மும்பை: விழாக்கால பருவம் என்றாலே தள்ளுபடிகள், சலுகைகள் ஆரம்பித்து விடும். வங்கிகளும் தங்கள் பங்குக்கு பல சலுகைகளை வாரி வழங்குவார்கள்.
அந்த வகையில் எஸ்பிஐ, ஹெச்டிஎஃப்சி பல்வேறு சலுகைகள் வாரி வழங்கியுள்ளன. இதன் மூலம் வட்டி விகிதம் 8.40% ல் ஆரம்பிக்கிறது.
ஆக இந்த விழாக்கால பருவத்தில் மக்கள் குறைந்த வட்டியில் கடன் வாங்க இது பயனுள்ளதாக இருக்கும் எனலாம்.
எஸ்பிஐ-ன் சலுகை
எஸ்பிஐ மற்றொரு அறிக்கையில், ஹோம் லோன் வணிகத்தின் மதிப்பு 6 லட்சம் கோடி ரூபாயினை எட்டிய முதல் வங்கியாகும். இந்த முன்னணி வங்கியானது தற்போது இந்த விழாக்கால பருவத்தில் வட்டி விகிதத்தில் 25 அடிப்படை புள்ளிகள் தள்ளுபடியினை வழங்கியுள்ளது. இதன் மூலம் புதிய வாடிக்கையாளர்கள் 8.40%ல் இருந்து வீட்டுக் கடனை பெறலாம்.
ஹெச்டிஎஃப்சியின் சலுகை
எஸ்பிஐ வங்கியின் இந்த சூப்பர் சலுகையானது ஜனவரி 31, 2022 வரையில் அமலில் இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
இதே மற்றொரு ஹவுஸிங் லோன் நிதி நிறுவனமான ஹெச்டிஎஃப்சி, அதன் வாடிக்கையாளர்களுக்கு எஸ்பிஐக்கு இணையாக 20 அடிப்படை புள்ளிகள் தள்ளுபடியினை வழங்கியுள்ளது. இதன் மூலம் 8.40%ல் இருந்து வட்டி விகிதம் ஆரம்பமாகிறது.
எப்போது வரையில்?
எனினும் ஹெச்டிஎஃப்சி-யில் வழங்கப்படும் சலுகையானது நவம்பர் 30 வரையில் மட்டுமே கிடைக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த சலுகையினை பெற 750-க்கு மேல் சிபில் ஸ்கோர் உள்ள வாடிக்கையாளர்களே பலன் பெறுவர்.
இதே ஹெச்டிஎஃப்சி உடன் ஒப்பிடும்போது, எஸ்பிஐயில் ஜனவரி 31, 2023 வரையில் இந்த சலுகை கிடைக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
நிபந்தனை என்ன?
மேற்கண்ட வங்கியும், நிதி நிறுவனமும் ரிசர்வ் வங்கியின் வட்டி அதிகரிப்புக்கு பின்னர் 50 அடிப்படை புள்ளிகள் வட்டி விகிதத்தினை அதிகரித்தன. இந்த காலகட்டத்தில் இப்படியொரு சலுகையினை அளித்திருப்பது மிக நல்ல விஷயமாக பார்க்கப்படுகிறது. மேற்கண்ட சலுகையினை பெற ஹெச்டிஎஃப்சி சிபில் ஸ்கோர் குறித்த நிபந்தனை விதித்திருந்தாலும், எஸ்பிஐ-யில் அப்படிப்பட்ட அறிவிப்பு எதுவும் இல்லை.
யாருக்கு எவ்வளவு சலுகை
எஸ்பிஐ அறிக்கையில் புதிய வாடிக்கையாளர்களுக்கு தற்போதுள்ள வட்டி விகிதத்தில் 0.25% குறைவாக கிடைக்கும். அதே சமயம் டாப் அப் செய்பவர்கள் 0.15% குறைவாக பெறலாம் எனவும், இதே சொத்து எதிராக கடன் பெறும் வாடிக்கையாளர்கள் 0.30% குறைவாகவும் பெறலாம் என அறிவித்துள்ளது. எனினும் செயல்பாட்டு கட்டணங்களில் எந்த வித சலுகையும் அறிவிக்கப்படவில்லை.


Click it and Unblock the Notifications