சென்னை: UPI பேமெண்ட் தளங்கள் அதிகமான காரணத்தினால் அது தொடர்புடைய மோசடிகளும் அதிகரித்துவிட்டன. டிஜிட்டல் பிளாட்ஃபார்ம் என்பதால் எளிதில் பலருக்கும் பணப்பரிவர்த்தனை செய்ய உதவியாக உள்ளது. மோசடிகள் அதிகரித்த வருவதால் UPI பயன்படுத்தாமலும் இருக்க முடியாது. ஆனால், அவ்வாறு நடக்கும் மோசடிகளில் இருந்து எளிதாகத் தப்பிக்க முடியும். அதைப்பற்றி இந்தப் பதிவில் பார்ப்போம்.
எளிதான செயல்முறை என்பதால் பெரும்பாலான மக்கள் இந்த UPI பணப்பரிவர்த்தனயை மேற்கொள்கின்றனர். இதனைப் பயன்படுத்தி பல முகம் தெரியாத நபர்கள் ஆன்லைன் மோசடியில் ஈடுபட்டு பொதுமக்களின் பணத்தை அபகரித்து வருகின்றனர்.

பெரிய பெரிய வணிக வளாகங்கள் தொடங்கி சாலையோர தள்ளுவண்டி கடைகள் வரையில், இன்று UPI மூலமாக பணப்பரிமாற்றம் செய்வது எளிதாகிவிட்டது. ஒரு ரூபாய் கூட அனுப்ப முடியும் என்பதால் எல்லோரும் UPI தொழில்நுட்பத்தை அதிகம் பயன்படுத்தி வருகிறோம். அந்த நம்பகத்தன்மையை பயன்படுத்தி சிலர் நம்மை ஏமாற்றி வருவது அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. எந்த அளவிற்கு பரிவர்த்தனைகள் அதிகரித்து வருகிறதோ அதேபோல் மோசடிகளும், மோசடி வழக்குகளும் அதிகமாகிவிட்டன.
கடந்த ஏப்ரல் 2024ஆம் ஆண்டு வரை, இந்தியாவில் மட்டும் 13.3 பில்லியன் UPI பரிவர்த்தனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்த நிலையில் சென்ற 2022ஆம் ஆண்டு முதல் 2023ஆம் ஆண்டு வரை மொத்தம் 95,000 UPI மோசடி வழக்குகள் பதிவாகியுள்ளன என்று நிதி அமைச்சகத்தின் தரவுகள் தெரிவிக்கின்றன.
இத்தகைய நிலையை சரிசெய்யும் பொருட்டு அரசாங்கம் பல முன்னேற்பாடுகளை செய்து வருகிறது. UPI மோசடிகள் நடப்பதால் UPI தளங்களைப் பயன்படுத்தாமலும் இருக்க முடியாது. ஆனால், அதில் சிக்காமல் நிச்சயம் ஈசியாக தப்பிக்க முடியும். அதற்கு மோசடிகள் எப்படி நடக்கிறது என்பதையும், அதிலிருத்து தப்பிக்கும் வழியையும் தெரிந்துகொள்ள வேண்டும். UPI மோசடிகளில் இருந்து தப்பிக்க சில எளிய வழிகளைப் பார்ப்போம்.
1. மோசடி செய்பவர்கள், UPI மூலம் உங்களுக்கு ஒரு சிறு தொகையை அனுப்பி, அதனை திரும்பச் செலுத்த சொல்லலாம். அதற்காக ஒரு லிங்கை அனுப்பலாம். இது போன்ற லிங்குகளை கிளிக் செய்வதால், நம்முடைய வங்கி கணக்கில் இருக்கும் பணம் பறிக்கப்படுகிறது. எனவே, இது போன்ற ஆள் பெயர் தெரியாத நபர்கள், ஏதேனும் பிற லிங்குகளை அனுப்பி, அதன் மூலம் பணம் அனுப்பச் சொன்னால், அதனை நிராகரித்து விடுங்கள்.
2. வங்கிகளில் இருந்து பேசுவதாகக் கூறி UPI ஐடி, UPI பின் மற்றும் OTP போன்றவற்றை நம்மிடம் பெற்று, அதை வைத்து நம்முடைய வங்கிக் கணக்கில் இருந்து பெரிய அளவிலான தொகை திருடப்படுகிறது. எந்த வங்கியும் உங்களுடைய வங்கி தொடர்பான விவரங்களையும் UPI ஐடி போன்ற விவரங்களையும் கேட்காது என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.
3. சில நேரங்களில் உங்களுடைய ஏடிஎம் கார்டு விவரங்கள், டெபிட் கார்டு விவரங்கள் மற்றும் யுபிஐ ஆப்பின் விவரங்கள் போன்றவற்றை திருடி, உங்களுடைய பெயரிலேயே ஜி பே, போன் பே போன்ற செயலிகளைப் பயன்படுத்தி, பணத்தை எடுக்கும் சம்பவங்களும் நடந்து கொண்டுதான் இருக்கிறது. இதனால் உங்களுடைய வங்கி சார்ந்த விவரங்கள் மற்றும் UPI விவரங்களை யாருடனும் பகிர்ந்து கொள்ளாதீர்கள்.
என்னதான் தொடர்ந்து அறிவிப்பு பலகைகள், எச்சரிக்கைகள் வழங்கப்பட்டாலும் மக்கள் தொடர்ந்து இது போன்ற மோசடி வலைக்குள் தெரியாமல் சென்று விழுந்து விடுகின்றனர்.
இந்திய ரிசர்வ் வங்கி, தொலைத்தொடர்பு துறை, அரசு மற்றும் தனியார் வங்கிகள், உங்களிடம் வங்கித் தகவல்கள் மற்றும் UPI தகவல்களைக் கேட்க மாட்டார்கள் என்பதை முதலில் தெரிந்துகொள்ள வேண்டும்.
எந்தவொரு பரிவர்த்தனையையும் செய்வதற்கு முன்பாகவே, பணத்தைப் பெறுபவரின் UPI ஐடியை உறுதிப்படுத்திக்கொள்ளவும்.
அங்கீகரிக்கப்பட்ட பாதுகாப்பான செயலிகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும். மேலும் தேவையற்ற செயலிகளை டவுன்லோட் செய்வதைத் தவிர்ப்பது நல்லது. பொது இடங்களில் உள்ள Wi-Fi மூலம் வங்கி பரிவர்த்தனைகளை மேற்கொள்ள வேண்டாம்.
இவை அனைத்தையும் மீறி உங்கள் பணம் பறிக்கப்பட்டதை அறிந்தால் உடனே சைபர் கிரைம் போலீசாருக்கு புகார் அளிக்கவும் அல்லது அருகில் உள்ள காவல் நிலையத்திற்கு சென்று புகார் அளிக்க வேண்டும்.
More From GoodReturns

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!

அம்பானி சார் நீங்களா.. சன்டே மும்பையை ஸ்தம்பிக்க விட்ட பெங்களூர் Rameshwaram Cafe..- வீடியோ!

ஈரான் - அமெரிக்கா போர்.. நடுவில் சிக்கிக்கொண்டு தவிக்கும் ஜப்பான்.. பெரும் சீரழிவின் ஆரம்ப புள்ளி இதுதானா..?



Click it and Unblock the Notifications