2020ல் லாபத்தை அள்ளிக் கொடுத்த தங்கம், 2021ல் தொடர் சரிவு பாதையில் இருக்கிறது. இதனால் நீண்ட காலமாகத் தங்கம் மற்றும் தங்க நகைகளை வாங்க முடியாமல் இருந்த மக்களுக்குச் சிறப்பான முதலீட்டு வாய்ப்பு உருவாகியுள்ளது.
2021 ஆரம்பம் முதல் பல்வேறு காரணங்களுக்காகத் தங்க முதலீட்டுச் சந்தையில் முதலீட்டாளர்கள் வெளியேறி வரும் நிலையில் தங்கம் விலை தொடர்ந்து குறைந்து வருகிறது. இதன் காரணமாக 2021ஆம் ஆண்டின் 50 நாட்களில் 10 கிராம் 24 கேரட் தங்கம் சுமார் 4000 ரூபாய் வரையில் சரிந்துள்ளது. இந்நிலையில் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் தங்கம் விலை இந்தியாவில் சுமார் 1100 ரூபாய் அளவில் சரிந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
தங்கத்தின் உச்ச விலை
2020ல் 10 கிராம் 24 கேரட் தங்கம் விலை அதிகப்படியாக 56,200 ரூபாய் அளவீட்டில் இருந்த நிலையில் 2021ல் துவக்கம் முதல் சுமார் 10,000 ரூபாய் வரையில் சரிந்துள்ளது. குறிப்பாக ஆபரணத் தங்கம் விலை நீண்ட காலத்திற்குப் பின் 35,000 ரூபாய் அளவீட்டில் இருந்து சரிந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் இந்த அதிகப்படியான சரிவுக்கு என்ன காரணம் என்பதைத் தான் இப்போது பார்க்கப்போகிறோம்.
பணவீக்கம் அளவு
உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பு மூலம் ஏற்பட்ட பொருளாதாரச் சரிவில் இருந்து உலக நாடுகள் மீண்டு வரும் நிலையில் பணவீக்கம் அதிகமாக இருக்கும் எனும் கணிப்பு நிலவுகிறது. இதன் மூலம் பத்திர முதலீட்டில் அதிகப்படியான லாபம் கிடைக்கும் எனப் பெரும்பாலான நாட்டின் முதலீட்டாளர்கள் கணித்திருக்கும் காரணத்தால் பத்திர சந்தையில் அதிகளவிலான முதலீடுகள் குவிந்துள்ளது.
கோல்டு ETF
தங்கம் மீதான முதலீட்டில் இருந்து முதலீட்டாளர்கள் தொடர்ந்து வெளியேறும் காரணத்தால் ETF சந்தையிலிருந்து அதிகளவிலான முதலீடுகள் வெளியேறி வருகிறது. தங்கம் விலை நிர்ணயம் செய்வதில் ETF முதலீடுகள் பெரும் பங்கு வகிக்கும் காரணத்தால் இத்தளத்திலிருந்து தொடர்ந்து முதலீட்டாளர்கள் வெளியேறுவது தங்கம் விலையைப் பாதிக்கிறது.
அமெரிக்கக் கருவூல அமைப்பு
பென்ச்மார்க் ஆக இருக்கும் அமெரிக்காவின் கருவூல அளவீடுகள் ஒரு வருட உயர்வை அடைந்துள்ள காரணத்தால் தங்கம் மீதான முதலீடுகள் பெருமளவில் குறைந்துள்ளது. US Treasury yields அளவீடுகள் அதிகமாக இருப்பது நாட்டின் பொருளாதாரம் மற்றும் வளர்ச்சி வாய்ப்புகளைக் குறிப்பதாக இருக்கும் காரணத்தால் தங்கம் விலை பெரிய அளவில் குறைந்துள்ளது.
பிட்காயின் எதிரொலி
உலகளவில் தற்போது தங்கத்திற்கு இணையாகவும், தங்கத்தை விடவும் அதிக லாபத்தை அளிக்கக் கூடியதாக இருக்கும் பிட்காயின் மற்றும் கிரிப்டோகரன்சி சந்தையில் முதலீட்டாளர்கள் மிகவும் ஆர்வமாக இருக்கும் காரணத்தாலும் தங்கம் மீது முதலீடுகள் குறைந்து வருகிறது. இதன் எதிரொலியாகப் பிட்காயின் விலை 58,000 டாலரைத் தாண்டியுள்ளது.
வட்டி விகிதம் மற்றும் நாணய கொள்கை
இந்த வருடம் உலகம் முழுவதும் நிலவும் குறைவான வட்டி விகிதம், மிகவும் தளர்வான நாணய கொள்கை ஆகியவற்றின் காரணமாகத் தங்கம் முதலீட்டுச் சந்தையில் தொடர்ந்த மந்தநிலை நிலவும் என முதலீட்டுச் சந்தை ஆய்வாளர்கள் கூறுகின்றனர். இதனால் தங்கம் விலை தொடர்ந்து சரிவு பாதையில் உள்ளது.
More From GoodReturns

தங்கம் விலை 7 மடங்கு! வெள்ளி விலை 2.5 மடங்கு அதிகரிக்க வாய்ப்பு! ராபர்ட் கியோசாகி அதிரடி கணிப்பு!

தங்கம், வெள்ளி விலை: கண்ணு வச்சிட்டாங்கப்பா..!! திடீர் டிவிஸ்ட் நடக்குது..!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன்: படிச்சு படிச்சு சொன்னேன்.. யாரும் கேட்ல 'Big Drop'.. வெள்ளி அதோ கதி..!!

தங்கம் விற்கிற விலைக்கு 20 புது ஷோரூம் திறக்கும் மலபார் கோல்ட்.. தமிழ்நாட்டில் மொத்தம் 2..!!

கோவையில் இன்று தங்கம் விலை நிலவரம் என்ன? மக்கள் இன்று தங்கம் வாங்கலாமா?

நகை பிரியர்களுக்கு குட் நியூஸ்! தங்கம், வெள்ளி விலை குறித்து முக்கிய அப்டேட்? இன்றைய நிலவரம் என்ன?

தங்கம் விலை 7 வது நாளாக வீழ்ச்சி:அடுத்த இலக்கு ரூ.1 லட்சமா அல்லது இன்னும் குறையுமா?

கோயம்புத்தூர் தங்கம் விலை இன்று: பெரும் சரிவு! நகைப்பிரியர்களுக்கு அரிய வாய்ப்பு |

Gold & Silver Rate LIVE: தங்கம் விலையில் திடீர் டிவிஸ்ட்.. போனா வராது பொழுது போனால் கிடைக்காது..!

ஈரான் போருக்கு மத்தியில் தங்கத்தை மறந்த இந்தியர்கள்..!! 15 நாட்கள்ல எல்லாமே மாறிடுச்சு..!!

வீட்டில் 100 கிராமுக்கு மேல் தங்கமா? உஷார்! வருமான வரித்துறை நோட்டீஸ் வரலாம்!



Click it and Unblock the Notifications