பழைய தங்க நகையை விற்க போறீங்களா? இந்த 5 விஷயங்கள முதல்ல தெரிஞ்சிக்கோங்க..!!

ஒரு சவரன் ஆபரண தங்கம் விலை கிட்டதட்ட ஓராண்டுக்கும் மேலாகவே ஒரு லட்சம் ரூபாய்க்கு மேல் தான் உள்ளது. இதனால் இந்தியர்கள் பலரும் புதிதாக நகை வாங்காமல் பழைய தங்க நகையை போட்டு புது நகைகளை வாங்குகின்றனர். இப்படி பழைய தங்க நகைகளை விற்கும் முன்பு சில விஷயங்களை கட்டாயம் கவனிக்க வேண்டும்.

தங்கம் விலை: தங்கம் விலை நம் நாட்டில் தினமும் மாற்றப்படுகிறது. எனவே பழைய நகையை விற்க புறப்படும் முன்பு தங்கம் விலையை முதலில் சரிபார்க்க வேண்டும். இதன் மூலம் உங்களுக்கு எவ்வளவு பணம் கிடைக்கும் என்பதை தோராயமாக கணக்கிட முடியும், மேலும் எவ்வளவு கிராம் தங்கம் மீண்டும் வாங்க முடியும் என்பதை கணிக்கலாம்.

பழைய தங்க நகையை விற்க போறீங்களா? இந்த 5 விஷயங்கள முதல்ல தெரிஞ்சிக்கோங்க..!!

தங்கத்தின் தூய்மை : உங்களிடம் உள்ள நகைகள் 22 கேரட் , 18 கேரட் என எந்த வகையை சேர்ந்தது என தெரிந்து கொள்ள வேண்டும். ஏனெனில் அந்தந்த தூய்மைக்கு ஏற்பவே கணக்கிட்டு உங்கள் தங்கத்தின் விலை கணக்கிடப்படும். மேலும் ஹால்மார்க் முத்திரை இருந்தால் நகைகடைகள் அந்த நகையை வாங்கவும் அதற்கு அதிக பணம் தரவும் முன் வரும்.

நகையில் உள்ள கற்கள்: நகைகளில் பதிக்கப்பட்டுள்ள கற்கள், மணிகள், அரக்கு மற்றும் எனாமல் ஆகியவற்றின் எடையை கழித்துவிட்டு, தூய தங்கத்தின் எடையை மட்டுமே கடைகள் கணக்கிடும். உங்கள் நகையின் எடை 8 கிராமாக இருந்து அதில் கற்கள் மணிகள் இருந்தால் அதனை கழித்துவிட்டு தங்கத்தை மட்டும் எடை பார்த்து தான் மதிப்பிடுவார்கள். எனவே மொத்த எடைக்கும் பணம் கிடைக்கும் என எண்ணி சென்று ஏமாந்து போகாதீர்கள்.

Also Read

கடைகளின் தந்திரம்: தங்க நகைகளை விற்கும் போது கடைக்காரர்கள் சில கட்டணங்களை கழித்து கொள்வார்கள். அதில் முக்கியமானது, நகையை உருக்குவதற்காக 2% முதல் 8% வரை பிடித்தம் செய்வார்கள், முன்கூட்டியே இதை பற்றி பேசி தெரிந்து கொள்வது நல்லது. நகையில் எவ்வளவு தங்கம் உள்ளது இவர்கள் எவ்வளவு மைனஸ் செய்கிறார்கள் என முதலில் தெரிந்து கொள்ளுங்கள்.

பல கடைகளில் ஒப்பீடு: ஒரே எடையுள்ள நகைக்கு வெவ்வேறு கடைகளில் நூறு முதல் ஆயிரக்கணக்கான ரூபாய்கள் வரை விலை வித்தியாசம் கிடைக்கலாம். எனவே, குறைந்தது மூன்று இடங்களிலாவது விலையை கேட்டு ஒப்பிட்டு பார்த்து சிறந்த லாபம் தரும் கடையை தேர்ந்தெடுக்கவும்.

Recommended For You

பழைய தங்கத்தை விற்று பணமாக கேட்டால் குறைந்த தொகையே கிடைக்கும் எனவே முடிந்த வரை அதற்கு மாற்றாக நகை வாங்க முயற்சி செய்யுங்கள். சில கடைகளில் டெபாசிட் என திட்டம் உள்ளது. அதில் உங்கள் நகையை டெபாசிட் செய்து 11 மாதம் முடிந்த உடன் அந்த தங்கத்தின் எடைக்கு நிகரான தங்க நகையை செய்கூலி சேதாரம் இல்லாமல் வாங்கலாம். எனவே இது செய்கூலி , சேதார கட்டணங்களை மிச்சப்படுத்தும். இவற்றை எல்லாம் தெரிந்து கொண்டு கடைக்கு செல்வது சிறந்தது.

Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Goodreturns.in அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் "நாங்கள்" என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+