2023 ஆம் ஆண்டின் கடைசி வர்த்தக நாளான இன்று பங்குச்சந்தை சரிவுடன் முடிந்தாலும், இந்த ஆண்டு அதிரடியான ஆண்டாகவே அமைந்தது என்றால் மிகையில்லை. வெள்ளிக்கிழமை வர்த்த்க முடிவில் சென்செக்ஸ் 170.12 புள்ளிகள் சரிந்து 72,240.26 புள்ளிகளை தொட்டு உள்ளது, இதேபோல் நிஃப்டி குறியீடு 47.30 புள்ளிகள் சரிந்து 21,731.40 புள்ளிகளை அடைந்துள்ளது.
பங்குச்சந்தையின் கடைசி நாள் வர்த்தக நிலைமையை பாத்தாச்சு, அப்போ வருடம் முழுக்க எப்படியிருந்தது..? 2023 ஆம் ஆண்டு இந்திய பங்குச்சந்தைக்கு மிகவும் சிறப்பான ஆண்டாக இருந்தது மட்டும் அல்லாமல் குறுகிய காலத்தில் அதிகப்படியான வளர்ச்சியை பதிவு செய்துள்ளது.

மும்பை பங்குச்சந்தை தொடர் வளர்ச்சி மூலம் பல சாதனைகளை எட்டியுள்ளது. சென்செக்ஸ் குறியீடு 2023 இல் 11,399 புள்ளிகள் உயர்ந்து இன்றைய வர்த்தகம் முடிவடைந்துள்ளது. இதேபோல் நிஃப்டி குறியீடு 20% உயர்ந்துள்ளது.
பங்குச்சந்தை முதலீட்டாளர்களிக்கு ஸ்மால் கேப்கள் மற்றும் SME பங்குகளில் முதலீட்டை இரட்டிப்பாக்கும் பணியில் பிசியாக இருந்த நிலையில் புளூ சிப் பங்குகள் கணிசமான உயர்வை கொடுத்து ரீடைல் ம முதலீட்டாளர்களுக்கு பெரும் லாபத்தை கொடுத்துள்ளது.
இதன் மூலம் மும்பை பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்ட பங்குகளின் மொத்த சந்தை மூலதனம் ரூ.81.6 லட்சம் கோடி அதிகரித்து ரூ.364 லட்சம் கோடியாக உள்ளது. சந்தை மூலதன அடிப்படையில் 4 டிரில்லியன் டாலர் என்ற முக்கிய மைல்கல்லைத் இந்தியா தாண்டியுள்ளது. இதன் மூலம் விரைவில் ஹாங்காங் பங்குசந்தையை ஓரம்கட்டி உலகின் நான்காவது பெரிய பங்குச் சந்தையாக இந்தியா தயாராக உள்ளது.
இந்த வருடம் ஸ்மால்கேப் பங்குகள் தான் சூப்பர்ஸ்டார், 1000 கோடி ரூபாய் சந்தை மூலதனத்தை கொண்ட சுமார் 238 நிறுவனங்கள் சுமார் 2961 சதவீதம் வரையிலான வளர்ச்சியை பதிவு செய்துள்ளது. நிஃப்டி மிட்கேப் 50 சுமார் 50 சதவீத லாபத்தை கொடுத்துள்ளது, இதேபோல் நிஃப்டி ஸ்மால்கேப் 100 குறியீடு 55 சதவீதம் வளர்ச்சி அடைந்துள்ளது.
நிஃப்டியில் அனைத்து துறைவாரியான சந்தைகளும் 2023ல் லாபகரமான நிலையில் முடிந்துள்ளது, இதில் குறிப்பாக NIFTY PSE சுமார் 80 சதவீத லாபத்தை பதிவு செய்துள்ளது, ரியல் எஸ்டேட் குறியீடு 80 சதவீதமும், ஆட்டோமொபைல் துறை 46 சதவீதம் லாபத்தை அள்ளியுள்ளது.
More From GoodReturns

PPF-ல் ஒரு சின்ன மேஜிக்! லட்சக்கணக்கில் லாபம் பார்க்க இந்த ஒரு டிப்ஸ் போதும்!

ஆரம்பமே அட்டகாசம்: நிதியாண்டின் முதல் நாளில் பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு சர்ப்பிரைஸ்!!

தங்கம் விலை: திடீரென ரூட்டை மாற்றும் தங்கம்.. இப்போ தங்கம் வாங்குறது தான் புத்திசாலித்தனமா?

பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி!! சென்செக்ஸ் 1000 புள்ளிகளுக்கு மேல் வீழ்ச்சி!!

தங்கம், வெள்ளி விலை: வாரத்தின் முதல் நாளிலேயே குட் நியூஸ்..!! தங்கம் வாங்க சிறந்த நாள்..!!

சரிவிலேயே இருக்கும் இந்திய பங்குச்சந்தை இந்த வாரமாவது மீண்டு வருமா?

ஆசை காட்டி மோசம் செய்யும் தங்கம்..!! ஆறுதல் தந்த வெள்ளி..!! இப்போ வாங்கலாமா? வெயிட் பண்ணலாமா?

பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு கருப்பு வெள்ளி..!! ஒரே நாளில் ரூ.8 லட்சம் கோடி அவுட்..!!

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!



Click it and Unblock the Notifications