உலகளவில் தங்கம், வெள்ளி விலை நிலவரம் குறித்து தான் அனைவருமே பேசுகின்றனர். மேற்கொண்டு விலை உயருமா, விலை குறையுமா என்பது தான் முதலீட்டாளர்களுக்கும் பொதுமக்களுக்கும் இருக்க கூடிய குழப்பம்.
உலக முதலீட்டு நிபுணரும் Rich Dad Poor Dad புத்தகத்தின் எழுத்தாளருமான ராபர்ட் கியோசாகி தொடர்ந்து தன்னுடைய ஃபாலோவர்களுக்கு முதலீட்டு ஆலோசனைகளை வழங்கி வருகிறார். குறிப்பாக தங்கம், வெள்ளி வாங்குவது தொடர்பாக முக்கிய குறிப்புகளை அவ்வப்போது வெளியிட்ட வண்ணம் இருக்கிறார். கடந்த ஜனவரி 29ஆம் தேதி வரலாற்று உச்சம் தொட்ட தங்கம் கடந்த வாரம் முழுவதுமே நாள் ஏறுவது ஒருநாள் இறங்குவது என ஏற்ற இறக்கத்துடன் தான் காணப்படுகிறது.

ஆரம்பம் முதலே மக்கள் தங்கள் கைவசம் இருக்கும் பணத்திற்கு தங்கத்தையும் வெள்ளியையும் வாங்கி வையுங்கள் அதுவும் பேப்பர் முதலீடாக அது இருக்கக்கூடாது உண்மையான தங்க உலோகத்தையே வாங்கி வையுங்கள் என தொடர்ச்சியாக கூறி வருபவர். இந்த நிலையில் தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் வெள்ளிக்கிழமை அன்று அவர் புதிதாக ஒரு பதிவினை வெளியிட்டு இருக்கிறார்.
அதில் என் கைவசம் இருந்த பிட்காயின் மற்றும் தங்கத்தில் ஒரு குறிப்பிட்ட பகுதியை நான் விற்பனை செய்து பணமாக வைத்திருக்கிறேன். இப்போது என் கைவசம் பணம் இருக்கிறது. நான் தங்கமும், வெள்ளியும் குறிப்பிட்ட விலைக்கு வரும்போது மீண்டும் வாங்குவேன் என கூறியிருக்கிறார். நாம் வாங்கக்கூடிய முதலீடு நமக்கு லாபம் தருமா இல்லையா எவ்வளவு லாபம் தரப்போகிறது என்பது நாம் எப்போது வாங்குகிறோம் என்பதை பொறுத்துதான் முடிவு செய்யப்படுகிறது தவிர எப்போது விற்பனை செய்கிறோம் என்பதை பொறுத்து முடிவு செய்யப்படுவது கிடையாது எனக் கூறியிருக்கிறார்.
அதாவது சரியான நேரத்தில் சரியான விலைக்கு ஒரு பொருளை வாங்கும்போதே நமக்கு எவ்வளவு லாபம் கிடைக்கும் என்பது முடிவாகிவிடும் என கூறுகிறார். நான் மீண்டும் எப்போது தங்கமும், வெள்ளியும் வாங்கப் போகிறேன் என்பதை எக்ஸ் பக்கத்தில் தொடர்ந்து பதிவிடுகிறேன் என கூறும் அவர் தங்கம் விலை 4000 டாலருக்கு வரும்போதும் வெள்ளி விலை 74 டாலருக்கு வரும் போதும் நான் மீண்டும் அவற்றை அதிகமாக வாங்குவேன் என கூறியிருக்கிறார். என்னிடம் தற்போது எத்தீரியம் கிரிப்டோ கரன்சியும் போதுமான அளவு இருக்கிறது கூடுதலாக அதையும் வாங்க போகிறேன் என அவர் தெரிவித்திருக்கிறார்.
மோசமான காலங்கள் வர இருக்கின்றன எனவே உங்களுடைய பணத்தை வெறும் டாலராகவே வைத்திருக்காதீர்கள் என்றும் அவர் சுட்டிக் காட்டி இருக்கிறா. உலக சந்தையில் இன்றைய தினம் ஸ்பாட் கோல்டு ஒரு அவுன்ஸ் விலை 4961 டாலர்களுக்கு விற்பனை செய்யப்படுகிறது. 4000 டாலர் என்ற மதிப்பை எட்டும் போது தங்கம் வாங்குவேன் என்கிறார் கியோசாகி. அப்படி என்றால் 20% சரிவு. அப்படி பார்க்கும்போது இந்திய சந்தையில் இன்று 24 கேரட் தங்கம் ஒரு கிராம் 15,731 ரூபாய்க்கு விற்பனையாகிறது. இதில் 20% சரிவு என்றால் ஒரு கிராமின் விலை 12,585 ரூபாயாக இருக்கும்.
22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை ஒரு கிராம் 14,420 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. இதில் 20% சரிவு என்றால் 11,536 ரூபாய். அப்படி பார்த்தால் ஒரு சவரன் விலை 92,000 ரூபாய் என வருகிறது. ராபர்ட் கியோசாகி கூற்றுப்படி தங்கம் விலை 20% சரியும் என்றால் ஒரு சவரன் விலை 1 லட்சம் ரூபாய்க்கு கீழ் சென்று 92,000 ரூபாயை எட்டும். கியோசாகி கூற்று உண்மையாக வேண்டும் என்பதே சாமானிய மக்களின் பலத்த எதிர்பார்ப்பு.
Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Goodreturns.in அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் "நாங்கள்" என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.
More From GoodReturns

கோயம்புத்தூரில் இன்று தங்கம் விலை உயர்வு.. ஈரான் போருக்கு மத்தியில் மாட்டிக்கொண்ட தங்க நகை சந்தை..!

தங்கம் விலை: மதுரையில் அதிரடி சரிவு! மார்ச் 23, 2026 நிலவரம் மற்றும் எதிர்கால கணிப்புகள் வெளியானது

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

தங்கம் விலை இன்று கோயம்புத்தூரில் அதிரடி ஏற்றம்..! நகைப்பிரியர்களுக்கு ஷாக்..!

தங்கம் - வெள்ளி விலையில் கனவிலும் நினைக்காத விஷயம் நடத்திருக்கு.. 23 நாளில் நடந்த மெகா மேஜிக்..!!

தங்கம், வெள்ளி விலை : வரும் நாட்களிலும் விலை சரியுமா? முதலீட்டாளர்கள் என்ன செய்யலாம்?

அலர்ட்.. தங்கம் ரூ.7300,வெள்ளி ரூ.15000 சரிவு.. Big drop.. சொல்லி வைச்ச மாதிரியே நடக்குதே..!

பட்டென சரிந்த தங்கம் விலை.. சட்டென நகை கடைக்கு கிளம்புங்க.. ஆனா ஒரு விஷயம்..!!

கோவையில் இன்று தங்கம் விலை நிலவரம் என்ன? மக்கள் இன்று தங்கம் வாங்கலாமா?

தங்கம் விலை: 24 மணி நேரத்தில் 4 முறை மாறிய விலை!! ஈரான் போரால் நடக்கும் அக்கப்போர்!!



Click it and Unblock the Notifications