தற்போது நம்முடைய பணத்தை முதலீடு செய்வதற்கான வாய்ப்புகள் பல்கி பெருகிவிட்டன .நாம் வீட்டில் அமர்ந்தபடி நம்முடைய செல்போன் வாயிலாக ஒரு கிளிக்கிலேயே பணத்தை முதலீடு செய்துவிட முடிகிறது. அது தங்கமாக இருந்தாலும் சரி பங்குகளில் முதலீடு செய்வதாக இருந்தாலும் சரி.
இப்படி முதலீடு செய்யும் போது அது சரியான முதலீடாக இருக்கிறதா என்பதை புரிந்து கொண்டு முடிவை எடுப்பது அவசியம். நம் பணத்தை லம்ப் சம் முறையில் மியூச்சுவல் ஃபண்டு , தங்கம் மற்றும் ஃபிக்சட் டெபாசிட் ஆகிய மூன்றிலும் முதலீடு செய்தால் எவ்வளவு பணம் திரும்ப கிடைக்கும் என்பதை ஒப்பிட்டு பார்க்கலாம் .

4 லட்சம் ரூபாய் பணத்தை 10 ஆண்டுகளுக்கு நாம் முதலீடு செய்வதாக வைத்து கொள்வோம். அந்த வகையில் அடுத்த 10 ஆண்டுகளுக்கு இந்த பணம் உங்களுக்கு தேவைப்படவில்லை. எனவே ஒரே முறை முதலீடாக மியூச்சுவல் ஃபண்ட் அல்லது தங்கம் அல்லது ஃபிக்சட் டெபாசிட் ஆகியவற்றில் முதலீடு செய்கிறீர்கள் என வைத்துக்கொள்வோம். பத்து ஆண்டு முடியும் போது உங்களுக்கு எவ்வளவு பணம் கிடைத்திருக்கும் என்பதை தற்போது பார்க்கலாம்.
ஆண்டுக்கு 12 சதவீதம் என வளர்ச்சி அடையக்கூடிய ஒரு ல் மியூச்சுவல் ஃபண்டு திட்டத்தில் நீங்கள் முதலீடு செய்கிறீர்கள் என வைத்துக் கொள்வோம். அப்படி பார்க்கும்போது 10 ஆண்டுகளுக்குப் பிறகு உங்களை 4 லட்சம் ரூபாய் 12.42 லட்சம் ரூபாயாக வளர்ந்திருக்கும். அதாவது நீங்கள் செய்த முதலீடு கூடுதலாக உங்களுக்கு 8.42 லட்சம் ரூபாயை பெற்று தந்திருக்கும்.
இதே பணத்தை தங்கத்தில் முதலீடு செய்தீர்கள் என வைத்துக் கொண்டால். தங்கம் இந்த ஆண்டில் தான் 50 சதவீதத்திற்கும் மேல் உயர்ந்திருக்கிறது . எல்லா ஆண்டுகளிலும் அப்படி கிடையாது. எனவே சராசரியாக ஒரு ஆண்டுக்கு தங்கம் 10 சதவீதம் என்ற அளவில் வளர்ச்சி அடைகிறது என வைத்துக்கொண்டால் உங்களுடைய 4 லட்சம் ரூபாய் பணம் 10.37 லட்சம் ரூபாயாக உயர்ந்திருக்கும். அதாவது அந்த நான்கு லட்சம் ரூபாய் உங்களுக்கு கூடுதலாக 6 .37 லட்சம் ரூபாயை சம்பாதித்து தந்து இருக்கும் .
இதுவே ஃபிக்சட் டெபாசிட் திட்டங்களில் முதலீடு செய்தால் ஆண்டுக்கு 8 சதவீத வட்டி கிடைக்கிறது எனும்போது 4 லட்சம் ரூபாய் பத்து ஆண்டுகளில் உங்களுக்கு கூடுதலாக 4.83 லட்சம் ரூபாயை பெற்று தந்திருக்கும். உங்களுக்கு மொத்தமாக 10 ஆண்டு முடியும்போது 8. 83 லட்சம் ரூபாயாக திரும்ப கிடைக்கும்.
இந்த மூன்று முதலீடுகளையும் பார்க்கும் போது 10 ஆண்டுகால அளவில் மியூச்சுவல் ஃபண்டுகள் அதிக லாபத்தை தந்திருக்கின்றன. தங்கத்தின் விலை என்பது ஆண்டுதோறும் உயரும் என்பதை மறுப்பதற்கு இல்லை . ஆனால் புவிசார் பதட்டங்கள், உலக பொருளாதார சூழல் உள்ளிட்ட பல்வேறு காரணிகள் தங்கத்தின் விலை உயர்வில் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன.
எல்லா ஆண்டிலும் தங்கம் விலை பல மடங்கு உயரும் என கூற முடியாது. ஒரு ஆண்டு பல மடங்கு அதிகரிக்கும் அடுத்த ஆண்டு ஒரு கணிசமானஅளவு வளர்ச்சி இருக்கும் . எனவே இந்த 2025 போலவே அடுத்த பத்து ஆண்டுகளுக்கும் தங்கம் இதே அளவுக்கு வளரும் என நம்மால் கூற முடியாது. அதே வேலையில் மியூச்சுவல் ஃபண்டு திட்டங்கள் ஒரு சீரான நிலையான வளர்ச்சி நமக்கு தருகின்றன .
Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Goodreturns.in அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் "நாங்கள்" என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.
More From GoodReturns

வாரத்தின் முதல் நாளே தங்கம் தந்த சர்ப்ரைஸ்!! வீட்டில் விசேஷம் வச்சிருக்கவங்களுக்கு கொண்டாட்டம்!!

தங்கம், வெள்ளி விலை: ஈரான் போருக்கு பின்னர் நடந்த தலைகீழ் மாற்றம்!! இனி விலை என்ன ஆகும்?

தங்கம் விலை 7 மடங்கு! வெள்ளி விலை 2.5 மடங்கு அதிகரிக்க வாய்ப்பு! ராபர்ட் கியோசாகி அதிரடி கணிப்பு!

அது மட்டும் நடந்தால் தங்கம், வெள்ளி, நிஃப்டி என்னவாகுமோ? ஈரான் போர் மத்தியில் நிபுணர்கள் எச்சரிக்கை?

தங்கம் விற்கிற விலைக்கு 20 புது ஷோரூம் திறக்கும் மலபார் கோல்ட்.. தமிழ்நாட்டில் மொத்தம் 2..!!

கோயம்புத்தூர் தங்கம் விலை: தடாலடியாக சரிவு, முதலீட்டு செய்ய நல்ல வாய்ப்பு.. ஆனாலும் பொறுமையாக இருங்க..!!

தங்கத்தில் முதலீடு செய்ய கரெக்டான டைம்.. இதை மட்டும் பாலோ பண்ணுங்க போதும்.. பண மழை கொட்டும்..!!

மதுரை மக்களுக்கு குட்நியூஸ்.. தங்கம் விலையில் தடாலடி சரிவு.. தங்க நகை வாங்கும் முன் உஷார்..!!

நகை பிரியர்களுக்கு குட் நியூஸ்! தங்கம், வெள்ளி விலை குறித்து முக்கிய அப்டேட்? இன்றைய நிலவரம் என்ன?

கோயம்புத்தூர் தங்கம் விலை இன்று: பெரும் சரிவு! நகைப்பிரியர்களுக்கு அரிய வாய்ப்பு |

தங்கம் விலை இன்று மதுரையில் கணிசமாகக் குறைந்தது: நகைப்பிரியர்கள் மகிழ்ச்சி! |



Click it and Unblock the Notifications