கடந்த ஆறு மாத காலத்தில் உலகம் முழுவதுமே தங்கம் விலை பல மடங்கு உயர்ந்து விட்டது. முன்கூட்டியே தங்கத்தில் முதலீடு செய்தவர்கள் எல்லாம் இதில் பெருமளவு லாபம் பார்த்தார்கள். இந்த சூழலில் சாதாரண மக்கள் தொடங்கி முதலீட்டாளர்கள் வரை அனைவரும் தங்கத்தின் முதலீடு செய்யாமல் தவற விட்டு விட்டோமே , இனி அந்த தவறை செய்யக்கூடாது என போட்டி போட்டுக்கொண்டு தங்கத்தில் முதலீடு செய்கிறார்கள்.
இதனால் தான் இந்தியாவில் கோல்ட் ஈடிஎஃப் திட்டங்களில் செய்யப்படும் முதலீடுகளின் மதிப்பு ஈக்குவிட்டி முதலீடுகளை விட அதிகரித்து இருக்கிறது. இந்த நிலையில் தங்கம் விலை உயர்வு என்பதற்காக கையில் இருக்கும் மொத்த பணத்தையும் தங்கத்திலேயும் முதலீடு செய்து விடலாமா என்ற குழப்பம் பலருக்கும் எழுந்ந்துள்ளது. பிரபல முதலீட்டு நிபுணரான ரே டேலியோ அதற்கு தெளிவான பதிலை தந்துள்ளார்.

ஒரு நபர் தன்னுடைய போர்ட்போலியோவில் எவ்வளவு பணத்தை தங்கத்திற்காக ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்பதை தெளிவாக விளக்கி இருக்கிறார். லூகாஸ் என்பவர் தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் ரே டேலியோ தங்கத்தில் எப்படி முதலீடு செய்ய வேண்டும் என்பது குறித்து விளக்கக்கூடிய ஒரு வீடியோவை பகிர்ந்து இருக்கிறார். அதில் நீங்கள் எந்த நாட்டவராக இருந்தாலும் சரி தங்கத்தில் இவ்வளவு பணத்தை முதலீடு செய்யுங்கள் போதும் என ரே டேலியோ அறிவுரை வழங்குகிறார்.
பங்குகள், பத்திரங்களுடன் ஒப்பிடும்போது தங்கம் அடிப்படையிலேயே வித்தியாசமான ஒரு இடத்தைக் கொண்டிருப்பதாக கூறுகிறார் ரே டெலியோ. தங்கம் உங்களுடைய செல்வத்தை வளர்ப்பதற்கான முதலீடு கிடையாது ஒரு மோசமான காலகட்டத்தில் உங்களுடைய செல்வத்தை பாதுகாப்பதற்கான ஒரு முதலீடு என்ற பார்வையை ரே டேலியோ முன்வைக்கிறார்.
பங்குகள், பத்திரங்கள் வீழ்ச்சி அடையும் போதெல்லாம் தங்கம் வளரும் என குறிப்பிடும் அவர், உலக அளவில் பல்வேறு நாடுகளும் சரி மத்திய வங்கிகளும் சரி தங்கத்தை எதற்காக வாங்கி வைக்கிறார்கள், மோசமான பொருளாதார சூழல் ஏற்படும் போது தங்களுடைய போர்ட்போலியவை பேலன்ஸாக வைக்க வேண்டும் என்பதற்காக தான் தங்கத்தை வாங்குகிறார்கள். அதேதான் சாதாரண முதலீட்டாளர்களும் பின்பற்ற வேண்டும் என சுட்டிக்காட்டுகிறார்.
தினமும் தங்கம் விலை ஏறுகிறது இறங்குகிறது என்பதை பற்றி கவலைப்பட கூடாது என கூறும் அவர் உங்களுடைய போர்ட்போலியோவில் அனைத்துமே சிவப்பு நிறத்தில் இருக்கும் போது அதனை காப்பாற்றி பேலன்ஸ் செய்யப்போவது தங்கம் தான் என்கிறார். ஒரு நபர் தன்னுடைய போர்ட்போலியோவில் 15 சதவீதம் வரை தங்கத்திற்காக ஒதுக்கீடு செய்யலாம் என சுட்டிக்காட்டுகிறார்.
தங்கம் என்பது ஒரு வளரும் சொத்து கிடையாது, அது ஒரு இன்சூரன்ஸ் என்ற பார்வையும் அவர் முன் வைகிறார். முதலீட்டாளர்கள் தங்களுடைய குழப்பங்களை கைவிட்டு விட்டு போர்ட்போலியாவுக்கு காப்பீடு போல செயல்படக் கூடியதாக தான் தங்கத்தை கையாள வேண்டும் எனவே 15 சதவீதம் வரை தங்கத்திற்கு ஒதுக்கீடு செய்து விட்டு மீதமுள்ள பணத்தை பத்திரங்கள், பங்குகள் என பிரித்து முதலீடு செய்ய வேண்டும் என்ற அறிவுரையை வழங்குகிறார்.
More From GoodReturns

போனது போகட்டும்!! நாளை தமிழ் புத்தாண்டு நாளில் இதை எல்லாம் தொடங்குங்க வாழ்க்கை செமயா மாறும்!!

தங்கம் விலையேற இதுதான் காரணமா? 23 மாதங்களாக தொடரும் வேட்டை!அமெரிக்காவையே ஓரங்கட்டிய நாடுகள்? ஏன்?

கோவை மக்களே இன்று தங்க நகை வாங்கும் பிளான் இருக்கா? இது தான் உங்க ஊர் கோல்டு ரேட்!!

தங்கம், வெள்ளி விலை மேலும் 10% குறையுமா? எல்லாம் டிரம்ப் எடுக்கும் முடிவில் தான் இருக்கு!!

வாரத்தின் முதல் நாளே குட் நியூஸ்: குறைந்தது தங்கம் விலை!! நகைப்பிரியர்கள் ஹேப்பி!!

தங்கம், வெள்ளி விலை சரிவு: ஈரான் போர் தீவிரமடைந்தால் இன்னும் தங்கம் விலை குறையுமா?

தங்கம் விலை: 11 நாட்களில் 5 நாட்கள் விலை ஏறி இருக்கு!! அப்போ அடுத்த வாரம் என்ன ஆகும்?

தங்கம், வெள்ளி விலை லைவ் அப்டேட்ஸ்: இனி வரும் நாட்களில் விலை ஏறுமா? இறங்குமா?

குறைந்த விலையில் தங்கம் வாங்க ஆசையா?18K vs 22K - அட்சய திருதியையில் எது வாங்குவது புத்திசாலித்தனம்?

அப்புறம் பாத்துக்கலாம்னு அசால்ட்டா இருக்காதீங்க! 5 வருஷம் லேட் பண்ணா ரூ3கோடி காலி.. SIP ரகசியம்?

3 ஆண்டுகளில் 740% வளர்ச்சி அடைந்த மல்டிபேக்கர் பங்கு: இப்போது முதலீடு செய்யலாமா?



Click it and Unblock the Notifications