சென்னை: டிஜிட்டல் மோசடிகள் அதிகரித்து வரும் வேளையில் பொதுமக்கள் அனைவரும் உஷாராக இருக்க வேண்டியது அவசியம் ஆகிறது. டிஜிட்டல் தொழில்நுட்ப வளர்ச்சி காரணமாக எந்த வகையில் எல்லாம் மக்களை ஏமாற்றலாம் என்று ஒரு கும்பல் யோசித்துக் கொண்டே இருக்கிறது. மோசடிக்காரர்கள் எப்படி எல்லாம் உங்களை ஏமாற்றலாம், அப்படி நடந்தால் உங்களை எப்படி பாதுகாத்துக் கொள்வது என்பதை இந்தப் பதிவில் பார்ப்போம்.
கீழ்க்காணும் சில வழிகளில் மோசடிக்காரர்கள் உங்களை ஏமாற்றலாம். உங்களுடைய ATM PIN, டெபிட், கிரெடிட் கார்டு விவரங்களைப் போலியாக சித்தரித்து, உங்களுக்கு மெசேஜ் அனுப்பலாம். இ-மெயில் மூலம் சந்தேகத்திற்கிடமான லிங்குகளை வைத்தும் மெசேஜ் அனுப்பலாம். அங்கீகரிக்கப்படாத செயலிகளை, உங்கள் மொபைலில் டவுன்லோட் செய்யும்படி, உங்களை தூண்டும் வகையில் செய்திகள் அனுப்பப்படலாம். உங்கள் வங்கி கணக்கில் இருந்து பணம் டெபிட் செய்யப்பட்டது போல அல்லது கிரெடிட் செய்யப்பட்டது போல அறிவிக்கும் SMSகள் அனுப்புவதும், இப்பொழுது புது ட்ரெண்டாகத் தான் இருக்கிறது.

மோசடி செய்பவர்கள் பயன்படுத்தும் பொதுவான முறைகள் மற்றும் அதனை எதிர்த்துப் பாதுகாப்பிற்கு நீங்கள் செய்ய வேண்டிய விஷயங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
ஃபிஷிங் லிங்குகள்: மோசடி செய்பவர்கள், பயனர்களை ஏமாற்றும் வகையில் ஃபிஷிங் லிங்குகளை உருவாக்குகின்றனர். மேலும் முதல் பார்வையில் அவை உண்மையானதாகவே தோன்றுகிறது. ஆனால் உண்மையில் பல்வேறு மோசடி இணைப்புகளுடன், இந்த லிங்குகள் இணைக்கப்பட்டுள்ளன. நீங்கள் அவற்றை கிளிக் செய்வதன் மூலம் அவை வெவ்வேறு மோசடி செய்யும் இணையதளங்களுக்கு செல்லக்கூடும்.
இவை உங்களுக்கு SMS, இ-மெயில் மற்றும் பிற சமூக வலைதளங்கள் வழியாக உங்களுக்கு பகிரப்படுகிறது.
தீர்வு: தேவையற்ற அல்லது தெரியாத விஷயங்களைக் கொண்ட மெசேஜ்-களில் இருக்கும் லிங்குகளை கிளிக் செய்யாமல் இருப்பது நல்லது. சந்தேகத்திற்கு இடமான இணையதளங்கள் மற்றும் SMS உங்களுக்கு வந்தால், அவற்றை பிளாக் செய்து விடுங்கள். போலியான அல்லது சந்தேகத்திற்கிடமான லிங்குகளை கிளிக் செய்யும்படி சோசியல் மீடியா தளங்களில், உங்களுக்குச் செய்திகள் வந்தால் அவற்றைத் தவிர்க்க முயற்சி செய்யுங்கள்.
அங்கீகரிக்கப்படாத மொபைல் செயலிகள்: மோசடி செய்பவர்கள் ரிவார்டுகள், கேஷ் பேக், லாட்டரி பரிசுகள் போன்றவற்றை கொடுப்பதாகக் கூறி உங்களை அங்கீகரிக்கப்படாத செயலிகளை பதிவிறக்கச் சொல்லலாம். மேலும், அந்த செயலிகளில், நீங்கள் நிறைய பரிசுகள் பெற்றதாகவும் காண்பிக்கலாம். அவை உங்களை ஏமாற்றுவதற்கு என்று புரிந்து கொள்ளுங்கள்.
தீர்வு: சந்தேகத்திற்கிடமான மொபைல் அப்ளிகேஷன்களை, ஒருபோதும் பதிவிறக்கம் செய்யாதீர்கள். சில நாட்களுக்கு முன்பு ஒரு செயலியைப் ப்ளே ஸ்டோரில் இருந்து பதிவிறக்கச் சொல்லி, அதன் பின் அவர்கள் சொல்லும் யூடியூப் வீடியோக்களுக்கு லைக் போட்டால் ரூ. 5 தருவதாகக் கூறி ஏமாற்றி வந்தனர்.
இதுபோன்ற போலியான அப்ளிகேஷன்களில் பணம் சம்பாதிக்கலாம் என்று மற்றவர்கள் கூறினால், அவற்றின் ரிவ்யூக்களைப் படியுங்கள். இதன் மூலம் உங்களுக்கு, அந்த அப்ளிகேஷன் பற்றிய விவரங்கள் கிடைக்கலாம். பெரும்பாலும், இது போன்ற ஆன்லைன் செயலிகளில், உங்களை ஈர்ப்பதற்காக மட்டுமே பணம் சம்பாதிக்க முடியும் என்று கூறப்படுகிறது என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.
ஆன்லைன் விற்பனைத் தளங்கள்: டிஜிட்டல் பிளாட்ஃபார்ம்களைப் பயன்படுத்தி, ஏதோ ஒரு பொருளை விற்பது போல மோசடி செய்கின்றனர். அழகான தோற்றமளிக்கும் வீடியோக்கள் மற்றும் போட்டோக்களைப் பதிவேற்றி மக்களை ஈர்க்கின்றனர். அதன் பிறகு யாரேனும் அவர்களிடம் ஆர்டர் செய்தால் பிரிபெய்ட் ஆர்டர் மட்டுமே உள்ளது என்று கூறுகின்றனர். இதனால் மக்களும் தங்களுடைய பேமெண்ட் தளங்கள் மூலம் பணத்தை அனுப்பி ஆர்டருக்காக காத்திருக்கின்றனர். கடைசியில் பணம் போனது தான் மிச்சமாகிறது.
தீர்வு: அங்கீகரிக்கப்பட்ட ஆன்லைன் விற்பனை தளங்கள் மூலம் மட்டுமே ஆர்டர் செய்யுங்கள். இன்ஸ்டாகிராம் பக்கங்கள் மற்றும் பேஸ்புக் பக்கங்களில் ஆர்டர் செய்வதற்கு முன்பு அவை உண்மைதானா.. என்பதை ஆராய்ச்சி செய்யுங்கள்.
சர்ச் இன்ஜினை-ஐ பயன்படுத்துங்கள். தயாரிப்புகள், நிறுவனங்கள், வங்கிகள் மற்றும் பிற சேவைகளைப் பற்றித் தெரிந்து கொள்ள அவ்வப்போது பயனர்கள் சர்ச் இன்ஜின்களை பயன்படுத்துவது வழக்கம். இதனால் உண்மையான விவரங்களை உங்களால் பெற முடியும்.
ஆன்லைன் வேலை மோசடிகள்: மோசடி செய்பவர்கள் பயனர்களைக் கவர்ந்திழுக்க ஒரு புதிய வழியைக் கண்டுபிடித்துள்ளனர். அதுதான் போலியான ஜாப் போர்டல்கள். இதுபோன்ற போர்டல்களை உருவாக்கி பயனர்களின் வங்கி விவரங்கள் மற்றும் தகவல்களை சேமிக்கின்றனர். இத்தகைய மோசடிகளால் பாதிக்கப்பட்டவர்கள் பலர். இதுபோன்ற போலியான வேலை வழங்கும் இணையதளங்களில் உங்களுடைய வங்கி கணக்கு எண், கிரெடிட், டெபிட் கார்டு விவரங்கள் போன்ற முக்கியமான விவரங்களை கொடுக்காமல் இருப்பது நல்லது.
தீர்வு: உண்மையாகவே பணியமர்த்தும் நிறுவனங்களைத் தேடுங்கள். உங்களுடைய வங்கிக் கணக்கு மற்றும் பிற வங்கி விவரங்களை யாருடனும் பகிர்ந்து கொள்ளாதீர்கள். ஆன்லைன் வேலை தருவதாகக் கூறி, உங்களிடம் பணம் கட்ட சொன்னால் அவை போலியானதாக இருக்கலாம் என்பதை உணர்ந்து நடந்து கொள்ளுங்கள். ஏனெனில், எந்த வேலை வழங்கும் நிறுவனமும் உங்களிடம் பணம் பெற்று உங்களுக்கு வேலை கொடுப்பதில்லை.
More From GoodReturns

இந்த வாரம் 4 நாட்கள், அடுத்த வாரம் 3 நாட்கள்: பங்குச்சந்தை முதலீட்டாளர்களே முதல்ல இத படிங்க

பங்குச்சந்தை சரிவில் இந்த தப்பு மட்டும் பண்ணாதீங்க - முதலீட்டாளர்களுக்கு விஜய் கேடியா கூறும் டிப்ஸ்

பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு கருப்பு வெள்ளி..!! ஒரே நாளில் ரூ.8 லட்சம் கோடி அவுட்..!!

தங்கம், வெள்ளி விலை: வாரத்தின் முதல் நாளிலேயே குட் நியூஸ்..!! தங்கம் வாங்க சிறந்த நாள்..!!

முதலீட்டாளர்களுக்கு இன்ப அதிர்ச்சி: 1500 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்த சென்செக்ஸ்!!

ஆசை காட்டி மோசம் செய்யும் தங்கம்..!! ஆறுதல் தந்த வெள்ளி..!! இப்போ வாங்கலாமா? வெயிட் பண்ணலாமா?

கதறி கதறி அழும் வெள்ளி முதலீட்டாளர்கள்.. போட்ட காசு மொத்தமும் போச்சு..!! அடுத்தது என்ன..?

தங்கம் விலை இன்று கோயம்புத்தூரில் அதிரடி ஏற்றம்..! நகைப்பிரியர்களுக்கு ஷாக்..!

கண்ணாமூச்சி ஆடும் தங்கம்.. ரிவர்ஸ் எடுக்கும் வெள்ளி..! இந்த 2 பேர் எடுக்கிற முடிவுல தான் எல்லாமே இருக்கு!

தங்கம் விலை: 24 மணி நேரத்தில் 4 முறை மாறிய விலை!! ஈரான் போரால் நடக்கும் அக்கப்போர்!!

SIP முதலீடு செஞ்சா கோடிகளில் பணம் கிடைக்குமா? நம்ம எல்லாரும் செய்யுற தப்பு இது தான்..!!



Click it and Unblock the Notifications