தங்கமா அல்லது EPF-ஆ? ரூ.1 லட்சம் முதலீட்டுக்கு எதில் அதிக லாபம்? உங்க பணத்தை எங்கு போட்டால் டபுள் ஆகும்?

இந்திய முதலீட்டாளர்கள் ஆரம்பத்திலிருந்தே ஒரு சில முதலீட்டு திட்டங்களுக்கு முன்னுரிமை கொடுத்து வருகின்றனர். அந்த வகையில் தங்கம் மற்றும் ஊழியர் வருங்கால வைப்பு நிதி ஆகிய இரண்டும் பெரும்பாலானோர் தேர்ந்தெடுக்கும் மிக முக்கியமான திட்டங்கள். எனவே இந்தப் பதிவில் இவ்விரு திட்டங்களையும் ஒப்பிட்டு பார்த்து ரூ.1 லட்சம் முதலீட்டுக்கு எதில் அதிக லாபம் கிடைக்கும் என்பதைப் பார்ப்போம்.

தங்கம் ஏன் இன்றளவும் முதலீட்டாளர்களின் விருப்பத் தேர்வாக இருக்கிறது தெரியுமா? தலைமுறை தலைமுறையாக இந்தியக் குடும்பங்களில் தங்கத்திற்கென தனி இடம் இருக்கத்தான் செய்கிறது. கலாச்சாரத்தை எல்லாம் தாண்டி ஏதேனும் நெருக்கடி ஏற்படும் போது உடனே மக்கள் தங்கத்தை வைத்துவிட்டு பணம் பெறுகின்றனர். புவிசார் அரசியல் பதற்றங்கள், பங்குச் சந்தை ஏற்ற இறக்கங்கள் போன்ற இக்கட்டான சூழ்நிலையிலும் முதலீட்டாளர்களின் விருப்பத் தேர்வாக தங்கம் இருக்கிறது. ஆனால் தங்கத்தினால் நமக்கு வட்டி வருமானவோ அல்லது பங்குகளில் கிடைப்பது போல டிவிடெண்ட்டோ கிடைக்காது என்றாலும்.. விலை உயர்வு மட்டும் இருந்து கொண்டே வருகிறது. கடந்த 15 ஆண்டுகளில் தங்கத்தின் விலை கிடு கிடுவென அதிகரித்து முதலீட்டாளர்களுக்கு சிறந்த வருமானத்தை வழங்கியுள்ளது.

EPF: ஊழியர் வருங்கால வைப்பு நிதி என்பது ஒரு முதலீட்டு திட்டம். அதாவது தங்கத்தை நாம் பிஸிக்கல் ஆக வைத்திருக்க முடியும். ஆனால் இது முழுக்க முழுக்க அரசால் நிர்வகிக்கப்படும் ஒரு திட்டம். ஒவ்வொரு மாதமும் ஊழியரும், அவர்கள் பணிபுரியும் நிறுவனமும் பங்களிப்புச் செய்ய வேண்டும். இந்த தொகைக்கு அரசு நிர்ணயிக்கும் வட்டி விகிதம் வழங்கப்படும். இந்த திட்டத்திற்கு கூட்டு வட்டியின் மூலம் வருமானம் வழங்கப்படுகிறது. எனவே உங்களுடைய வருமானம் வெகு விரைவாக அதிகரிக்கும். ஆனால் சந்தை சார்ந்த மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களைப் போல குறுகிய காலத்தில் அவ்வளவு லாபம் இருக்காது என்றாலும் வரி சலுகைகளுடன் ஓய்வூதிய நிதியை இதன் மூலம் உருவாக்க முடியும்.

தங்கமா அல்லது EPF-ஆ? ரூ.1 லட்சம் முதலீட்டுக்கு எதில் அதிக லாபம்? பணத்தை எங்கு போட்டால் டபுள் ஆகும்?

15 ஆண்டு முதலீடு: தங்கம் மற்றும் இபிஎஃப் ஆகிய இரண்டும் 15 ஆண்டுகளில் எவ்வளவு லாபத்தை பெற்று தரும் என்பதை ஒரு உதாரணத்தோடு பார்ப்போம்.

தங்கம் Vs EPF: 15 வருடங்களுக்கு முன்பு யாராவது தங்கத்தில் ரூ.1 லட்சம் முதலீடு செய்திருந்தால்.. அது தோராயமாக ரூ.5.62 லட்சமாக மாறி இருக்கும். இதில் லாபம் மட்டும் ரூ.4.62 லட்சம். மறுபுறம் இபிஎஃப் திட்டத்தில் ரூ . 1 லட்சம் முதலீடு செய்திருந்தால் 15 ஆண்டுகள் கழித்து தோராயமாக ரூ.2.40 லட்சம் கிடைத்திருக்கும். இதன் விளைவாக மொத்தம் ரூ.3.40 லட்சம் பெற்றிருப்பீர்கள்.

கடந்த 15 ஆண்டுகளில் தங்கம், PF திட்டத்தை விட அதிக லாபத்தை வழங்கி இருக்கிறது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆனால் வருமானத்தை வைத்து மட்டும் நிதி முடிவுகளை எடுக்கக் கூடாது. தங்கத்தின் வளர்ச்சி என்பது சுழற்சி முறையில் இருக்கும். சில ஆண்டுகள் வேகமாக உயரும். சில ஆண்டுகள் பெரிய மாற்றம் இல்லாமல் இருக்கும். சில நேரங்களில் தேக்க நிலையிலும் இருக்கும் .எனவே இதன் வளர்ச்சி என்பது உலக பொருளாதார மற்றும் முதலீட்டாளர்களின் மனோநிலையை பொறுத்தது. மறுபுறம் இபிஎப் சந்தை ஏற்ற இறக்கங்கள் இல்லாமல் பாதுகாப்பான அரசு வருமானத்தை வழங்கக்கூடிய திட்டம். எனவே முதலீட்டாளர்கள் ரிஸ்க் எடுக்கும் திறன், தங்களுடைய எதிர்கால இலக்கு ஆகியவற்றை பொறுத்து இரண்டிலும் பிரித்து முதலீடு செய்வதே புத்திசாலித்தனமான அணுகுமுறையாக இருக்கும் என்கின்றனர் நிதி வல்லுனர்கள்.

இதுதான் சிறந்த முதலீடு.. இல்லை இல்லை இதுதான் சிறந்த முதலீடு.. அன்று எதையும் நாம் கூறி விட முடியாது. ஒவ்வொரு திட்டத்திலும் அதற்கென தனி நன்மை மற்றும் தீமை இருக்கத்தான் செய்யும். எனவே முதலீட்டாளகள் தங்களுடைய நிதி நலனை பொறுத்தே தேர்வு செய்ய வேண்டும். கடந்த கால பெர்ஃபார்மன்ஸை வைத்து இனி வரவிருக்கும் நாட்களிலும் முதலீட்டு முதலீட்டு திட்டங்கள் அதேபோல செயல்படும் என்று கூறி விட முடியாது. எந்த ஒரு முதலீட்டு முடிவு எடுக்க நினைத்தாலும் உங்களுடைய நிதி ஆலோசகரை அணுகி.. ஆலோசனை பெற்று சுய விருப்பத்தின் பேரில் தொடங்குங்கள்! இந்த பதிவு வெறும் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே என்பதை நினைவில் கொள்ளுங்கள்!

Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Goodreturns.in அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் "நாங்கள்" என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+