தங்கம், வெள்ளி வாங்குனவங்களுக்கு பிரச்சினை இல்ல.. ஆனா மத்தவங்க..?? – ராபர்ட் கியோசாகி எச்சரிக்கை..!!

பணக்கார தந்தை ஏழை தந்தை (Rich dad Poor dad) புத்தகத்தின் ஆசிரியர் ராபர்ட் கியோசாகி உலகளவில் புகழ்பெற்றவர். 2008ஆம் ஆண்டு அமெரிக்க பொருளாதார நெருக்கடியை முன்கூட்டியே கணித்தவர். இதனால் உலக பொருளாதாரம் குறித்து அவர் வெளியிடும் கணிப்புகள் அனைத்துமே கவனம் பெறும். அந்த வகையில் அவர் தற்போது முக்கியமான ஒரு எச்சரிக்கையை வெளியிட்டுள்ளார்.

தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள ராபர்ட் கியோசாகி பங்குச்சந்தைகள் வீழ்ச்சி அடையும் என்றும் பாரம்பரிய முதலீட்டு முறைகள் தோல்வி அடையும் என்றும் கூறியுள்ளார். இதனால் அமெரிக்காவை சேர்ந்த 'பேபி பூமர்கள்' (Baby Boomers - இரண்டாம் உலகப் போருக்குப் பின் பிறந்த தலைமுறை) தங்களின் ஒட்டுமொத்த ஓய்வூதிய சேமிப்பையும் இழக்க நேரிடும் என கியோசகி எச்சரித்துள்ளார். லட்சக்கணக்கான முதியவர்கள் வீடுகளை இழந்து வீதிக்கு வரும் அபாயம் உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

தங்கம், வெள்ளி வாங்குனவங்களுக்கு பிரச்சினை இல்ல.. ஆனா மத்தவங்க..?? – ராபர்ட் கியோசாகி எச்சரிக்கை..!!

பெரும்பாலான அமெரிக்கர்கள் ஓய்வூதிய திட்டமிடலில் கணிசமான பகுதியை பத்திரங்களிலும் பங்குகளிலும் முதலீடு செய்கின்றனர், ஆனால் விரைவில் இந்த இரண்டுமே வீழ்ச்சி அடைய போகிறது என கூறுகிறார். உலகம் முழுவதும் உள்ள மத்திய வங்கிகள் தங்களின் கையிருப்பில் இருக்கும் அமெரிக்க பத்திரங்களை விற்றுவிட்டு, டன் கணக்கில் தங்கத்தை குவித்து வருவதாக கியோசாகி சுட்டிக்காட்டுகிறார்.

அதாவது பெரும்பாலான நாடுகள் அமெரிக்க டாலரை குறைத்து கொண்டு தங்கத்தின் அளவை அதிகப்படுத்தி வருகின்றன. இதனால் எதிர்காலத்தில் டாலர் மற்றும் பத்திரங்களின் மதிப்பு கணிசமாக குறையும் என்கிறார். பாரம்பரியமான முதலீடுகள் மீதான நம்பிக்கை குறைந்து வருவதையும், அரசாங்கங்கள் வெளியிடும் கடன்பத்திரங்கள் மீதான நம்பகத்தன்மை குறைந்துள்ளதையும் இது காட்டுகிறது என குறிப்பிட்டுள்ளார்.

Also Read

வெறும் காகித பணத்தை நம்பி இருப்பவர்கள் மிகப்பெரிய ஆபத்தில் உள்ளனர் என எச்சரிக்கும் கியோசாகி, உண்மையான சொத்துகளில் முதலீடு செய்யுமாறு தொடர்ந்து அறிவுறுத்துகிறார். கியோசாகி பல ஆண்டுகளாக தங்கம், வெள்ளி மற்றும் பிட்காயின் ஆகிய முதலீடுகள் தான் நீடித்து நிலைத்திருக்கும் நம்மை பாதுகாக்கும் எனவே அதில் முதலீடு செய்யுங்கள் என கூறி வருகிறார். அதை தான் அவர் இந்த பதிவிலும் குறிப்பிட்டுள்ளார்.

அதே போல வாடகை வருமானம் போன்ற வருவாய் ஆதாரங்களை பெருக்குவதில் கவனம் செலுத்தும்படி கூறுகிறார். வரவிருக்கும் காலம் பொருளாதார ரீதியில் மிகவும் கடினமானதாக இருக்கும் என்றும், எத்தகைய சூழ்நிலையையும் எதிர்கொள்ளத் தயாராக இல்லாதவர்கள் பெரும் சிரமங்களை சந்திப்பார்கள் என்றும் கியோசகி எச்சரித்துள்ளார். தங்கம், வெள்ளி, பிட்காயின்களில் முதலீடு செய்தவர்கள் இதில் தப்புவார்கள் மற்றவர்கள் வீடற்றவர்களாக மாறுவார்கள் என கூறியுள்ளார்.

Recommended For You

சரியான முறையில் திட்டமிட்டு உண்மையான சொத்துகளில் (தங்கம், வெள்ளி, பிட்காயின்) முதலீடு செய்பவர்களுக்கு இது ஒரு பொன்னான வாய்ப்பாக அமையும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். தங்கம், வெள்ளியே கூட அவர் காகித வடிவில் வாங்காமல் Physical வடிவில் அதாவது நாணயம், கட்டி போன்ற வடிவில் வாங்கி வைக்கும் படி தொடர்ந்து கூறி வருகிறார்.

Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Goodreturns.in அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் "நாங்கள்" என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+