இந்தியாவில் தங்கமும் ரியல் எஸ்டேட்டும் நீண்ட காலமாகவே மக்கள் நம்பிக்கையுடன் முதலீடு செய்யும் முக்கிய சொத்துகளாக இருக்கின்றன. தங்கம் மற்றும் ரியல் எஸ்டேட் ஆகிய இரண்டும் வெவ்வேறு வகையான முதலீடுகள் ஆகும். அவை அவற்றின் சொந்த நன்மைகள் மற்றும் தீமைகள் உள்ளன. தங்கம் என்பது கலாச்சாரம் மற்றும் செல்வத்தின் சின்னம் ஆகும். குடும்ப விழாக்கள், திருமணங்கள் மற்றும் தாய்மார்கள் தங்கள் மகள்களுக்கு சேர்த்து வைக்கும் பாரம்பரியம் ஆக இருக்கின்றது. அதே நேரத்தில், வீடுகள் மற்றும் நிலம் போன்ற சொத்துக்கள் ஒரு நபரின் வாழ்க்கையில் ஒரு முக்கிய அடையாளமாகும். வாடகை வருமானம் மற்றும் மதிப்பில் அதிகரிப்பு மூலம் நிலையான முதலீடாகும்.
தங்கம்: தங்கம் என்பது இந்தியாவில் செல்வத்தின் அடையாளமாக பெரும்பாலும் பார்க்கப்படுகிறது. இந்தியர்கள் தங்கத்தை பொதுவாக நகைகளாக வாங்கி முதலீடு செய்கிறார்கள். அதற்காக சிலர் தங்கம் சீட், மினி காயின், ETF போன்ற முறைகளிலும் முதலீடு செய்கின்றனர். தங்கத்திற்கு பல நன்மைகள் மற்றும் சில தீமைகள் உள்ளன.

நன்மைகள்: தங்கத்தை எளிதில் வாங்கவும், விற்கவும் முடியும் என்பது ஒரு முக்கிய காரணமாகும். மேலும், தங்கம் பணவீக்கத்துக்கு எதிராக பாதுகாப்பாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது. கலாச்சாரத்தில் அதன் முக்கியத்துவம் மிக அதிகமாக உள்ளது. குறிப்பாக இந்திய உறவுகள் மற்றும் நிகழ்வுகளில் தங்கத்தின் பங்கு முக்கியமாக உள்ளது. அதோடு, தங்கத்திற்கு பராமரிப்பு செலவுகள் குறைவாக இருப்பதால், முதலீட்டாளர்களுக்கு அதிக பலன் தருகிறது.
தீமைகள்: தங்கத்தின் முக்கிய குறைபாடு இது ஒரு வாடகை வருமானம் இல்லாதது தான். அதனால், அது ஒரு நிலையான வருமானத்தை உருவாக்காது. மேலும், தங்கத்தின் விலையில் ஏற்படும் ஏற்ற இறக்கங்களைக் கணித்து, அதனால் ஏற்படும் லாபத்தைக் குறைப்பது மிகவும் கடினமாக இருக்கும். வங்கியில் அதை பாதுகாப்பாக வைத்தாலும், அதனுடன் எந்தவொரு வட்டியும் கிடைக்காது. மேலும், தங்கத்தின் மதிப்பு அதிகரிப்பு மெதுவாக உள்ளது. சராசரி வருடத்திற்கு 6-7% வளர்ச்சி ஏற்படுகிறது.
ரியல் எஸ்டேட்: வீடு, நிலம் மற்றும் அடுக்குமாடி குடியிருப்புகள் போன்ற சொத்துக்கள் "ரியல் எஸ்டேட்" என அழைக்கப் படுகின்றன. இது ஒரு நிலையான சொத்து வகையாக உள்ளது. தற்போது நகரங்களின் வள்ர்ச்சி மற்றும் உள்கட்டமைப்பு வளர்ச்சியின் காரணமாக, இந்த துறையின் மதிப்பு மற்றும் வளர்ச்சி அதிகரித்துள்ளது. இதில், புதிய வீடுகள், பணி வாய்ப்புகள், வர்த்தக மையங்கள், வீதிகள், சாலைகள் மற்றும் ரயில்வே இயக்கம் போன்றவை அடங்கும். நகரங்களில் மக்களின் எண்ணிக்கை அதிகரித்து, புதிய வீடுகளுக்கு தேவையும் அதிகரித்துள்ளது.
அதனால், ரியல் எஸ்டேட் துறைக்கு எதிர்காலத்தில் மிகப்பெரிய வளர்ச்சி வாய்ப்பு உள்ளது. இந்த முன்னேற்றங்கள் நகரங்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தி மேலும் பொருளாதார வளர்ச்சிக்கு வழிவகுக்கும். முதலீட்டாளர்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும்.
நன்மைகள்: ரியல் எஸ்டேட்டின் மதிப்பு ஆண்டுக்கு 8-10% அளவில் உயர்வை அடைகின்றது. மேலும் வாடகை வருமானம் மூலம் நிரந்தர வருமானத்தை பெற முடியும். வங்கி கடன்களைப் பயன்படுத்தி குறைந்த முதலீட்டில் அதிக வருமானம் பெற முடியும். அதோடு, 80C, 54 போன்ற வரி சலுகைகள் மற்றும் RERA சட்டத்தின் மூலம் முதலீட்டாளர்களுக்கு பாதுகாப்பான சூழல் கிடைக்கின்றது. இந்த துறையில் முதலீடு செய்வது பாதுகாப்பான நீண்டகால வழி ஆகும்.
தீமைகள்: ரியல் எஸ்டேட்டில் முதலீடு செய்வதற்கு முதற்கட்ட முதலீடு அதிகமாக தேவைப்படுகிறது. மேலும், பராமரிப்பு செலவுகள், கம்பவுண்ட் கட்டணங்கள் மற்றும் வரிகள் போன்ற கூடுதல் செலவுகள் இருக்கின்றன. வீடுகள் அல்லது சொத்துகளை விற்பனை செய்ய அதிக நேரம் தேவைப்படலாம். அதே சமயம், சில பகுதிகளில் சட்ட சிக்கல்கள் மற்றும் சொத்துக்கான உரிமை தொடர்பான பிரச்சனைகள் ஏற்படக்கூடும்.
சந்தை வளர்ச்சி மற்றும் எதிர்காலம்: 2020-2024 காலப்பகுதியில், தங்கத்தின் விலை உலக சந்தையின் காரணமாக ஏற்ற இறக்கமடைந்தது. சில வருடங்களில் நல்ல லாபம் கொடுத்தாலும், அதேபோல் சில நேரங்களில் லாபம் இல்லாமல் இருந்தது. நைட் பிராங்க்(Knight Frank) மற்றும் சிஐஐ (CII)அறிக்கையின்படி, ரியல் எஸ்டேட், 2034 ஆகும் போது இந்திய ரியல் எஸ்டேட் துறை $1.5 டிரில்லியன் மதிப்பை எட்டும் என கூறப்படுகிறது. நகரங்கள் அதிகரிப்பது, PMAY (பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா) போன்ற திட்டங்கள், RERA பாதுகாப்பு, REIT முதலீடுகள் ஆகியவை இந்த வளர்ச்சிக்கு காரணமாகும்.
முதலீட்டாளர்களுக்கான அறிவுரை: வினீத் செல்லானி (Asset Deals நிறுவனர்) கூறுகிறார், "தங்கம் ஒரு லாக்கரில் உள்ளது. ஆனால் ரியல் எஸ்டேட் நகரங்களை உருவாக்குகிறது." அதாவது, தங்கம் என்பது குறுகிய காலத்திற்கு வைத்திருக்கும் ஒரு சொத்து, ஆனால் ரியல் எஸ்டேட் என்பது ஒரு சமூக மாற்றத்திற்கு பங்களிக்கும் ஒரு சொத்து என்று கூறியுள்ளார். அதே போல், டிம்பிள் பரத்வாஜ் (Better Choice Realtors) RERA (Real Estate Regulation Act) வந்த பிறகு, முதலீட்டாளர்கள் ரியல் எஸ்டேட்டை பாதுகாப்பான சொத்தாகப் பார்க்கத் தொடங்கினர். இது அவர்களை பல வழிகளில் முதலீடு செய்ய உதவியது என்று கூறினார்.
யாருக்கு என்ன சிறந்தது?: குறைந்த முதலீட்டுடன் எளிமையான சொத்தில் பணம் வைக்க நினைப்பவர்கள் தங்கம் தேர்வு செய்யலாம். வர்த்தக நோக்கத்தில் நிலையான வருமானம் மற்றும் மதிப்பு உயர்வைக் கேட்கும் முதலீட்டாளர்கள் ரியல் எஸ்டேட் பக்கம் செல்லலாம். கம்பவுண்ட் விகிதத்தில் அதிக லாபம் பெற விரும்புவோர் ரியல் எஸ்டேட் பக்கம் செல்ல வேண்டும். ஆனால், தங்கம் உடனடி திரும்பப்பெறும் (liquidity) வசதியைக் கொண்டது.
2025 மற்றும் அதற்கு பிறகு வரும் காலக்கட்டத்தில், வளர்ச்சியடையும் நகரங்கள், தொழில்நுட்ப மேம்பாடுகள், அரசின் கொள்கைகள் ஆகியவற்றால் ரியல் எஸ்டேட் முதலீடு சிறந்த தீர்வாக இருக்கலாம். இது ஒரே நேரத்தில் மதிப்பு உயர்வு மற்றும் வாடகை வருமானம் ஆகிய இரண்டும் தரும் சொத்து வகையாக உள்ளது.
அதே நேரத்தில், தங்கம் ஒரு பாதுகாப்பான செல்வத்தை வழங்கும் சொத்தாகவும் கலாச்சாரத் தொடர்பாகவும் தொடரும். தங்கம் மற்றும் ரியல் எஸ்டேட் ஆகியவற்றுக்கு இடையேயான தேர்வு முதலீட்டாளரின் இலக்குகள் மற்றும் விருப்பங்களைப் பொறுத்தது. எனவே உங்களுக்கு எது சிறந்தது என்று பொருமையாக சிந்தித்து செயல்படுங்கள்.
தங்கத்தின் இன்றைய விலை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று சவரனுக்கு ரூ.2,200 குறைந்து, ஒரு சவரன் ரூ.72,120-க்கு விற்பனையாகிறது. கடந்த சில நாட்களாகவே அதிகரித்து வந்த தங்கத்தின் விலை, இன்று குறைந்துள்ளது. சென்னையில், நேற்று 22 காரட் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.2,200 அதிகரித்து, ரூ.75 ஆயிரத்தைத் தாண்டியதால், நகைப்பிரியர்களுக்கு பேரதிர்ச்சியாக அமைந்தது. ஆனால், நேற்று உயர்ந்த விலை இன்று ரூ.2,200 குறைந்துள்ளது.அமெரிக்கா - சீனா இடையேயான வர்த்தகப் போர் நிற்காத பட்சத்தில், தங்கத்தின் விலையானது மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும், விரைவில் ஒரு கிராம் தங்கம் ரூ.10 ஆயிரத்தைத் தாண்டும் என்றும் பொருளாதார நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
More From GoodReturns

கோவையில் இன்று தங்கம் விலை உயர்வு: இந்த திடீர் விலை உயர்வுக்கு காரணம் என்ன?

உங்க பணத்தை இரட்டிப்பாக்கும் போஸ்ட் ஆபிஸ் முதலீட்டு திட்டம்!! ரூ.1000 கூட முதலீடு செய்யலாம்!!

ரூ.1 லட்சத்துக்கு கீழ் தங்கமே வாங்க முடியாதா? குறைந்த விலையில் தங்கம் வாங்க வழியே இல்லையா?

தங்கம் விலையேற இதுதான் காரணமா? 23 மாதங்களாக தொடரும் வேட்டை!அமெரிக்காவையே ஓரங்கட்டிய நாடுகள்? ஏன்?

தங்கம் விலை அதிரடி உயர்வு!! அட்சய திருதியைக்கு 5 நாட்களே இருக்கும் நிலையில் திடீர் விலை ஏற்றம்!!

கோயம்புத்தூரில் தங்கம் விலை என்ன? இன்று நகை வாங்க சரியான நேரமா?

தங்கம் விலை: 11 நாட்களில் 5 நாட்கள் விலை ஏறி இருக்கு!! அப்போ அடுத்த வாரம் என்ன ஆகும்?

அட்சய திருதியை தங்கம் விற்பனை: மக்களே இத கவனிக்கலனா உங்க தலையில துண்டு!!

ரூ.666 இருந்தால் போதும் ரூ.1 கோடி இலக்கை எட்டலாம்…!! அட இவ்வளவு ஈஸியான வழி இருக்கா?

LIC பங்குதாரர்களுக்கு ஜாக்பாட்!! ஒன்னு ரெண்டாக போகுது!! முதலீட்டாளர்கள் ஹேப்பி!!

குறைந்த விலையில் தங்கம் வாங்க ஆசையா?18K vs 22K - அட்சய திருதியையில் எது வாங்குவது புத்திசாலித்தனம்?



Click it and Unblock the Notifications