தங்கத்தை எளிதாக விற்றுவிடலாம் என்பது பெரும்பாலானவர்களின் நம்பிக்கையாக இருக்கிறது. பல்வேறு காரணங்களுக்காக மக்கள் தங்களது பழைய தங்க நகைகளை விற்கின்றனர். புதிய நகைகளை வாங்குவது, காலேஜ் பீஸ் கட்டுவதற்கு, வீடு வாங்குவது, கார் வாங்குவது, மருத்துவ செலவு உள்பட பல காரணங்கள் உள்ளன.
ஒவ்வொரு முறை தங்கம் வாங்கும்போதும், விற்கும் போதும் அதன் பியூரிட்டி பற்றிய கேள்விகள் எழுகின்றன. புதிய நகைக்கு பதில் பழைய நகைகளை விற்பது எளிதானது. பழைய நகையின் பியூரிட்டியை அடிப்படையாக வைத்து இன்றைய விலைக்கு எடுத்துக் கொள்வது இயல்பு.

இருப்பினும் இந்த வேலை அவ்வளவு எளிதாக இருக்காது. புனேவை சேர்ந்த அர்ச்சனா மஞ்சாவ்கர் தனிஷ் ஜூவல்லரியில் தனது நகையை விற்க முயன்றபோது பெரும்பாடு பட்டுவிட்டார். தனது தாயின் ஐந்தாண்டு பழைய தங்கச் செயினை விற்பதற்காக தனிஷ்க் ஜூவல்லரிக்கு சென்றிருந்தார்.
அந்தச் செயின் வேறொரு கடையில் வாங்கியதாகும். அந்த நகையை ஒரு கேரட் மீட்டரில் வைத்து ஸ்கேன் செய்து பியூரிட்டி செக் செய்தனர். பின்னர் அதை உருக்கி மொத்த தங்கத்தையும் பரிசோதனை செய்தனர். அந்த நடைமுறைக்கு அர்ச்சனா ஒப்புக் கொண்டார்.
ஒவ்வொரு முறை அந்தத் தங்கத்தை பரிசோதித்த போதும் வெவ்வேறு மதிப்புகள் வந்தது. இதனால் அதன் குறைவான மதிப்பீட்டில் தங்கத்துக்கான விலையை கடைக்காரர்கள் நிர்ணயித்தனர். இது கேரட் மீட்டரின் நம்பகத்தன்மை மீது சந்தேகிக்க வைக்கிறது என்கிறார் அர்ச்சனா.
உண்மையில் எக்ஸ்ரே ஃப்ளூரசென்ஸ் பெக்ட்ரோ மீட்டர் எனப்படும் இந்த கேரட் மீட்டர் மூலம் தங்கத்தின் சுத்தத்தைப் பரிசோதிக்க வேண்டும் என்று எந்த அரசு நிறுவனமும் உத்தரவாதம் அளிக்கவில்லை. இதைத் தொடர்ந்து வேறொரு கடைக்கு அர்ச்சனா சென்று தனது நகையை விற்க முயன்றபோதும் அங்கும் தங்கத்தை உருக்க வேண்டும் என்றார்கள்.
தங்கத்தை உருக்குவது என்பது பல நகை வியாபாரிகளின் வழக்கமான நடைமுறையாக உள்ளது. பிரபல நிறுவனங்கள் தயாரித்த நகைகள் என்றாலும் அதற்கு பில் வைத்திருந்தாலும் நகையை உருக்கி டெஸ்ட் செய்த பின்னர் தான் அதன் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது.
அதேவேளையில் நாம் நகை வாங்கிய அதே கடையில் விற்றால் நகையை உருக்கத் தேவையில்லை. சில நகை வியாபாரிகள் நகையை உருக்கத் தேவையில்லை என்று கூறினாலும் அதன் மதிப்பில் 25 முதல் 30 சதவீதம் வரை சேதாரமாக வசூலித்து விடுகின்றனர்.
டெல்லியை சேர்ந்த நகைக்கடை அதிபர் உதித் நாரங் இது பற்றி கூறுகையில், ஹால்மார்க் செய்யப்படாத பழைய நகைகள் பல்வேறு பியூரிட்டியில் இருக்கின்றன. இதனால் கேரட் மீட்டரில் பல மதிப்புகள் வருகின்றன. அதை உருக்கினால்தான் உண்மையான பியூரிட்டி தெரிய வரும் என்கிறார்.
நகையை உருக்குவதால் அதன் எடை சற்றே குறையக்கூடும். அதில் இருந்த அழுக்கு, கலப்படங்கள், செயற்கை நிறங்கள் கொண்ட அலோகம் போன்றவற்றால் ஏற்படுகிறது. நகைகள் ஹால்மார்க் செய்யப்பட்டிருந்தால் அதை உருக்கத் தேவையில்லை. ஹால்மார்க்கில் உள்ள சீரியல் எண்ணை இணையதளத்தின் மூலம் உறுதி செய்து கொள்ளுங்கள்.
இந்திய தங்க மற்றும் நகை வியாபாரிகள் சங்க தேசிய செயலாளர் சுரேந்திர மேத்தா கூறுகையில், வாடிக்கையாளர்கள் தங்கள் நகை வாங்கிய கடைக்குச் சென்று பழைய நகைகளை விற்றால் அவர்கள் தங்கத்தின் பியூரிட்டியை செக் செய்ய மாட்டார்கள். அல்லது இரண்டு மூன்று கடைகளுக்குச் சென்று நகையை மதிப்பிட்டு யார் அதிக விலையைச் சொல்கிறார்களோ அவர்களிடம் விற்றுவிடுங்கள் என்கிறார்.
நகை தயாரிப்பில் எந்தவொரு ஸ்டாண்டர்டு முறை இல்லாததால் பெரும்பாலான கடைகள் 3 முதல் 6 சதவீதம் வரை சேதாரம் வசூலிக்கின்றன. கேரளாவை தலைமையிடமாகக் கொண்டுள்ள மலபார் கோல்டு அண்டு டைமண்டு நிறுவனம் 3 சதவீதத்தை சேதாரமாக வசூலிக்கிறது. தனிஷ்க் போன்ற நிறுவனங்கள் எந்த சேதாரத்தையும் வசூலிப்பதில்லை.


Click it and Unblock the Notifications