரித்திருக்கிறது. வங்கிகள் மற்றும் வங்கி சாராத நிதி நிறுவனங்கள் தற்போது அதிக அளவில் தங்க நகை கடன்களை வழங்கி வருகின்றன. தங்கத்தின் விலை உயர்ந்ததால் பொதுமக்களும் தனிநபர் கடன் உள்ளிட்ட பல்வேறு கடன்களுக்கு மாற்றாக தங்க நகை கடன்களை வாங்குவதற்கு ஆர்வம் காட்டுகிறார்கள்.

இவ்வாறு தங்க நகையை அடகு வைத்து கடன் வாங்கும் முன்பு ஒரு முக்கியமான விஷயத்தை கவனிக்க வேண்டும். இந்தியாவில் பொதுத்துறை வங்கிகள், தனியார் வங்கிகள், நிதி நிறுவனங்கள் இவை அனைத்துமே தங்க நகைகள் மீது கடன் வழங்குகின்றன. ஆனால் இவற்றில் வட்டிவிகிதம் என்பது ஒவ்வொரு வங்கிக்கும் மாறுபடுகிறது.
வழக்கமாக இந்தியாவில் 8 முதல் 12 சதவீதம் வரை தங்க நகை கடன்களுக்கு வட்டி விதிக்கப்படுகிறது. சில வங்கி சாராத நிதி நிறுவனங்கள் மற்றும் தனியார் கடன் வழங்குநர்கள் 20 முதல் 27 சதவீதம் வரை கூட வட்டி விதிக்கின்றன. எனவே தங்க நகை அடகு வைப்பதற்கு முன்பாக எந்த வங்கியில் எவ்வளவு வட்டி விதிக்கப்படுகிறது என்பதை தெரிந்து வைத்துக் கொள்வது அவசியம். இந்தியாவின் முன்னணி வங்கிகள், தனியார் நிறுவனங்களில் தங்க நகை கடன்களுக்கு எவ்வளவு வட்டி விதிக்கப்படுகிறது என்பதை தற்போது தெரிந்து கொள்ளலாம்.
எஸ்பிஐ: ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா வங்கியில் 8.7% முதல் வட்டி விதிக்கப்படுகிறது. 20 ஆயிரம் ரூபாயிலிருந்து 50 லட்சம் ரூபாய் வரை தங்க நகைகளை அடகு வைத்து கடன் வாங்கிக் கொள்ளலாம். 3 மாதங்கள், 6 மாதங்கள், 12 மாதங்கள் என புல்லட் ரீபேமெண்ட் முறையிலும் நகைக்கடன்களை திரும்ப செலுத்தலாம் ஆனால் அதற்கேற்ப வட்டி மாறுபடும்.
அடுத்ததாக பஞ்சாப் நேஷனல் வங்கி 9.25% வட்டியில் தங்க நகை கடன் வழங்குகிறது 25 லட்சம் ரூபாய் வரை தங்க நகை கடன் வாங்கலாம். ஓராண்டுக்குள் இதனை திரும்ப செலுத்தி விட வேண்டும். பேங்க் ஆஃப் இந்தியாவில் 8.85% வரை வட்டி விதிக்கப்படுகிறது. 30 லட்சம் ரூபாய் வரை தங்க நகை கடன் கிடைக்கும். 36 மாதங்களுக்குள் திரும்ப செலுத்த வேண்டும்.
பிரபல தனியார் வங்கியான ஹெச்டிஎஃப்சி வங்கி 9.10 லிருந்து 19% வரையிலான வட்டி விகிதத்தில் கடன் வழங்குகிறது. 25 ஆயிரம் ரூபாயில் இருந்து 50 லட்சம் ரூபாய் வரை தங்க நகை கடன் கிடைக்கும். ஐசிஐசிஐ வங்கியில் 8.75% இல் இருந்து 16.75% வரை வட்டி விகிதத்தில் கடன் கிடைக்கும். இங்கே 2 கோடி ரூபாய் வரை கூட கடன் கிடைக்கும்.
முத்தூட் ஃபைனான்ஸ் நிறுவனத்தில் 10.90% வட்டியில் கடன் கிடைக்கிறது . 1 கோடி ரூபாய் வரை தங்க நகை கடன்கள் கிடைக்கின்றன. மணப்புரம் ஃபைனான்ஸ் நிறுவனத்தில் 9.90% வட்டி விகிதத்தில் தங்க நகை கடன் கிடைக்கிறது. இங்கே 1.5 கோடி ரூபாய் வரை கூட கடன் கிடைக்கும். பஜாஜ் ஃபின்சர்வில் 9.5% வட்டி விகிதத்தில் தொடங்கி 24% வட்டி விகிதம் வரை கடன் கிடைக்கும்.
தங்க நகை கடன் வாங்குவதற்கு முன்பு வட்டி விகிதம், நீங்கள் அடகு வைக்கும் நகைக்கு எவ்வளவு கடன் கிடைக்கும், கடனை திரும்ப செலுத்துவதற்கான விதிமுறைகள் என்னென்ன என்பதை ஒருமுறைக்கு இருமுறை தெளிவாக கேட்டு தெரிந்து கொள்வது கட்டாயம். இரண்டு மூன்று இடங்களில் விசாரித்து வட்டி உள்ளிட்டவற்றை ஒப்பிட்டு கடன் வாங்கும் முடிவினை எடுக்கலாம். சில வங்கிகளில் ஒரு சவரனுக்கு 75000 ரூபாய் தான் கடன் தொகை கிடைக்கும் ஆனால் அங்கே வட்டி குறைவாக இருக்கும், சில வங்கிகளில் 1 லட்சம் ரூபாய் வரை கூட கடன் கிடைக்கும் ஆனால் வட்டி அதிகமாக இருக்கும். எனவேதான் கடன் வாங்கும் முன் இதனை கவனிக்க வேண்டும்.
Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Goodreturns.in அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் "நாங்கள்" என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.
More From GoodReturns

கோயம்புத்தூர் மக்களே தங்கம் வாங்க சிறந்த நாள்!! தடாலடியாக குறைந்த விலை!!

17 ஆண்டுகளுக்குபிறகு கடும் வீழ்ச்சி கண்ட தங்கம்! திடீர் யூ டர்ன் அடித்த காரணம்? அடுத்த இலக்கு?

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

தங்கம், வெள்ளி விலை தடாலடியாக உயர காரணம் என்ன? இனி வரும் நாட்கள் எப்படி இருக்கும்?

மதுரை தங்கம் விலையில் இன்று அதிரடி சரிவு..! தங்கம் வாங்க இதுதான் சரியான நேரம்?

தங்கம் விலை அதிரடி உயர்வு.. மதுரையில் ஒரு கிராம் தங்கம் விலை என்ன தெரியுமா..?

மதுரை மக்களுக்கு குட்நியூஸ்.. தங்கம் விலையில் இன்றும் அதிசயம்.. வாங்க நல்ல வாய்ப்பு.. ஆனா ஒரு விஷயம்..!!

கோயம்புத்தூர் மக்களே தங்கம் விலை உயர்ந்தது.. இனி ஒவ்வொரு ஸ்டெப்பும் கவனம் வைக்கனும்..!

கோயம்புத்தூரில் தங்கம் விலை சரிவு.. வாரத்தின் முதல் நாளே சர்ப்ரைஸ்.. நல்ல சான்ஸ்..!

தங்கம், வெள்ளி விலை: வாரத்தின் முதல் நாளிலேயே குட் நியூஸ்..!! தங்கம் வாங்க சிறந்த நாள்..!!

சென்னை அசோக் நகர்.. ஒரே காரில்.. ரூ.77 கோடி தங்கம் - வெள்ளி.. பறக்கும் படை 'கப்'பென பிடித்தது..!!



Click it and Unblock the Notifications